சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் உமாசங்கர் ஐஏஎஸ் அவர்களின் பேட்டி...
இது குறித்து “ப்ளாக் ஷீப்” விஜய் எழுதியிருக்கும் புரட்டு கட்டுரை குறித்து நம்முடைய கருத்து...
சவுக்குக் காடுகள் சுனாமியைத் தடுக்குமா ? இதே நபர் சில காலத்துக்கு முன்பு நாம் தேவனுக்காக வக்காலத்து வாங்கவேண்டாம், அவரை அவரே காப்பாற்றிக்கொள்ளுவார் என்றவர்...என்பது குறிப்பிடத்தக்கது.
|| கடலோரப்பகுதிகளில் இயற்கை அரணாக இறைவன் ஏற்படுத்தி வைத்திருந்த சவுக்குக் காடுகளை சுயநலத்துக்காக அழித்துவிட்டு சுனாமியால் பேரழிவை சந்தித்தது யாருடைய பிழை? பேரழிவிற்குப் பின்னர் ஒரு கூட்டம் இது பக்தியற்றவர்கள் மீதான தேவகோபாக்கினை என்றது, இன்னொரு கூட்டம் இப்படி குழந்தைகளையும் அப்பாவிகளையும் அழித்த கடவுள் இரக்கமற்றவன் என்று தூற்றியது. அந்த இரு கூட்டத்தாரும் அறிவின்றி கடவுவுளை தூற்றினார்கள் என்பதே உண்மை! ||
உமாசங்கர் ஐஏஎஸ் அவர்கள் பேசியது வரம்புமீறிய பேச்சு என்பது உண்மையாக இருப்பினும் தேவனுடைய ஆளுமையையே கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற வெண்ணெய் கட்டுரைகளும் ”புதுயுக” பாதிப்பினால் வந்த கருத்துக்க்ளே. எப்பேற்பட்ட சீர்திருத்தவாதியாக இருப்பினும் தன்னை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் பிரதிநிதியாக அடையாளம் காட்டிவிடுவான். பூனைக்குட்டி விரைவில் வெளியே வர இருக்கிறது. ’ சபைகளே தேவையில்லை, மேய்ப்பர் தேவையில்லை, காணிக்கை இல்லை, ஆவியானவரின் அபிஷேகம் என்பது குண்டலினி சக்தி தான், கிறிஸ்மஸ் பாபிலோனின் கொண்டாட்டம், புதிய வருடம் என்று ஒன்றுமில்லை, வாக்குத்தத்தம் நம்முடையதில்லை அதைப் பற்றி பேசுவது வியாபர்ரம் என்று அனைத்து கிறிஸ்தவ அடிப்படைகளையும் குழிதோண்டி புதைக்கும் புதுயுக நாயகரான இந்த ப்ளாக் ஷீப் விஜய் இங்கே இயற்கை என்று எதை சொல்லுகிறார் என்பதை கொஞ்சம் விளக்கினால் நல்லது. இயற்கை எனும் வார்த்தை பைபிளுக்கு ஏற்புடையதா, இயற்கை சீற்றம் என்பது விசுவாசிக்கு தகுமா ? இயற்கை என்பதில் ஐம்பெரும் பூதங்களையும் குறிப்பிட்டு அதனை வணங்கும் வேற்றினத்தாரின் நம்பிக்கையை நாம் ஏற்கிறோமா ? அப்படியானால் தேவகோபம் என்பது எப்படி - எப்போது வெளிப்படும் என்பதையும் இந்த ” புதுயுக நாயகர் ” விளக்கவேண்டும். எல்லோரையும் குறைகூறிவிட்டு தான் போய் எதிலோ விழுமாம், ஒரு ஜந்து அதுபோலவே இருக்கிறது, இந்த ”ப்ளாக் ஷீப்” -கட்டுரை. நாடகத்தில் வசனம் எழுத அனுப்பினால் நல்ல வருமானம் கிடைக்கும். கிறிஸ்தவத்தில் போலீஸ்காரன் வேஷம் போட்டு பிழைப்பதைவிட அது எவ்வளவோ மேல்.
கேள்வி: # சவுக்கு காடுகள், சுனாமியை தடுக்குமா ? # இயற்கை என்பது என்ன ? # இயற்கை என்பது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது ? # இயல்புக்கு மாறுபட்ட நிகழ்வுகள் தற்போது நடக்கிறதா, இல்லையா ?
பின்வரும் லிங்கிலிருந்து கட்டுரையை முழுவதும் வாசித்துவிட்டு நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறேன். இந்த கட்டுரையின் இறுதியில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கும் தகுந்த பதில் ஆயத்தமாகிறது.
முதலில் இந்த நபர் ஆரோக்கிய உபதேசத்தை உடையவரா என்று உரசிப்பார்க்கவேண்டும். பேரும் புகழும் கிடைக்குமானால் ஒரு சிலையைக் கட்டித்தழுவி ஆடிப்பாட ஆயத்தமாக இருப்பவர். ஒரு மாதத்துக்கு 40 லட்ச ரூபாய் செலவிடும் ஒரு சாதாரண லோக்கல் சானலின் ஒரு சிறிய வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக அந்த சானலின் தவறுகளைக் கண்டுங் காணாமல் இருப்பவர். இப்படிப்பட்டவர் கிறிஸ்தவத்த்தின் சீர்திருத்தவாதியாகவும் காவலாளியாகவும் மாற ஆசைப்படுகிறார். ஐயோ,பாவம் என்று சொல்லுவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.