Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உருகாதோ நெஞ்சம் - சீர்காழி இயேசு பிரகாசம்
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
உருகாதோ நெஞ்சம் - சீர்காழி இயேசு பிரகாசம்
Permalink  
 


( ... தொகையறா ... )

தேவாலயத்தின் திரை ரெண்டாய் கிழிந்ததன்றோ
தேவன் திருமுகத்தைக் காணாமல்
கதிரவன் கண்களை மூடியதோ
காரிருள் சூழ்ந்ததோ கல்லறை வெடித்ததோ
பூமி அதிர்ந்ததோ  புவியெல்லாம் நடுங்கியதோ
உத்தமர் இயேசு துடிக்கின்றார் சிலுவையிலே
உருகாதோ நெஞ்சம்

              ( ... பல்லவி ... )

உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம் (2)
உனக்காக பலியாக வந்தார் கலங்காதோ கண்கள்
வடியாதோ கண்ணீர் கல்வாரி காட்சியைக் கண்டு

 

          ( ... சரணங்கள் ... )
                   (1)

நடமாட முடியா தடுமாறிக் கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்று
இடம்தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாட செய்ததாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
                        (2)

கரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம்
கதறிய மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி  கரம் தொட்டு தூக்கி
கருணையாய் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

                        (3)

இதயத்தில் பாவம் நிறைவானதாலே
இகமதில் அழிகின்ற ஆத்மா
பாவத்தை நீக்கி ஜீவனை மீட்க
இரட்சிப்பின் வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

                       (4)

சிந்தையில் பாவம் குடிகொண்டதாலே
சீர்கெட்ட மனிதனை மாற்ற
நிந்தையை சுமந்து விந்தையாய் மாறி
மாந்தரைக் காத்ததாலே
உந்தன் சிரசினில் முட்களோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே


உருகாதோ நெஞ்சம்.........(3)




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard