Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ”ப்ளாக் ஷீப் ” விஜய்யிடமிருந்து ஒரு ரியாக்‌ஷன்...
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
”ப்ளாக் ஷீப் ” விஜய்யிடமிருந்து ஒரு ரியாக்‌ஷன்...
Permalink  
 


 
6 hours ago via Mobile · 
 
 

இந்த யவனஜனம் என்ற நபர் கிட்டத்தட்ட பித்துப்பிடித்த நிலைமைக்கு போய்விட்டார். இவருடன் வாதிடுவது நேரவிரயம் என்றுதான் இதுவரை தவிர்த்து வந்தேன், இவரது செயல்கள் ஒருபக்கம் வேதனையை தருகிறது இன்னொருபக்கம் இவர்மீதே ஒரு பரிதாபத்தை உண்டாக்குகிறது. இவருக்கு கிறிஸ்தவம் குறித்தோ சபை குறித்தோ அக்கறை இல்லை இவரது பிரச்சனையே வேறு. அந்தக்கால விட்டலாச்சாரிய படங்களில் வருவதுபோல முன் ஜென்ம விரோதத்தை அடுத்த பிறவியில் பழிதீர்த்து தணித்துக்கொள்வது போல காரணம் ஏதுமின்றி என்னுடன் கடந்த 3 வருடகாலாமாக இவர் ஏன் போராடிக்கொண்டிருக்கிறார் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. இவருக்கும் எனக்கும் தனிப்பட்ட விதத்தில் ஒன்றும் இல்லை, உண்மையிலேயே ஒன்றுமே இல்லை.. 

இவர் ஏன் என்னுடன் இவ்வளவு விரோதம் பாராட்டுகிறார் என்பதை கண்டறிவதில் மற்றவர்களை விட நான்தான் அதிக ஆர்வமாக இருக்கிறேன். அதை கண்டறியும்படி இவரது எல்லா பதிவுகளையும் உற்று நோக்கியதில் சில காரியங்களை கண்டுகொள்ள முடிந்தது. அவரை தொடர்ந்து படித்துவரும் மற்றவர்களும் இதை ஓரளவு யூகித்து இருப்பார்கள். 

என்ன நடந்தால் இவரது பிரச்சனை ஓய வழியிருக்கிறது என்பதை கூறுகிறேன். 

1. நான் எழுதவோ, மீடியா ஊழியம் செய்யவோ கூடாது. குறிப்பாக தமிழில் எழுதக்கூடாது. அதை நிறுத்திவிட்டால் இவரது பிரச்சனைகளெல்லாம் அடங்கிவிடும். 

2. நான் இவரை unblock செய்து எனது தளத்தை இவரது அவதூறுகளால் நாறடிக்க நான் அனுமதிக்க வேண்டும். 

3. அப்படியே நான் எழுதினாலும் அதற்கு யாரும் லைக் போடவோ, ஷேர் பண்ணவோ கூடாது. 

4. சால்வேஷன் டிவியில் நமது நிகழ்ச்சி ஒளிபரப்பாகக்கூடாது, அதில் நம்மை பேச அனுமதிக்கக் கூடாது. 

5. வாட்ச்மென் பிரதர்ஸ் குழுவை விட்டு நான் வெளியேற்றப்பட வேண்டும்.

(நான் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா, தன்னை குறித்து எண்ண வேண்டுவதற்கு மிஞ்சி எண்ணாதே என்ற வசனங்களெல்லாம் அவரது மற்றும் அவரது சில நண்பர்களது எதிர்தாக்குதலாய் இருக்கப்போகிறது என்பது வேறுவிஷயம்) ஆனால் உண்மையில் மேற்கண்ட இந்த ஐந்து காரியங்களும் அவரது அத்தனை பதிவுகளிலும் இழையோடுவதை காணமுடியும். 

மேற்கண்ட 5 காரியங்களையும் சாதிக்க அவர் என்னென்ன வழிகளை கையாளுகிறார் என்று பார்ப்போம். நான் சொல்வது சரியா என்று பார்ப்பதற்காகிலும் இவரது சில பதிவுகளையாகிலும் வாசித்துப்பாருங்கள். 

1. நான் சபை அமைப்புக்கு விரோதமானவன் என்றும் யெகோவா சாட்சி, ஒன்லி ஜீசஸ் போன்ற துர் உபதேச குழுக்களுடன் சேர்ந்து சபைகளுக்கு விரோதமாக சதி செய்கிறேன் என்று குற்றம் சாட்டுவதை விடாமல் செய்கிறார், புதுயுக உபதேசத்தை (New Age Teaching) உடையவன் என்றும் தற்போது குற்றம்சாட்ட துவங்கியுள்ளார். ஆரம்ப காலங்களில் என்னை ஏஞ்சல்டிவி சாதுவின் ஏஜண்டு என்று கூறிக்கொண்டிருந்தார். இப்படி பழிகளை போடுவதன் மூலம் எனது எழுத்து பணிகளை நிறுத்துவது இவரது நோக்கம். அது ஒருநாளும் நிறைவேறப்போவதில்லை.

2. எதிர்ப்பவர்களை பிளாக் செய்கிறேன் என்று குற்றம் சாட்டுவது, என்னை பிளாக்‌ஷீப் என்று பட்டப்பெயரிட்டு அழைப்பது. ஆரோக்கியமான விமர்ச்சகர்களை நான் ஒருபோதும் பிளாக் செய்வதில்லை. அவதூறு செய்யும் நபர்களையே பிளாக் செய்கிறேன். 

3. லைக் போடுவோரை தூற்றுவது, அவர்களுக்கு தனிப்பட்ட செய்திகளை அனுப்பி அவர்களை வசப்படுத்த முயற்சிப்பது. என்னிடம் பலர் வந்து கூறியிருக்கிறார்கள் உங்களை பற்றி யவனஜனம் என்னிடம் தனிப்பட்ட செய்திகளை அனுப்பியும் பிரைவேட் சாட்டிலும் வந்து புகார் கூறுகிறார் என்று. இதை செய்வதால் இவருக்கு என்ன தனிப்பட்ட ஆதாயம் என்பது புரியவில்லை. 

4. எங்களுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதித்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக சால்வேஷன் டிவியை கண்டபடி தூற்றுவது, ஓசியில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கிண்டல் செய்வது.

5. என்னை வாட்ச்மென் குழுவுக்கு தலைவர் என்று அடையாளப்படுத்துவதன் மூலமும் மற்ற சகோதரரை எனக்கு அடிப்பொடிகள் என்று அழைப்பதன் மூலமும் எங்களுக்குள் ஈகோ பிரச்சனையை உண்டாக்கி விடுவது (எங்களுடன் பழகி எங்கள் ஒற்றுமையை பார்த்த பிறகும் இப்படியெல்லாம் அபத்தமாக முயற்சிப்பது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது) 

6. தன்னை ஏழைப் பங்காளன் என்றும் எங்களை மேட்டுக்குடியை சேர்ந்தவர்கள் என்றும் அடையாளப்படுத்தி அதில் ஒரு அனுதாபம் தேட முயற்சிப்பது. 

மொத்தத்தில் இவரது முயற்சிகள் இவருக்கு இதுவரை பலன் கொடுக்கவில்லை என்பது இதுவரை இவரது எழுத்துக்களுக்கு கிடைத்திருக்கும் response-ஐ வைத்து தெரிந்து கொள்ளலாம். நானோ, வாட்ச்மென் குழுவோ சால்வேஷன் டிவியோ மாறப்போவதில்லை. இவர்தான் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகள் எடுத்துக்கொள்வது அவசியம். 

உண்மையில் இவர் ஆழ்ந்த வேத அறிவும் அருமையான பாடும், பிரசங்கிக்கும் திறனும் உள்ள நபர். இவரது கோர்வையான பிரசங்கங்களை நாங்கள் மிகவும் ரசித்திருக்கிறோம். ஆண்டவர் கொடுத்த தாலந்தை இவர் ஒழுங்காக பயன்படுத்தி உண்மையாய் ஊழியம் செய்வாரானால் தேவன் தாமே இவரை வல்லமையாகப் பயன்படுத்துவார். இவர் விரும்புவதும் வாஞ்சிப்பதும் அதைத்தான், ஆனால் அதை தேவன் தரும் நேர்மையான வழியில் அடைய முயற்சிக்க வேண்டும். இந்தப் பதிவை screenshot எடுத்து பதில் எழுதி எழுதி இதை வைத்தே அடுத்த ஒரு மாதத்துக்கு தூக்கத்தை கெடுத்துக் கொள்வார் என்று தெரியும். பாவம்! கர்த்தரே அவருக்கு நல்வழி காட்டவேண்டும்



-- Edited by HMV on Sunday 11th of August 2013 06:25:45 AM

__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரியானதொரு நேரத்தில் “ப்ளாக் ஷீப்” விஜய் எனும் மார்க்க விரோதியிடமிருந்து ஒரு பதில் நமக்கு கிடைத்திருக்கிறது. தனது கர்வத்தினால் நாம் கேட்கும் எந்த கேட்கும் கேள்விக்கும் விளக்கம் தராமல் பகைத்து விரோதித்து தூஷித்து தனது அடிப்பொடிகள் மூலம் சட்டவிரோதமான மிரட்டல்கள் மூலம் அடக்கி ஒடுக்கப் பார்த்த இந்த நபர் தற்போது வேறுவழியின்றி ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்க முன்வந்திருக்கிறார். இதிலும் கூட எத்தனை மாய்மாலம் இருக்கிறது என்பதை விரைவில் விளக்க இருக்கிறோம்....இப்போதைக்கு அவருடைய பதி(ல்)வு...



-- Edited by HMV on Sunday 11th of August 2013 06:21:02 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard