Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரு செய்தி - ஒரு கருத்து - ஒரு கட்டுரையான கதை..!
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
ஒரு செய்தி - ஒரு கருத்து - ஒரு கட்டுரையான கதை..!
Permalink  
 


25 May 2013 at 02:46

முக.ஸ்டாலின் ஒரு அமைச்சரை ஆம்பளையான்னு திட்டிவிட்டதாகக் கூறி பரபரப்பு கிளப்பினீர்கள். இதுபோன்ற மலிவான முயற்சிகளால் சத்தியம் டிவி சத்தியவானாகிறதை எங்களால் ரசிக்கமுடியவில்லை. ஒன்று கிறிஸ்துவுக்காக நில்லுங்கள். அல்லது முழுவதுமே உலகத்தில் சென்ற
ுவிடுங்கள். இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவராலும் கூடாது. மேலும் வேத வசனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் விளம்பரங்களுக்கு இடம் தராதீர்கள். இதில் ஈடுபட்டிருக்கும் ஆச்சி மசாலா நிறுவனத்தைக் கண்டிக்கிறோம்.

 

Yauwana Janam

Shakthi Nambirajan
/// சத்தியம் நடுநிலையான செய்திகளை தருவதாகவே அறிந்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை நான் கவனித்தது இல்லை. ///

உங்கள் கருத்துக்களில் முரண்பாடு இருக்கிறது. நான் சொல்லும் குற்றச்சாட்டை நீங்கள் கவனிக்காமலே எனது கருத்துக்கு ரியாக்ட் பண்ணக்கூடாது.அடுத்து எந்தவொரு செய்தி நிறுவனமும் அல்லது ஊடகமும் சார்புநிலை எடுக்காமலிருக்க இயலாது. தாங்கள் நடுநிலையானவர்கள் என்று சொல்லிக்கொள்ள எல்லோரும் விரும்புவது வழக்கமானதே.

/// பகலில் செய்திகளும், இரவில் தேவ செய்திகளும் இடம்பெறுவது அணைத்து தரப்பு மக்களின் வீடுகளையும் சென்றடைய உதவி புரியும். மேலும் காணிக்கை வேண்டுமென்று இவர்கள் கேட்பதாக தெரியவில்லை. ஆகவே, மோசடி இல்லை.///

தாராளமாக செய்யட்டும். அவர்கள் காணிக்கை கேட்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் விளம்பரத்தின்மூலம் வருமானம் வருகிறதே. ஆனால் செய்தியளிப்பவர் இலவசமாக அந்த வாய்ப்பைப் பெறவுமில்லை. அவர் காணிக்கை கேட்காமலிருக்கவும் இல்லை. அவர்கள் மோசடி செய்வதாக நான் குறிப்பிடவும் இல்லை.

/// சிறிய தவறுகளை பெரிதுபடுத்தாமல் நண்பர்களுக்கு இதை பரிந்துரைப்போமானால் ஆண்டவரின் விருப்பம் நடைபெறும் என்பது எனது தாழ்மையான கருத்து. ///

எது சிறு தவறு ? சினிமாக்காரர்களை அரவணைத்து செல்லுவதா ? ஒரு கிறிஸ்தவ சானல் எனில் கிறிஸ்துவை மாத்திரமே முன்னிலைப்படுத்தவேண்டும். கறுப்புப் பணமுதலைகளின் ஆதரவுடனும் வியாபாரிகளின் ஒத்துழைப்புடனும் கிறிஸ்துவின் ராஜ்யத்தைக் கட்டமுடியும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு நல்ல செய்தி சானலைப் பரிந்துரைக்கவேண்டுமா அல்லது ஒரு நல்ல நற்செய்தி சானலைப் பரிந்துரைக்கவேண்டுமா ? உலகமும் கிறிஸ்துவும் ஒன்றுக்கொன்று எதிரிடையானது. இவர்களோ அவற்றை இணைக்க முயற்சிக்கிறார்கள்.

/// (தவறுகள் குறித்து சத்தியம் டி.வி கே தனியாக தெரியப்படுத்தலாம். அவர்கள் கேட்காத பட்சத்தில் ஆண்டவரே பேசுவார் என காத்திருக்கலாம்) ///

இது என்னைப் போன்றவர்களுக்கு சொல்லப்படும் வழக்கமான அறிவுரை தான். ஒரு சிறு பெண்ணை ஒருத்தன் கெடுத்துவிட்டால் காதும் காதும் வைத்தாற்போல் பிரச்சினையை முடிப்பது அந்த காலம். இப்போதோ அந்த பெண்ணே வீதிக்கு வந்து நியாயம் கேட்கும் காலம். இவர்களே ரகசிய காமிரா வைத்து செய்தி சானலில் பரபரப்பு பண்ணுகிறார்களே ? என்னைக் கேட்டுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சத்திய விரோத செயலை அவர்கள் செய்யாததுபோலவே அவர்களைக் கேட்டுக்கொண்டு அவர்களைக் குறித்து நான் எழுதுவதும் கூடாதது. ஆனாலும் ஒவ்வொருவருக்கும் தனி மடல் அனுப்பி அதற்கு எந்தவித பதிலும் அசைவும் இல்லாததாலேயே இங்கே எழுதுகிறோம். ஊடகம் என்பது வலிமையானது. உலகம் என்பது கொடுமையானது. கிறிஸ்துவின் சீடர்கள அதற்கு சற்று தூரத்தில் இருப்பதே பாதுகாப்பானது. எனது இந்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஊடகத்தின் மூலம் நற்செய்தி அறிவிப்பது சந்தோஷமான விஷயம் என்றாலும் அதனை கிறிஸ்துவின் கட்டளைகளின்படி செய்யமுடியாவிட்டால் அதை செய்யாதிருப்பதே உத்தமம். ஏழை எளிய மக்களிடமிருந்து சில கோடிகளை சேகரித்து அல்லது கறுப்பை வெள்ளையாக்க அலையும் வியாபாரிகளிடமிருந்து பெற்று அதை மொத்தமாக ஒரு குறிப்பிட்ட ஊடக முதலைக்குக் கொடுத்து தனது தொலைக்காட்சியை வலம்வரவிட்டு அதன்மூலம் இயேசுவை அறிவிப்பதால் கிறிஸ்து அறிவிக்கப்பட்டாலும் கடைசி நாளில் உங்களை அறியேன் என்று அந்த ஆண்டவரே சொல்லும் நிலை ஏற்பட்டால் ? ஏற்படும்.

இயேசு என்பது சிலருக்கு பேட்டன் ரைட் கோரப்படாத பெயராகவும் இயேசுவின் வார்த்தைகள் காப்பி ரைட் கேட்கப்படாத சரக்காகவும் இருப்பதால் எல்லோரும் அவரை எடுத்து வியாபாரம் செய்கிறார்கள். இது ஒரு இண்டஸ்ட்ரி போலவே ஆகிவிட்டது. மோகன் சி லாசரஸ் இன்றைக்கு சினிமாவும் ஒரு இண்டஸ்ட்ரி தான் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக நாம் ஜெபிக்கவேண்டும் என்கிறார். மேலும் கடன்வாங்குவது தவறல்ல என்றும் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் நியாயப்படுத்தியிருக்கிறார். எப்படி சர்வாதிகாரிகள் தாங்கள் வைத்ததே சட்டம் என்று ஆணவத்துடன் செயல்படுவார்களோ அவ்வாறே இவர்களும் வேதப் பிரமாணத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கிறிஸ்தவத்தின் மடாதிபதிகள் போல நடந்துகொள்ளுகிறார்கள். ஒரு போப்பு மார்க்கத்துக்கு எதிராக சீர்திருத்த இயக்கம் துவங்கினோம். இன்றைக்கு ஓராயிரம் போப்புகளை கிறிஸ்தவத்துக்கு உருவாக்கி தந்திருக்கிறோம். வாழ்ந்திருக்கட்டும், இந்த புல்லுருவிகள், கிறிஸ்துவின் வருகை மட்டும். தூதர்கள் இவர்களையெல்லாம் ஒன்றாகக் கட்டி அக்கினியில் எறிவார்கள்.

 

  • II கொரிந்தியர் 11:2 நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.

  • II கொரிந்தியர் 11:3 ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.



தமிழக முதல்வர் ஜெயலலிதாவை யேசபேல் என்று வர்ணித்துவந்த மோகன் சி லாசரஸ் எப்போது ஏஞ்சல் டிவியுடன் கூட்டணி சேர்ந்தாரோ அன்றிலிருந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே இருக்கிறார். காரணம் அவர் ஒருசில வியாபாரிகளின் கைப்பாவையாக இருப்பதே. இப்போதெல்லாம் அவர் ”அம்மா”வை யேசபேல் என்று வர்ணிப்பதில்லை. கடந்த தேர்தலில் ஏஞ்சல் டிவி வெளிப்படையாகவே அதிமுக-வுக்கு ஆதரவாக பேசியது எல்லோருக்கும் தெரியும். அவ்வாறே சத்தியம் டிவியும் செயல்படுகிறது. தொடர்ந்து சத்தியம் செய்திகளைப் பார்ப்பவர்க்கு அது தெரியவரும். முக்கியமாக திமுக -வுக்கு எதிரான செய்திகளைப் பரப்புவதாக சொல்லப்படுகிறது. சத்தியம் டிவியின் பங்குதாரர்களில் முக்கியமானவர்கள் மோகன் சி லாசரஸ் மற்றும் ஆச்சி மசாலா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே நாம் குறிப்பிட விரும்புவது யாதெனில் ஒரு பத்திரிகையோ அல்லது செய்தி ஊடகமோ பிரபலமாவதற்காக சில பரபரப்புகளைக் கிளப்பும். அது வழக்கமானது தான். பத்திரிகையுலகில் நக்கீரன் பத்திரிகை இதற்கு நல்ல உதாரணமாகும். அதேபோல சத்தியம் டிவியும் செயல்படுகிறது என்பதே நம்முடைய வருத்தம். இதுபோன்ற எந்த முயற்சியும் இல்லாமலே மக்கள் டிவி மற்றும் புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சி சானல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை கவனிக்கவேண்டும்.


தவறுகளைக் கண்டிப்பதற்காகவே ஊடகங்கள் இருக்கிறது. அதன்படி சமுதாயத்தில் ஒரு தவறை ஒரு பத்திரிகையாளரோ அல்லது ஊடகவியலாளரோ காணுகையில் உடனுக்குடன் அதனை செய்தியாக்குகிறார். ஒரு நபர் சம்பந்தமான காரியமாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புக்கொண்டு செய்தியை உறுதிபடுத்திக்கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் பெரும்பாலும் புறக்கணிப்பே அனுபவமாக இருப்பதால் செய்தி பதிவுசெய்யப்படுகிறது. அடுத்து வெளிப்படையாக செய்யப்பட்டுவிட்ட காரியங்கள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் யாருடைய அனுமதியில்லாமலே செய்தியாக்கப்பட்டுவிடும். அதற்கு சம்பந்தப்பட்டவர்களே முன்வந்து விளக்கம் தரவேண்டியிருக்கும். உதாரணத்துக்கு முக.ஸ்டாலின் போன்றவர்களின் பேச்சுகளுக்காக அவதூறு வழக்கு போடப்படுகிறதே அது அவர்களைக் கேட்டுக்கொண்டா போடப்படுகிறது ? அல்லது அவரது பேச்சை விமர்சிக்கும் செய்தியாளர் அவரைக் கேட்டுக்கொண்டா விமர்சிக்கிறார் ? அவ்வாறே என்னைப் போன்றவர்களும் ஒரு செய்தியை அல்லது கேள்விப்படும் காரியத்தை உடனுக்குடன் எனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன். இதனை அவர்கள் அனுமதியுடனே செய்யவேண்டிய அவசியமிராது. தேவைப்பட்டால் - எனது கருத்தை அவர்கள் மதித்தால் அவர்களாக முன்வந்து எனக்கு விளக்கம் கொடுக்கலாம்.


ஒரு திருமணப் பொருத்த விளம்பரத்துக்கு, “ கேளுங்கள் தரப்படும் என்று நம்முடைய வேதம் சொல்லுகிறதே, எங்களிடம் கேளுங்கள் ” என்று சொல்லுகிறார்கள், ஆச்சி மசாலா நிறுவனத்தினர். இதைக் கண்டிக்க அவர்களிடம் தனிப்பட்ட முறையில் விளக்கம் கேட்கவேண்டுமா என்ன ? பொதுவில் செய்யப்பட்டுவிட்ட ஒரு விளம்பரத்தை எப்படி தனிப்பட்ட முறையில் கண்டிக்கமுடியும் ? அது நம்முடைய உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று தெரிந்த பிறகும் அந்த விளம்பரத்தை தொடருகிறார்களே அது இன்னும் கொடுமையல்லவா ? இதெல்லாம் சிறு சிறு தவறுகள்...இதையெல்லாம் பெரிதுபடுத்தக்கூடாது. அவர்கள் கொடுக்கும் லட்சக்கணக்கான காணிக்கை பணத்துடன் ஒப்பிடும்போது வேத வசனம் என்பது ஒரு பொருட்டா என்ன, என்று சிலர் கேட்பார்களோ ???


