இயேசு என்ற நபர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதற்கு தடயங்களை பல நூற்றாண்டுகளாக ஆய்வாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். உண்மையான இயேசுவை பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள், ஆவணப்படங்கள், பத்திரிக்கை கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிறிஸ்துவத்தின் மிகவும் ஆதாரமான தோற்றம் எப்போது எங்கே என்பது இன்னும் ஆய்வுக்குரியதாக இருந்தாலும், மத ஆய்வுகளில் இப்படிப்பட்ட தேடல் மிகவும் சாதாரணமான ஒன்றாகத்தான் இருக்கிறது. வரலாற்றுரீதியாக இயேசு என்ற நபர் இருந்தார் என்பதற்கு தடயங்கள் இல்லை என்பதை பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறினாலும், இப்படிப்பட்ட ஆய்வுகள் பரவலாகவே இருக்கின்றன.
ஆனால், முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதை பற்றி ஒரு ஆய்வு நடந்ததே இல்லை என்றே சொல்லலாம். ஏன் இல்லை?
ஜோசப் ஸ்மித், மார்ட்டின் லூதர், ஆண்டன் லெவி போல முகம்மதுவுக்கும் அவர் இருந்தார் என்பதற்கான தடயங்கள் ஏராளம் என்பதால் முகம்மது வரலாற்றில் இருந்த ஒரு நபரா இல்லையா என்பதை பற்றி ஆராயவில்லை என்று பலரும் கருதுகிறார்கள். முகம்மதுவின் போதனைகள் ஒழுக்கரீதியில் சரியானவையா, இல்லையா, அவை பிரயோசனமானவையா அல்லவா என்பதை விட, அவர் நிச்சயமாக இருந்திருக்கிறார் என்றுதான் கடுமையாக இஸ்லாமை எதிர்ப்பவர்களும் கருதுகிறார்கள். இல்லையா?
உண்மையில் இல்லை. குறைந்தது, ராபர்ட் ஸ்பென்ஸர் எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம், முகம்மது என்பவர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா இல்லையா என்பதை ஆராய்கிறது.
தடயம் இல்லை என்பது இல்லை என்பதற்கான தடயம் ஆகாது என்பது உண்மை என்றாலும், தனது புத்தகமான “Did Muhammad Exist? ” என்ற புத்தகத்தில், முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறார் என்பதற்கு எந்த விதமான தடயமும் இல்லை என்பதை மிகவும் தேர்ச்சியுடனும் ஆதாரப்பூர்வமாகவும் நம்பத்தகுந்ததாகவும் எழுதியிருக்கிறார். ஸ்பென்ஸரே சொல்வது போல, “முகம்மது என்ற நபர் வரலாற்றில் இல்லை என்று நிரூபிப்பது முடியாத காரியம்” என்பதை கூறும் ஸ்பென்ஸர், எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முகம்மதை பற்றிய இஸ்லாமிய கதையாடலை அப்படியே உண்மை என்று ஏற்றுகொள்வது தேவையற்றது. (நமக்கு இருக்கும் ஒரு சில ஆதாரங்களை வைத்து, முகம்மதின் தோற்றத்துக்கான வேறு கதையாடல்கள் இருக்கும் ஆதாரங்களுக்கு பொருந்திச் செல்கின்றன என்பதையும் பார்ப்போம்)
ஆதாரங்கள்.
இந்த பெரிய விஷயத்தை அணுகுவதற்கு ஸ்பென்ஸர் ஐந்து முக்கிய செய்திகளை எடுத்துகொள்கிறார்.
1. 7ஆம் நூற்றாண்டு, 8ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் அல்லாதவர்கள் எழுதிய ஆவணங்கள். 2. அரபியர்கள்/முஸ்லீம்களே எழுதிய 7 /8 ஆம் நூற்றாண்டு ஆவணங்கள். 3. குரான் 4. ஹதீஸ், இஸ்லாமிய விரிவுரைகள், போதனைகள் 8 /9 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டவை 5. முகம்மதுவின் வாழ்க்கைக்கு பின்னர் சுமார் 100 ஆண்டுகள் கழித்து, இபின் இஷாக் எழுதிய முகம்மதுவின் வாழ்க்கைவரலாறு . இந்த வரலாற்றின் அடிப்படையிலேயே பிற வாழ்க்கைவரலாறுகள் எழுதப்பட்டன.
200 பக்கங்களில், ஒவ்வொரு பிரிவையும் ஆராய்ந்து, முகம்மதுவின் வரலாற்று ஆதாரத்துக்கு தடயமே இல்லை என்று நிரூபிக்கிறார்.
இஸ்லாமை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் என்னைப் போன்றவருக்கு, முதலாவது பிரிவே மிகவும்முக்கியமானதாக இருக்கும். அதுவே சுதந்திரமான ஒரு தடயமாகவும் இருக்கும். பெரும்பாலான மதங்களது புனித நூல்கள் போலவே, இஸ்லாமின் புனிதநூல்களும், தன்னைத்தானே சரி என்றும், தன்னையே தனக்கான ஆதாரமாகவும் அளிக்கும் என்றுமே நான் அனுமானம் செய்தேன்( அது தவறு என்று பின்னால் அறிந்தேன். அது பின்னர்)
ஆகவே, முஸ்லீமல்லாதவர்கள் முகம்மதுவின் வாழ்நாளில் அவரைப் பற்றி என்ன சொன்னார்கள், அல்லது 60 வருடத்துக்கு பிறகு என்ன சொன்னார்கள்?
ஒன்றுமே இல்லை.
எட்டாம் நூற்றாண்டு வரை முகம்மதுவை பற்றியோ, ஏன் இஸ்லாமை பற்றியோ கூட எந்த ஒரு செய்தியும் ஆவணௌம் முஸ்லீமல்லாதவர்கள் எழுதவில்லை. அரபியாவின் மத்தியில் இருக்கும் ஒரு பழங்கால தூரத்திய அனாமதேயமாக இருக்கும் ஒரு மதத்தை பற்றி மற்றவர்கள் எழுத என்ன தேவை என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. முகம்மதுவின் இறப்பு நடந்ததாக சொல்லப்படும் 632இலிருந்து துவங்கி அரபியர்கள் தங்களது பாலைவனத்தை விட்டு கிளம்பி முழுமையான மத்தியக்கிழக்கு முழுவதும் ஆக்கிரமித்து கைப்பற்றினார்கள். இன்னும் சில பத்தாண்டுகளில் வட ஆப்பிரிக்கா, பெர்ஷியா என்று ஆக்கிரமித்தார்கள். பல கலாச்சாரங்களையும், சமூகங்களையும் எதிர்கொண்டார்கள். ஆனால் அவர்களில் ஒருவருக்குமே இஸ்லாம் என்றோ முகம்மது என்றோ எதுவும் கேள்விப்பட்டதில்லை. ஸ்பென்ஸர் அத்தியாயம் இரண்டில் குறிக்கிறார்.
”அரபிய ஆக்கிரமிப்புகள் வரலாற்று ரீதியான உண்மைகள். ஆனால், அரபிய ஆக்கிரமிப்பாளர்கள் அரபியாவை விட்டு கிளம்பி ஆக்கிரமிக்க இறங்கியது முகம்மதுவாலும், குரானாலும் என்பது சந்தேகத்துக்கு இடமானது.”
முகம்மதின் வாழ்க்கைக்கும், அவரது இறப்புக்கு பின்னர் உடனடியாகவும் மத்திய கிழக்கை தங்களது புதிய மதமான இஸ்லாமின் கீழ் கொண்டுவந்த பின்னரான இஸ்லாமின் ஆரம்ப கால வருடங்களை பற்றிய இஸ்லாமிய கதையாடல்களின் மீது சந்தேகம் கொள்ள நிறைய புதிரான செய்திகள் இருக்கின்றன. உதாரணமாக, ஆண்டியாக்கில் Antioch ஒரு கிறிஸ்துவருக்கும் ஒரு அரபி தளபதிக்கும் நடந்த மத விவாதம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை ஸ்பென்ஸர் குறிக்கிறார்.
