“ஏற்கனவே நான் எச்சரித்தது போல, இந்தியாவுக்கான ஆபத்து கேதார்நாத்தில் துவங்கி விட்டதாக’ சொல்லிக்கொண்டிருக்கிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி யான உமாசங்கர்.
இது தொடர்பில் உமாசங்கள் மேலும் தெரிவிக்கையில்,,’’”"தமது பிள்ளைகளை இயேசு உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ள வருவதற்கு முன்னர் இதுபோன்ற அழிவுகள் நடக்கும் என்று பரிசுத்த வேதாகமத்தில் தீர்க்க தரிசனமாக எழுதப்பட்டுள்ளது.
பைபிளின் ஆகாய் 2:6 வசனத்தில் கர்த்தர், “கொஞ்ச காலத்துக்குள்ளே இன்னும் ஒரு தரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப் பண்ணுவேன்’ என சொல்லியிருக்கிறார். மேலும், செப்பானியா 1:3 அதிகாரத் தில், “மனுஷரையும் மிருக ஜீவன்களையும் வாரிக் கொள்வேன். ஆகாயத்துப் பறவைகளையும் சமுத்திர மச்சங்களையும் வாரிக்கொண்டு தேசத்தில் உண்டான மனுஷரை சங்காரம் பண்ணுவேன்’ என சொல்லியுள்ளார் கர்த்தர். இதன் அழிவுகள் எப்படி இருக்கு மெனில், எரேமியா 25:33-ல் “அக்காலத்திலே பூமியின் ஒரு முனை துவங்கி மறுமுனை மட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள். அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம் பண்ணப் படாமலும் பூமியின் மேல் எரு வாவார்கள்’ என எச்சரிக்கிறார்.
இந்த விஷயங்களை, கடந்த 2012-ஆம் வருடம் , உலகம் பேரழி வை சந்திக் கும் என் பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அதனை நிரூப்பிப்பது போலவே, இன்றைக்கு கேதார்நாத்தில், பல ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்க்கப்படவில்லை. பலரின் உடல்கள் கண்டுபிடிக்க முடியாததால் அடக்கம் செய்யப்படாமலே பூமி மேல் கிடக்கிறது. அந்த உடல்கள் மக்கி எருவாக மாறிப்போயிருக்கிறது.
2011 மார்ச் 8-ந் தேதி தமது தீர்க்கதரிசி மூலம் எனக்கு ஒரு தகவலை அனுப்புகிறார் இயேசு. அப்போது, “யாத்திராகமத்தில் 7 முதல் 12 வரையுள்ள அதிகாரங்களில் சொல்லப்பட்டிருப்பது போல, எகிப்தின் தேவர்களை (கடவுள்கள்) எப்படி தண்டித் தாரோ அதேபோல இந்திய கடவுள்களையும் தண்டிப்பேன் எனவும், எகிப்தின் தேவர்கள் எல்லாம் எப்படி பொய்க்கடவுள்கள் என்று நிரூபித்தாரோ அதேபோல இந்திய தேவர்கள் அனைவரும் பொய் என நிரூபிப்பேன்’ எனவும் தெரிவித்தார். அந்த தீர்க்கதரிசனம்தான் இப்போது நிறைவேறத் துவங்கியுள்ளது” என்கிறார் சீரியஸாக உமாசங்கர்.
“”இந்தியாவுக்கு வரக்கூடிய ஆபத்துகளை தீர்க்கதரிசி மூலம் உங்களுக்கு இயேசு தகவல்களை அனுப்பியதாக சொல்கிறீர்கள். அந்த ஆபத்துகளை நீங்கள் ஏன் தடுத்திருக்கக்கூடாது?” என்று கேட்டபோது,’”"என்னுடைய பிரசங்கத்தில் பல முறை இதனை தெரிவித்திருக்கிறேன். அப்போது “தேவனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க எந்த அரசாங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பயன் தராது. இயேசுவிடம் சரணடைவது மட்டுமே தப்பிக்க ஒரே வழி’ என்பதையும் சொல்லியிருக்கிறேன். அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த அழிவுகளிலிருந்து மனித ஜீவன்கள் தப்பித்திருக்கலாம்”’என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “”பூமியின் பெரும் அழிவுக்கான நிமிடங்கள் துவங்கி விட்டன. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவுக்குத் தண்டனை அதிகம் உண்டு. காரணம் இந்தியாவில் தான் உருவ வழிபாடுகள் அதிக அளவில் இருக்கிறது. தேவனாகிய இயேசு, “உருவ வழிபாடுகள் கூடாது என்பதோடு அதை மீறுபவர்கள் எனது எதிரிகள்’ என்கிறார்” என்றவரிடம், “”கிறிஸ்தவர்களும் இயேசுவின் உருவத்தை வைத்து வழிபாடு நடத்துபவர்கள்தானே?” என்று கேட்டபோது,’’”"கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டு உருவ வழிபாடு செய்பவர்களும் இயேசுவின் கட்டளையை மீறுபவர்கள்தான். வேளாங்கண்ணியில் உருவ வழிபாடு நடப்பதால் அங்கு நிகழ்வது கிறிஸ்தவ பிரசங்கமே அல்ல. அதனால் கர்த்தரின் தண்டனையிலிருந்து இவர்களும் தப்பிக்க முடியாது. தற்போது மேற்கத்திய நாடுகளிலும் இந்தியாவிலும் தொடங்கியுள்ள இந்த அழிவுகள் உச்சக்கட்டத்தை அடையும். வேதாகமத்தில் இது குறித்து விலாவாரியாக தீர்க்க தரிசனமாக சொல்லப்பட்டுள்ளது” என்கிறார் உமாசங்கர்.
“”அழிவுகள் உச்சக்கட்டத்தை அடையுமென்கிறீர்கள். அது எப்படி இருக்கும்? எப்போது நடக்கும்?” என கேட்டபோது…’’”"இந்த அழிவின் உச்சக்கட்டம் ஒரே நாளில் உலகம் முழுவதும் பல கோடி உயிர்களை பலிகொள்ளும். மகா பூமியதிர்ச்சிகள், சுனாமிகள், நில நடுக்கங்கள் போன்றவற்றால் இதனைச் செய்வேன் என சொல்லியிருக்கிறார் கர்த்தர். ஏசாயா 13:13 வசனத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பேரழிவுகள் இந்த மாதம், இந்த வருடம்தான் நடக்கும் என சொல்ல இயலாது. அழிவிற்கான முதல் கட்டம் துவங்கிவிட்டதால் இனி பேரழிவிற்கான காலகட்டம்தான். தர்க்கங்கள் செய்வதால் பலன் ஒன்றுமில்லை” என்கிறார் உமாசங்கர்.