இந்த காணொளியில் இடம்பெற்றிருக்கும் க்ளிப்’பிங்க்ஸில் வந்துசெல்லும் அனைவருமே பாலியல் தொழிலாளர்களா ? இதில் எத்தனை பேர், வேலை முடிந்து தன் கணவன் பிக்-அப் செய்வதற்காகக் காத்திருக்கும் பெண்களோ ? இதுதான் நற்செய்தி சானனில் தெய்வீக பணியா ? இப்படி ஒருபுறம் திருநங்கைகளைக் கேவலப்படுத்திவிட்டு மறுபுறம் அவர்களையெல்லாம் இணைத்து அவர்களுடைய தொழில் ஆசீர்வாதத்துக்காக ஜெபிக்கிறார்கள். பாவம் இங்கே...புண்ணியம் அங்கே ???

http://sathiyam.tv/english/sathiyam-shows/crime-report/chennai-was-dilapidated-by-sex-workers



( நம்முடைய மனதில் தோன்றும் உணர்வுகளைப் போட்டுவைக்கவே வதனநூல் எனும் வாய்ப்பும் அங்கே ஒரு எழுது பலகையும் இருக்கிறது. அதில் நாம் எழுதும் விவரங்கள் விவகாரமாகும்போது சில நண்பர்களையும் இழக்கவேண்டியதாகிறது. சிலர் நம்மைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல் முடக்கிவிட்டு செல்லுகிறார்கள். கொட்டிட்டா அள்ளமுடியாது என்பார்கள். ஆனால் நமக்கோ அள்ளுவதிலும் அவற்றைக் குவித்து வைப்பதிலும் ஒரு தனி சுகம். ஏனெனில் யார் நம்மை எப்போது ப்ளாக் செய்வார்கள் என்று தெரியவில்லை. எழுதியவை காணாமற் போகிறது. இதனைத் தடுக்கவே இவ்வாறு தொகுத்திருக்கிறோம். இது நாம் வெளியிட்ட கருத்தில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் தெளிவுக்கும் உறுதிக்கும் ஒரு ஆதாரமாக இருக்கிறது. மேற்காணும் தொகுப்பு ஒரு சாதாரண முகப்பு நிலை செய்தியாகும். ஆனால் அது இந்த அளவுக்கு வளர யார் காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்களே அறிவார்கள். )



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

வதனநூலில் வெளியான இந்த கட்டுரையை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒரே ஒரு நண்பருக்கு மட்டும் வந்ததே கோபம்...அவருடைய சீற்றங்களுக்கு நாம் நிதானமாக பதிலளித்திருக்கிறோம். இதிலிருந்து நாம் ஒவ்வொரு இளைஞரையும் விசேஷித்தவர்களாக எண்ணுகிறோம் என்பது வெளிப்படை.

 

  • Shakthi Nambirajanநான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பிறகும், அந்த கருத்தை நீக்கிய பிறகும் எனது பெயரை குறிப்பிட்டு அதே கருத்தை இங்கு மீண்டும் பதிந்திருப்பது வருத்தம் அளிக்கிறது . அதுவும் தங்களை போன்ற மூத்தவர்கள் செய்வது மேலும் வருத்தம்.

    இதை நீக்கினால் மகிழ்ச்சியடைவேன்.
  • Yauwana JanamShakthi Nambirajan /// நான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பிறகும், அந்த கருத்தை நீக்கிய பிறகும் எனது பெயரை குறிப்பிட்டு அதே கருத்தை இங்கு மீண்டும் பதிந்திருப்பது வருத்தம் அளிக்கிறது . அதுவும் தங்களை போன்ற மூத்தவர்கள் செய்வது மேலும் வருத்தம்.

