Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கருத்து - மோதல் ?!
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
கருத்து - மோதல் ?!
Permalink  
 


கையிலே வேதத்தை எடுக்காமலே வேதத்திலிருந்து சொந்த அனுபவங்களின் அடிப்படையில் பேசமுடியுமா? முடியும் என்பதற்கு இந்த காணொளி ஒரு உதாரணமாக இருக்கிறது. இந்த கூடுகை வேதபாட வகுப்பு என்று சொல்லப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில், “ தேவனுடைய வழிநடத்துதலை அறிவது எப்படி? ” - என்ற பொருளில் பேசும்போது குறிப்பிட்ட ஒரு வேதபகுதியை எடுத்து தியானித்தால் அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும். அது காலத்தால் அழியாத அனுப்வமாகவும் இருக்கும். அதில் டேக் ஹோம் மெசேஜ் இருக்கும். அது வேதத்தை நோக்கி ஓட செய்வதாக இருக்கும்.

எஸ்றா 7:10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.

இன்றைக்கு ஐம்பது வயதைக் கூட எட்டாத இளைஞர்கள் எழும்பி பெரிய மனிதர்களைப் போல புத்திசொல்லுவதும் மற்ற ஊழியர்களையும் ஊழிய முறைகளையும் குற்றஞ்சாட்டுவதும் குறைகூறுவதும் உள்ளப்டியே வியப்பாக இருக்கிறது. அதற்குரிய ஆவிக்குரிய முதிர்ச்சியோ அனுப்வமோ இவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. வேதத்தில் எரேமியா போன்றவர்கள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் ஆண்டவரால் பயன்படுத்தப்பட்டது உண்மையே. ஆனாலும் தற்கால இளைஞர்களை எரேமியா போன்றவர்களுடன் ஒப்பிடமுடியுமா என்பதையும் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.

எப்படியிருப்பினும் இத்தனை ஆயிரம் மைல்கள் க்டந்துசென்று ஒரு சிறிய வீட்டுக்கூட்டத்தில் எளிமையாக பேசும் சகோ. ஃப்ரெடி அவர்களையும் அவரை ஏற்றுக்கொண்டு உபசரித்து ”கன”ப்படுத்திய அமெரிக்க தமிழ் நெஞ்சங்களையும் வாழ்த்துகிறேன்.

காமெண்டுகள்:


  • Shakthi Nambirajan
    · 63 mutual friends
    Freddy will really be a promising preacher in the years to come. Not only in the land across 1000 miles, even here he attends small fellowship. Lets pray God bless him in this trip.

  • Yauwana JanamShakthi Nambirajan Freddy will really be a promising preacher in the years to come. Not only in the land across 1000 miles, even here he attends small fellowship. Lets pray God bless him in this trip. ///

    ஒரு கருத்தை ஒறுத்தோ வெறுத்தோ மறுத்தோ பேசுவதோ எழுதுவதோ தவறல்ல. ஆனால் அது ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் அமைந்திருக்கிறதா என்பதே முக்கியமாகும். அதன்படி சிலருடைய கருத்தை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ எழுதும்போது அதை ஆவியானவர் ஆம் என்கிறாரா என்றும் பார்ப்பது நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு நல்லது.

    உதாரணமாக ஸ்தேவான் கல்லெறியப்பட்டு மரித்தபோது அங்கே பரலோகத்தில் இயேசுவானவர் எழுந்து நின்றார் என்று வேதம் சொல்லுகிறது. ஒரு பாவி விண்ணுலகில் மறுபிறப்படையும்போது தூதர்கள் மகிழுகிறார்களாம். அப்படியே நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவும் பாதிப்பும் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

    இங்கே பகிரப்பட்டுள்ள காணொளி முழுவதையும் பார்த்தபிறகே நான் என்னுடைய கருத்தைப் பதித்துள்ளேன். அதன் நோக்கம் எந்த வகையிலும் யாரையும் குறைகூறுவதாக இல்லை. மாறாக பரலோகத்தில் வீற்றிருக்கும் என் இரட்சகரின் பார்வையில் அவருடைய மகிமைக்காகவே யோசித்து எழுதுகிறேன். அவர் யாரையாவது பாராட்டுவார் என்றால் அது இங்கே - இப்போது இல்லை, எல்லா வேலையையும் முடித்துவிட்டு அங்கே - அவரிடம் செல்லும்போது மாத்திரமே.

    என்னிடம் ஒரு வழக்கமுண்டு. மேடையில் ஒருவர் பேசும்போது, அல்லது பாடும்போது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்கும் அவருடைய சொந்தங்களின் முகத்தைப் பார்ப்பேன். தாய்,தந்தை, மனைவி, பிள்ளைகள் போன்ற உறவுகளின் முகத்தில் வெளிப்படும் ரியாக்‌ஷன் அற்புதமாக இருக்கும். அதுபோல்வே எனது ஆவியில் - ஆவியானவரின் பார்வையில் ஒவ்வொரு காரியத்தையும் பார்க்கிறேன். எனவே என்னால் சாதாரண மனிதர்களைப் போல யோசித்து போலியாக- நட்புக்காக- இழிவான ஆதாயத்துக்காக ஒன்றையும் எழுதமுடியவில்லை.

    8 hours ago · Like · 1
  •  
    Shakthi Nambirajan · 63 mutual friends
    இந்த காணொளியை பார்க்காமல் தான் நான் கருத்து தெரிவித்தேன். இவரது கூட்டங்களில் முன்பு பங்கேற்ற அனுபவத்தில் தான் எழுதினேன். மேலும் ஒரு மனிதன் தன சுய சித்தத்தை மாத்திரமே சாரும் போது அவன் எப்போதும் விழுந்து போக வழியுண்டு என்பதை அறிந்திருக்கிறேன். சகோ. பிரட்டி ஜோசப் தேவனுக்கென்று இன்னும் அதிகம் பிரகாசிக்க வேண்டும் என்பது எனது அவா. அது நிறைவேற ஜெபிக்கிறேன். சகோ. பிரட்டி மட்டுமல்ல, இன்னும் பலருக்காக ஜெபிக்கிறேன். அதிலும் நீங்களும் உண்டு. ஆனால் போலியாக- நட்புக்காக- இழிவான ஆதாயத்துக்காக அல்ல. தேவ ராஜ்யத்தின் பிரயோஜனத்திற்காக.
  • Yauwana Janam/// இந்த காணொளியை பார்க்காமல் தான் நான் கருத்து தெரிவித்தேன். இவரது கூட்டங்களில் முன்பு பங்கேற்ற அனுபவத்தில் தான் எழுதினேன். மேலும் ஒரு மனிதன் தன சுய சித்தத்தை மாத்திரமே சாரும் போது அவன் எப்போதும் விழுந்து போக வழியுண்டு என்பதை அறிந்திருக்கிறேன். சகோ. பிரட்டி ஜோசப் தேவனுக்கென்று இன்னும் அதிகம் பிரகாசிக்க வேண்டும் என்பது எனது அவா. அது நிறைவேற ஜெபிக்கிறேன். சகோ. பிரட்டி மட்டுமல்ல, இன்னும் பலருக்காக ஜெபிக்கிறேன். அதிலும் நீங்களும் உண்டு. ஆனால் போலியாக- நட்புக்காக- இழிவான ஆதாயத்துக்காக அல்ல. தேவ ராஜ்யத்தின் பிரயோஜனத்திற்காக. ///

    Shakthi Nambirajan நீ ஒண்ணும் எனக்கு சொல்லத் தேவையில்லை எனக்கு எல்லாம் தெரியும் என்பது சகோதரத்துவத்தின் அடையாளம் அல்லவே ?!
  • Yauwana JanamShakthi Nambirajan @ Yauwana Janam நீ என்ன சொன்னாலும் அதை தவறாக தான் எடுப்பேன் என்பதும் சகோதரத்துவத்தின் அடையாளம் அல்லவே ?! ///

    ஒரு கருத்தை சொன்னால் அதில் உறுதியாக நிற்கணும். அதை விடுத்து காமெண்ட்டை நீக்கிவிட்டு ஓடுவோருடன் வழக்காட என்னால் முடியாது. நட
    ்பு என்பது பூவைப் போன்றது. அதை கசக்கி நுகர எனக்கு பெரியவர்கள் எனக்குக் கற்றுத்தரவில்லை.

    ஒரு காணொளியை முழுவதுமாகப் பார்த்து அதனை திறனாய்வு செய்து எனது கருத்தை வெளியிட்டிருக்கிறேன். அதேபோல ஒவ்வொருவரும் சுயமாகப் பார்த்து நிதானித்து தனது கருத்து வெளியிடவேண்டும். அதைவிடுத்து நோகாமல் நோன்பு கும்பிடுவதுபோலவும் என்னை இடிப்பது போலவும் காப்பியடித்தும் எதையோ எழுதி சீண்டினால் அதற்குரிய பதிலைத் தரும் உரிமை எனக்கு உண்டு. இன்னும் இங்கிருந்து அமெரிக்காவுக்கு ஊழியம் என்று செல்லுவோரின் நோக்கமும் செயல்பாடும் என்ன என்று எதையாவது நான் எழுதியிருந்தால் என்னை உயிரோடு கொளுத்திவிடுவார்கள், போலிருக்கிறது. என்னுடைய வரிகளையே இமிடேட் செய்து எனக்கே குழிபறிக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்குரிய பதில் கொடுக்கப்படும்.
  • Shakthi Nambirajan · 63 mutual friends
    //ஒரு கருத்தை சொன்னால் அதில் உறுதியாக நிற்கணும். அதை விடுத்து காமெண்ட்டை நீக்கிவிட்டு ஓடுவோருடன் வழக்காட என்னால் முடியாது. நட்பு என்பது பூவைப் போன்றது. அதை கசக்கி நுகர எனக்கு பெரியவர்கள் எனக்குக் கற்றுத்தரவில்லை.

    ஒரு காணொளியை முழுவதுமாகப் பார்த்து அத
    னை திறனாய்வு செய்து எனது கருத்தை வெளியிட்டிருக்கிறேன். அதேபோல ஒவ்வொருவரும் சுயமாகப் பார்த்து நிதானித்து தனது கருத்து வெளியிடவேண்டும். அதைவிடுத்து நோகாமல் நோன்பு கும்பிடுவதுபோலவும் என்னை இடிப்பது போலவும் காப்பியடித்தும் எதையோ எழுதி சீண்டினால் அதற்குரிய பதிலைத் தரும் உரிமை எனக்கு உண்டு. இன்னும் இங்கிருந்து அமெரிக்காவுக்கு ஊழியம் என்று செல்லுவோரின் நோக்கமும் செயல்பாடும் என்ன என்று எதையாவது நான் எழுதியிருந்தால் என்னை உயிரோடு கொளுத்திவிடுவார்கள், போலிருக்கிறது. என்னுடைய வரிகளையே இமிடேட் செய்து எனக்கே குழிபறிக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்குரிய பதில் கொடுக்கப்படும்.//

    சகோதரத்துவத்தின் அடையாளம் அல்லவே ?!
  • Yauwana Janamநான் நானாகவே இருக்கிறேன்.
    நிறம் மாறும் உலகில்
    நிலைமாறா நண்பர்
    எனக்கு
    இயேசு மாத்திரமே.

 https://www.facebook.com/yauwanaj/posts/403880329729277



-- Edited by HMV on Wednesday 31st of July 2013 08:20:14 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard