பணத்தை அளவாக வைத்திருக்கலாம் என்றும் ஜாதியை அடியோடு ஒழிக்கவேண்டும் என்றும் இந்த புதுயுக நாய்கர் அறிவித்திருக்கிறார். விலைவாசி இருக்கும் நிலையில் நாடு போகிற போக்கில் எரிச்சலூட்டும் இதுபோன்ற கருத்துக்களாலேயே தனது ராஜ்யத்தைக் கட்ட இவர் தீர்மானித்திருக்கிறார் போல. இதைவிட ஒரு வசனத்தைப் போட்டிருக்கலாம்.
எபிரெயர் 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
ஆனால் வசனமெல்லாம் இவர்களுக்கு வேப்பங்காயாக கசக்குமே ?! ரசல், ப்ரன்ஹாம் போன்றோரின் வழியில் வந்த ஜகஜ்ஜால கில்லாடிகளான மாய்மால போதகர்களின் உபதேசத்தையே கிறிஸ்துவின் உபதேசம் என்று நினைத்துக் கொண்டிருப்போருக்கு இதுதான் வழி... இதுவே அவர்கள் பைத்தியமாகும். அடுத்து இவ்ர் ஜாதியை அடியோடு ஒழிக்கப்போகிறாராம்... இதுவா நற்செய்தியின் நோக்கம் ? உலகத்திலுள்ள பேன்களையும் கொசுக்களையும் ஒழிக்கப்போவதாக சொன்னால் கூட நம்பிவிடலாம்,ஆனால் இந்த ஜாதியை எப்ப்டி ஒழிக்கமுடியும் ? பிறகு எப்படி ஆண்டவருடைய வார்த்தை நிறைவேறும் ? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்கள் போல..!
லூக்கா 21:10 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.
இவர்கள் ஜாதியை ஒழித்து ஆண்டவருடைய வார்த்தையை அவமாக்கவே பார்க்கிறார்கள். ஓயாமல் ஜாதியைக் குறித்தே பேசிக்கொண்டிருப்பவனே ஜாதி வெறியன் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஏதோவொரு வெறி இருந்தே தீரும். இவர்கள் எப்படி திருச்சபைக்குள்ளிருந்து கொண்டே அதன் நிழலிலிருந்து இளைப்பாறிக்கொண்டே அது தேவாலயமல்ல, வெறும் க்ளப் போன்ற கட்டிடம் என்று சொல்லுகிறார்களோ அதுபோல. கிறிஸ்துவின் சபையை பாபிலோன் வேசியின் சபை என்று சொல்லிக்கொண்டே பிறகு எப்படி அதற்குள் சென்று உபதேசம் பண்ணுகிறார்களோ ? வேசிகள் கூட இதுபோல செய்யமாட்டார்கள். அதிலும் சிஎஸ்ஐ / இசிஐ / பெந்தெகொஸ்தே என்று எல்லா சபையிலும் சென்று வருவார்களாம். தெருநாய்கள் ஒரு தெருவில் - ஒரு வீட்டில் நிற்காது தானே ?! ஒரு மேய்ப்பனுக்கு - ஒரு மந்தைக்குள் கட்டுப்பட்டிருப்பதே நல்ல ஜாதி ஆடு. மற்றது கறுப்பாடு, அதாவது “ப்ளாக் ஷீப்” தன் இஷ்டத்துக்கு திரியும் காட்டுக்கழுதைகளைக் கட்டி யாரும் தீனி போட்டு வளர்க்கமாட்டார்கள் என்பதும் உண்மையே.
எரேமியா 2:24 வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.