    இதை நீக்கினால் மகிழ்ச்சியடைவேன். ///

    நீங்கள் தெரிவித்த கருத்தை உங்கள் கருத்தாக நான் நினைக்கவில்லை. இன்னும் தெளிவாக எழுத தூண்டிய உங்கள் கருத்துக்காக நன்றி தெரிவித்துக்கொள்ளுகிறேன். இப்படியே எத்தனை இளைஞர்கள் இந்த மீடியா மிருகங்களின் மாயையில் சிக்கியிருப்பார்களோ என்று எண்ணுகையில் ஏற்படும் வேதனையே பெருந் துன்பமாகும். மற்றபடி நீங்கள் எமது பக்கத்தில் தெரிவித்த ஒரு கருத்தை நீக்குவது உள்ளபடியே அவமானப்படுத்துவது போன்றதாகும். இதற்காகவே மேற்கோள் காட்டி எழுதும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். ஒருவேளை நீங்கள் நண்பர் தானே என்று நான் மேற்கோள் காட்டாமல் எழுதியிருந்தால் எனது உழைப்பு வீணாகி போயிருக்கும் அல்லவா ? இடறல் வருவது நல்லது தான், ஆனால் அது யாரால் வருகிறதோ அவர்களுக்கு என்ன நேரிடும் என்று கர்த்தர் சொன்னாரோ அவரிடமே என் நியாயத்தை ஒப்புவிக்கிறேன். நான் எழுதியவற்றைக் குறித்து ஒருபோதும் வருந்துகிறதில்லை. ஒரு சில தருணங்களைத் தவிர அவற்றை திரும்பப் பெற்றதும் இல்லை. எனவே தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமைக்கு வருந்துகிறேன். நீங்கள் கூட உங்கள் கருத்தை எழுதும் முன்பதாக நெருங்கிய நண்பரான என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். எனது கடந்த 5 வருட போராட்டத்தையெல்லாம் கவனித்து வரும் தாங்கள் எனக்கு புத்தி சொல்லுமளவுக்கு நான் உங்களையெல்லாம் கஷ்டப்படுத்தியிருக்கிறேன் போல ???
  • Shakthi Nambirajanநான் சொன்ன கருத்து இன்னும் சரியாக உங்களை எட்டவில்லை என்று அறிகிறேன். பரவாயில்லை. நட்பைவிட உங்களுக்கு இந்த பதிவு பெரியதாக இருக்கலாம். ஆனால் எனக்கோ இந்த பதிவை விட நட்பே மேலானது.  இதை நீங்கள் நீக்க வேண்டாம். இதை மேலும் வளர்க்கவும் வேண்டாம்.
  • Yauwana Janam@Shakthi Nambirajan

    /// நான் சொன்ன கருத்து இன்னும் சரியாக உங்களை எட்டவில்லை என்று அறிகிறேன். பரவாயில்லை. ///

    நீங்கள் எழுதியதை விளங்கிக்கொள்ளாமலே இத்தனை நீளமான பதிலைக் கொடுத்தேன் ?


    /// நட்பை விட உங்களுக்கு இந்த பதிவு பெரியதாக இருக்கலாம். ஆனால் எனக்கோ இந்த பதிவை விட நட்பே மேலானது. ///

    ஓஹோ, ஒத்த கருத்துடையோரே நண்பர்களாக இருக்கமுடியுமா ? நான் உங்கள் கம்பெனியைப்பற்றி இங்கே அவதூறாக எழுதவில்லை. என் திருச்சபை மக்களை சீரழிக்கும் மீடியா மிருகங்களைப் பற்றி என் நண்பர்களை எச்சரித்திருக்கிறேன். அதில் எப்படி நம்முடைய நட்பு பாதிக்கும் என்று தெரியவில்லை.

    /// இதை நீங்கள் நீக்க வேண்டாம். இதை மேலும் வளர்க்கவும் வேண்டாம். ///

    இந்த தொகுப்பின் இறுதியில் நான் குறிப்பிட்டுள்ள வண்ணமாக எனது சேமிப்புக்ககவே இதனைத் தொகுத்திருக்கிறேன். எனது பழைய அனுபவங்கள் அப்படியாக இருந்தது. திடீரென சத்தியம் டிவி பக்கம் என்னை ப்ளாக் செய்தால் நான் எழுதியவை அனைத்தும் காணாமற் போகும். நான் எழுதியிருக்கும் ஒவ்வொன்றிலும் சத்தியம் இருப்பதால் அதை சேமிக்க விரும்புகிறேன். மேலும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையின் அனைத்து கோணங்களிலும் சிந்திக்கவைத்த உங்கள் கருத்துக்களுக்காக நன்றி சொல்லி உள்ளூர சிரித்துக்கொண்டேன். என்னிடமிருந்து இன்னும் அதிக விவரங்களைப் பெறவே நீங்கள் அவ்வாறு எழுதியதாகவும் நினைத்தேன். ஆனால் நீங்களோ எதிரி போல பாவித்து தங்கள் கருத்தை நீக்கி என்னை தடுமாறவைத்துவிட்டீர்கள்.
  • Shakthi Nambirajan// நான் உங்கள் கம்பெனியைப்பற்றி இங்கே அவதூறாக எழுதவில்லை. என் திருச்சபை மக்களை சீரழிக்கும் மீடியா மிருகங்களைப் பற்றி என் நண்பர்களை எச்சரித்திருக்கிறேன். அதில் எப்படி நம்முடைய நட்பு பாதிக்கும் என்று தெரியவில்லை//

    வருத்தம் தெரிவித்த பிறகும் எனது பெயரை
    குறிப்பிட்டது தவறு என்கிறேன்.

    //நான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பிறகும், அந்த கருத்தை நீக்கிய பிறகும்//

    வருத்தம் தெரிவித்தே நீக்கியிருக்கிறேன்.

    நான் சொன்ன கருத்து இன்னும் சரியாக உங்களை எட்டவில்லை என்று அறிகிறேன். பரவாயில்லை.

    நட்பை விட உங்களுக்கு இந்த பதிவு பெரியதாக இருக்கலாம். ஆனால் எனக்கோ இந்த பதிவை விட நட்பே மேலானது.

    இதை நீங்கள் நீக்க வேண்டாம். இதை மேலும் வளர்க்கவும் வேண்டாம்.
  • Yauwana Janam< திடீரென சத்தியம் டிவி பக்கம் என்னை ப்ளாக் செய்தால் நான் எழுதியவை அனைத்தும் காணாமற் போகும். நான் எழுதியிருக்கும் ஒவ்வொன்றிலும் சத்தியம் இருப்பதால் அதை சேமிக்க விரும்புகிறேன். >
  • Yauwana Janam<ஒரு குறிப்பிட்ட பிரச்சினையின் அனைத்து கோணங்களிலும் சிந்திக்கவைத்த உங்கள் கருத்துக்களுக்காக நன்றி சொல்லி உள்ளூர சிரித்துக்கொண்டேன். என்னிடமிருந்து இன்னும் அதிக விவரங்களைப் பெறவே நீங்கள் அவ்வாறு எழுதியதாகவும் நினைத்தேன்.>
  • Yauwana Janamதிரு.டிஎம்.சௌந்தரராஜன் மறைந்த செய்தியை அறிவிக்கும்போது அவர் பாடிய பாடல்களையும் திரைப்டத் துண்டுகளையும் போடாமல் இருக்கமுடியுமா அது தவறல்ல. இது எல்லா டிவி சானல்களும் செய்வது தானே, அதை எப்படி தவிர்க்கமுடியும் ? ஒரு கிறிஸ்தவ சானல் என்பதற்காக சினிமா பற்றிய செய்திகளை சொல்லாமல் இருக்கமுடியுமா ? வருமானத்துக்கு அதுவும் அவசியம் தானே ? இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்கவே சினிமா என்பது ஆண்டவருக்கு விரோதமானது அல்ல எனும் கருத்தை பரப்புகிறார்கள்,மீடியா மிருகங்கள். ஆனாலும் சத்தியம் டிவி அப்பழுக்கற்ற உயர்தரமான சேவையைப் புரிந்துவருவதாக சிலர் சொன்னால் கேட்க நன்றாக இருக்கலாம்.ஆனால் அது சத்தியத்துக்கு ஏற்றதல்ல.
  • Yauwana Janamஇந்த குட்டிப் பெண் பாடும் பாடலைக் கேட்க தயங்கவேண்டாம்.இது நம்முடைய அன்பு சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களின் ஆசிபெற்ற டைரக்டர் ப்ரபு சாலமன் அவர்களுடைய படத்தின் பாடல் தான். அதுவும் ஒரு தொழில் தானே... அதில் என்ன தவறு என்பார்கள்,மீடியா மிருகங்கள்.


 

இந்த உரையாடலுக்கு பின்னணியிலிருக்கும் செய்தி....

https://www.facebook.com/yauwanaj/posts/375935205857123



-- Edited by HMV on Wednesday 31st of July 2013 05:04:10 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard