தரிசனம் தரவேண்டும் இயேசைய்யா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம் தேவ துணையின்றி துன்பம் தான் மிஞ்சும் ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும் காலங் காலமாக என்னை காக்கும் திருக்குமரா
நாளும் பொழுதும் உம் நினைவோடு நான் வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே தேனின் சுவையோடு (இயேசைய்யா) கீதம் பாடிடுமே ராக தாள பாவ கால லயமுடனே - லயமுடனே
வானும் விண்மீன் இவ்வுலகோடு தான் யாவும் உம் சாயல் தெளிவாகுதே பாரில் எமக்காக தேவ சுதனாக நாதர் கனிவோடு (இயேசைய்யா) தாமே நாடினீரே பாவ நாச தேவபாலன் தயவுடனே - தயவுடனே
-- Edited by HMV on Monday 29th of July 2013 09:44:27 AM