“அதில் அந்த ஆவணத்தை எழுதியவர் அரபியர்களை முஸ்லீம்கள் என்று குறிக்கவில்லை. ஹாகரியர்கள் என்று குறிக்கிறார். “Hagarians” (mhaggraye) அதாவது ஆப்ரஹாமின் வைப்பு மனைவியும், இஸ்மாயீலின் தாயாருமான ஹாகரது மக்கள் என்ற பெயரில் குறிக்கிறார். அரபிய தளபதி இஸ்லாமிய போதனைக்கு ஏற்ப இயேசு கிறிஸ்துவின் கடவுள்தன்மையை மறுக்கிறார். ஆனால், ஒரு இடத்திலும் குரானை பற்றியோ, இஸ்லாம் பற்றியோ, முகம்மது பற்றியோ பேசவேஇல்லை. இரு புறத்திலும் பேசவில்லை.”
ஒரு ”கிறிஸ்துவ”ரிடம் பைபிள், கிறிஸ்துவம், இயேசு கிறிஸ்து பற்றியே ஒரு போதும் பேசாமல் மதத்தை பற்றி விவாதம் பண்ணுவதை பற்றி கற்பனை செய்து பாருங்கள். அவர் “கிறிஸ்துவர்” தானா என்று உங்களுக்கு ஐயம் வரத்தானே செய்யும்?
புத்தகத்தின் மைய கருத்துக்கு தாவினால், அதனைத்தான் ஸ்பென்ஸர் குறிப்பிடுகிறார். அதாவது ஏழாம் நூற்றாண்டு அரபியர்கள் ஒரு மாதிரியான ஒரு கடவுள் தத்துவத்தை பின்பற்றி வந்திருக்கிறார்கள். அது அங்கிருந்த யூத மதம், கிறிஸ்துவம் ஆகியவற்றின் கலவையாக இருக்கிறது. இந்த புதிய மதத்துக்கு ஆரம்பத்தில் பெயர் ஏதும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு ஒரு நிறுவனரும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு புனித புத்தகமும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு கடுமையான விதிமுறைகளும் இல்லாமல் இருந்திருக்கிறது. இவை அனைத்தும் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பின்னால் யோசித்து ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக கதை விடப்பட்டிருக்கிறது.
அரபிய ஆவணங்களிலும், பழம்பொருள் ஆய்வுகளிலும் எந்த இடத்திலும் குரான் பற்றிய குறிப்பே இல்லை. அது முதன் முதலில் 691இல்தான் அந்த குறிப்பு வருகிறது. அதாவது முகம்மது குரானை சொல்ல ஆரம்பித்ததாக கூறப்படுவதிலிருந்து 80 வருடங்களுக்கு பிறகு! அரபிய சமூகத்துக்கு மைய நூலாக ஆனதாக சொல்லப்படும் வருடத்திலிருந்து 60 வருடங்கள் கழித்துதான் குரானை பற்றிய குறிப்பே வருகிறது. இஸ்ரேலின் Dome of the Rock இல் எழுதப்பட்டிருக்கும் குரான் வசனமே 691இல்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் குரான் வசனமாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை. ஸ்பென்ஸர் கூறுகிறார்.
இந்த குரான் வசனமே (dome of rock கல்வெட்டு) அரபு ராணுவம் தங்கள் அருகாமை நாடுகளை குரானில் அடிப்படையில் உந்தப்பட்டு ஆக்கிரமிக்க கிளம்பி 60 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்படுகிறது. இதுவே முதல் வரலாற்று ரீதியான குரான் வசன கல்வெட்டு. இதுவும் குரான் வசனமும் குரான் வசனமற்ற கவிதையும் ஒன்றோடு ஒன்று கலந்து எழுதப்பட்டுள்ளது. குரான் வசனத்தையும் முழு குரானிலிருந்து அங்கங்கிருந்து எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போல இருக்கிறது. இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட குரானிலிருந்து எடுக்கப்பட்ட வசனமே அல்ல என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதாவது dome of rock கல்வெட்டு வசனங்களும், குரானும் அவற்றுக்கு முந்தைய கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று கருதுகிறார்கள். வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன இரண்டுமே என்று கருதுகிறார்கள்.
முகம்மதுவை பற்றிய அவர் கால செய்தி என்று சொல்லக்கூடிய மூன்றாவது பிரிவு குரான் புத்தகம். அதுவும் முஸ்லீமல்லாதவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது. ஸ்பென்ஸர் எழுதுகிறார்.
“முகம்மது என்ற பெயர் குரானில் நான்கே முறைகள்தான் வருகிறது. அதில் மூன்று இடங்களில் அவரது பெயராக இல்லாமல், “புகழுக்குரியவர்” அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பொருளிலேயே வருகிறது. இதற்கு மாறாக, மோஸஸின் பெயர் 136 முறை குறிப்பிடப்படுகிறது. ஆப்ரஹாமின் பெயர் 79 முறை குறிப்பிடப்படுகிறது. எகிப்து பரோ 74 தடவை குறிப்பிடப்படுகிறார். அல்லாஹ்வின் தூதர் என்ற rasul Allah முறையில் வெவ்வேறு வடிவங்களில் 300 தடவை குறிப்பிடப்படுகிறது. இறைதூதர் nabi என்ற வகையில் 43 முறை குறிப்பிடப்படுகிறது. இவை அனைத்தும் 7 ஆம் நூற்றாண்டில் அரபியாவில் தோன்றிய முகம்மது நபியை பற்றிய குறிப்பா? இருக்கலாம். குரானை படிப்பவர்கள் அப்படித்தான் அதனை புரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியே இருந்தாலும், அதன் மூலம் அவருக்கு நேர்ந்த நிகழ்வுகளையோ சூழ்நிலைகளையோ அவரது வாழ்க்கை பற்றியோ அறிய முடியாது.
குரான் முழுவதும், அவர் தன்னைத்தானே அல்லாஹ்வின் தூதர் என்று பல முறை கூறிக்கொள்வதையும், அவரை கீழ்ப்படிய வேண்டும் என்று மக்களிடம் கூறுவதையும் தவிர, அவரை பற்றி ஒன்றுமே இல்லை. மூன்று நான்கு முறை அவரது பெயரை குறிப்பிட்டாலும், அவரது வாழ்க்கை பற்றி ஒன்றுமே இல்லை. …
குரான் முகம்மதை பெயர் குறித்து கூறுவதை வைத்து அவ்வளவுதான் கூறலாம். அல்லாஹ்வின் தூதர் என்ற குறிப்புகளில், தூதரின் பெயர் குறிப்பிடவில்லை. அது மட்டுமல்ல, அந்த தூதரின் செயல்களும் குறிப்பிடவில்லை. ஆகவே குரானிலிருந்து முகம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஒன்றுமே அறிந்துகொள்ள முடியாது. குரானின் வசனத்தை மட்டுமே வைத்து பார்த்தால், இந்த “அல்லாஹ்வின் இறைதூதர்” என்பது முகம்மதைத்தான் குறிக்கிறது என்றும் கூறவியலாது”
என்கிறார்.
குரானில் முகம்மதுவை பற்றி எந்த விவரணையும் இல்லை. குரானின் ஆரம்பகால வரலாற்றை மிகவும் ஆழமாக ஸ்பென்ஸர் ஆராய்கிறார். இஸ்லாமிய நூல்களிலேயே, முகம்மதின் மறைவுக்கு வெகுகாலத்துக்கு பின்னரே குரான் தொகுக்கப்பட்டது என்று ஒத்துகொள்கின்றன. அதுவும் நினைவிலிருந்து பலர் சொன்னதை வைத்து அவற்றை சேர்த்துத்தான் தொகுத்தவர்கள் குரானை உருவாக்கினார்கள் என்று கூறுகிறது. அதற்கு மேலும், அவர்கள் எந்த வசனத்தை சேர்த்தார்கள் எந்த வசனத்தை விலக்கினார்கள் என்பதற்கு அரசியல், ராணுவ காரணங்கள் காரணமாக வெவ்வேறு தொகுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட போட்டி குரான்களும் இருந்தன என்று இந்த நூல்களே கூறுகின்றன.
இதேதான் ஹதீஸ் தொகுப்புக்கும். குரான் ஏறத்தாழ முகம்மதுவை பற்றி மவுனமாக இருந்தாலும், ஹதீஸ் (என்னும் மிகவும் பிற்காலத்தில் எழுதப்பட்ட இரண்டாம் கட்ட குரான் விளக்க உரை, முகம்மதுவை பற்றி மிகவும் விலாவாரியாக விளக்குகிறது. அதுவும் மிகவும் நுண்ணிய விளக்கங்களோடு இருக்கிறது. இஸ்லாமில் நம்பிக்கையில்லாத எனக்கு பெரும்பாலான இந்த விவரணைகள், வெறும் கட்டுக்கதைகள் என்றுதான் தோன்றுகின்றன. ஸ்பென்ஸர் இந்த ஹதீஸ்கள் எவ்வாறு உருவாயின என்று விளக்கும்போது, என்னுடைய அவநம்பிக்கை உறுதிப்படுகிறது. பல நூற்றாண்டுகள் கழித்து, போட்டி பிரிவுகளால் தொகுக்கப்பட்ட இந்த ஹதீஸ்கள் இந்த வாய்மொழிச்செய்திகள் யாரிடமிருந்து யார் சொல்லி வந்தது என்ற வழிமுறை வேறு சொல்கின்றன. இதனை இஸ்னாத்(isnad) என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு இஸ்நாதும் அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதுதான் என்று நிரூபிக்க எழுதுகிறார்கள். அந்த இஸ்நாத் ஆதாரப்பூர்வமானதுதான் அல்லது சரியானதுதான் என்று யார் நிரூபிப்பார்கள்?
வெவ்வேறு போட்டி பிரிவினர் தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்திக்கொள்வதற்காக ஹதீஸ்களை உருவாக்கிகொண்டதால், இந்த ஹதீஸ்கள் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவையாக இருக்கின்றன. … 8ஆம் நூற்றாண்டில் இறுதியில் அப்பாஸித் வமிச ஆட்சியாளர்கள் இந்த ஹதீஸ்களை தொகுக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும் முயன்றார்கள். இவ்வாறு தொகுத்ததால், முகம்மது எதனை அங்கீகரித்தார், எதனை அங்கீகரிக்கவில்லை, எதனை ஆணையிட்டார், எதனை தடுத்தார் என்பதற்கான செய்தி தொகுப்பை ஏராளமானதாக ஆக்கினார்கள்… இன்னும் அடுத்த நூற்றாண்டில் (9ஆம் நூற்றாண்டில்)தான் ஆறு முக்கியமான ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்படுகின்றன. அதாவது அனைத்துமே முகம்மது இறந்து, சுமார் 200 வருடங்களுக்கு பிறகு.
… … Ignaz Goldziher இக்னாஸ் கோல்ஜிஹெர் என்ற ஹதீஸ் வரலாற்றாராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார், “கட்டுக்கடங்காமல் உருவாகும் போலி ஹதீஸ்களை தடுக்க நேர்மையானவர்கள் செய்த முயற்சிதான் இலக்கியத்தின் வரலாற்றிலேயே மிகவும் வினோதமான நிகழ்வு. நல்ல நோக்கத்துடன், போலி ஹதீஸ்களை எதிர்கொள்ள போலி ஹதீஸ்கள் உருவாக்கப்பட்டன. புதிய ஹதீஸ்களை உருவாக்கி அதன் மூலம் போலி ஹதீஸ்களை உருவாக்குபவர்களை கடுமையான வார்த்தைகளில் இஸ்லாமிய இறைதூதரே திட்டும் ஹதீஸ்கள் உருவாக்கப்பட்டன”
ஒரு ஹதீஸ் போலியாக உருவாக்க முடியுமென்றால், அதன் வாய்வழி தொடர்ச்சியும் (யார் மூலமாக யார் கேட்டு யாரிடம் சொன்னது என்ற வழி) போலியாக உருவாக்க முடியும். எந்த அளவுக்கு ஹதீஸின் உள்ளுறை (matn)போலியாக உருவாக்கப்பட்டதோ அதே வேகத்தில் அதே துல்லியமாக வழிமுறை (isnad) தொடர்ச்சியும் போலியாக உருவாக்கப்பட்டது.”
ஆமாம் போலி ஹதீஸ்கள்.
அதே போல இபின் இஷாக் அவர்களால் எழுதப்பட்ட முகம்மதின் வாழ்க்கை வரலாறு நம்பகமானது என்று எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுகொள்பவர் மட்டுமே ஏற்றுகொள்ள முடியும். அல்லது எதனையாவது ஆதாரப்பூர்வமாக ஏற்றுகொள்ள வேண்டும் என்று தவிக்கும் ஆய்வாளர்கள் மட்டுமே இபின் இஷாக்கை ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாறாக எடுத்துகொள்ள முடியும். ஏனெனில் அந்த காலத்தின் வரலாறு பற்றிய ஆதாரப்பூர்வமான பதிப்பு வேறெந்த இடத்திலும் இல்லை. ஸ்பென்ஸர் கூறுகிறார்
முகம்மது இபின் இஷாக் இபின் யாஸர் என்ற முழு பெயர் கொண்ட இபின் இஷாக் ஒரு தீவிர மத நம்பிக்கை கொண்ட முஸ்லீம். அவர் எழுதிய வாழ்க்கை வரலாறே இன்றைக்கு “வரலாற்றின் முழு ஒளியும் வீசும் முகம்மதின் வாழ்க்கை வரலாறு” என்று அறியப்படுகிறது. இருப்பினும் இபின் இஷாக் முகம்மதோடு சமகாலத்தில் வாழ்ந்தவர் அல்ல. முகம்மது மறைந்ததாக சொல்லப்படும் வருடம் 632. இபின் இஷாக் மறைந்த வருடம் 773. ஆகவே அவர் எழுதிய வாழ்க்கை வரலாறு முகம்மதின் மறைவுக்கு சுமார் 100 வருடங்களுக்கு பின்னரே வருகிறது. மேலும் இபின் இஷாக் எழுதிய ஸிரத் ரசூல் அல்லா என்ற புத்தகம் அதன் ஒரிஜினல் படிவத்தில் கிடைக்கப்படவில்லை. அதுவும் அவருக்கு பின்னர் வந்த மற்றொரு இஸ்லாமிய அறிஞரான இபின் ஹிஷாம் என்பவரால் சுருக்கப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் மேற்கோள் காட்டப்படுகிறது. இபின் ஹிஷாம் மறைந்த வருடம் 834..
இறைவன் அளிக்கும் அன்பை பற்றி போதித்த அமைதியான போதகர் அல்ல இபின் இஷாக் காட்டும் முகம்மது. இபின் இஷாக்கின் முகம்மது, தனது எதிரிகளை தீர்த்துக்கட்ட ஆளை அனுப்பிய ஒரு போர்ப்படை தளபதி. ஏராளமான போர்களை நடத்திய போர்ப்படை தளபதி. இபின் இஷாக் வரையும் முகம்மதின் சித்திரம் பாராட்டத்தகுந்ததல்ல என்று வரலாற்றாய்வாளர் டேவிட் மார்கோலியோத் கூறுகிறார்…
..இபின் ஹிஷாம் தான் எழுதிய சுருக்கப்பட்ட வரலாறு சுத்திகரிக்கப்பட்டது என்று கூறுகிறார். மூலத்தில் ஏராளமான அவமானப்பட தகுந்த விஷயங்கள் இருக்கின்றன. அவை பலரை மனகஷ்டப்படுத்தும் என்று கூறுகிறார். , “things which it is disgraceful to discuss; matters which would distress certain people….”
அதாவது, எந்த வரலாற்றை அடிப்படையாக வைத்து பின்னர் வந்த வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டனவோ அந்த வாழ்க்கை வரலாறே முகம்மதின் இறப்புக்கு நூறு வருடங்களுக்குபின்னரே எழுதப்பட்டது. பத்திரிக்கைகளோ, ஆவணங்களோ இல்லாத ஒரு காலத்தில் எழுதப்பட்டது. நடந்திருக்கக்கூடிய விஷயங்களை நேருக்கு நேராக பார்த்தவர்கள் வெகுகாலத்துக்கு முன்னரே இறந்துவிட்டபிறகு இந்த வரலாறு எழுதப்படுகிறது. அந்த வரலாறும் போய், அந்த வரலாற்றை படித்த ஒருவர் அதிலிருந்து சுருக்கி, அமங்கலமான விஷயங்களை எல்லாம் நீக்கி எழுதிய வரலாறுதான் முகம்மதின் ஆதாரப்பூர்வமான வரலாறாக சொல்லப்படுகிறது. அந்த வரலாற்றாசிரியரே அமங்கலமான பல விஷயங்களை விட்டுவிட்டதாக சொல்கிறார்.
புத்தகம்
முகம்மது இருந்தாரா? இறைவனால் அருளப்படுகிறதாக சொல்லப்படுகிற புத்தகம், அதன் ஆரம்பத்திலிருந்து மாறாததாக சொல்லப்படுகிற புத்தகத்துக்கான ஆதாரத்தை இஸ்லாம் தர முடியவில்லை என்று ஸ்பென்ஸர் குறிக்கிறார்.
முகம்மது இருந்திருக்கக்கூடிய, அல்லது இல்லாமல் இருந்திருக்கக்கூடிய சாத்தியங்களை ஆராயும் இந்த புத்தகம், பல இலக்கிய தத்துவ தடயங்களை இருபுறமும் அளிக்கிறது. இந்த புத்தகத்தை படிப்பவர்கள் “அகழ்வாராய்ச்சி தடயங்களை பற்றி என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்கலாம். துரதிர்ஷ்ட வசமாக ஸ்பென்ஸர் இந்த வாதத்தை எதிர்கொள்ளவில்லை. அதற்கும் முக்கிய காரணம், தடயங்கள் ஏதும் இல்லாமையே. சவுதி அரசாங்கமும்( ஜெருசலத்தில் உள்ள டெம்பிள் மவுண்ட் மசூதியை நிர்வகிக்கும் வக்ப் நிர்வாகமும்) அகழ்வாராய்வுக்கு உரிய தடயங்களை அழிப்பதில் முன்னணியில் இருக்கின்றன. இஸ்லாமின் ஆரம்ப காலத்துக்கு தடயங்களை அளிக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் வேண்டுமென்றே அழிக்கின்றன. முகம்மதுக்கும் அவரது ஆரம்ப கால தோழர்களுக்கும் தொடர்புடையதாக கருதப்பட்ட பல இடங்களை சவுதி அரசாங்கம் அழித்து அவற்றின் மீது பல கட்டிடங்களை எழுப்பியுள்ளது. ஆகவே இஸ்லாமின் ஆரம்ப காலத்தை பற்றிய எந்த அகழ்வாராயச்சிக்கும் இன்று முயற்சி எடுக்க முடியாத சூழ்நிலை. மெக்காவின் வரலாற்றை வேண்டுமென்றே சவுதிகள் அழிப்பதற்கு காரணம், இஸ்லாமின் ஆரம்ப காலத்தை பற்றி அகழ்வாராய்ச்சிகள் நடந்தால் அவை இஸ்லாமின் வரலாறாக சொல்லப்பட்டு வருவது பொய் என்று தெரியவரலாம் என்ற அச்சத்தால் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. இந்த விஷயம் இந்த புத்தகத்துக்கு முக்கிய விஷயம் இல்லை என்றாலும், இந்த புத்தகத்தின் வாதத்தை இன்னும் வலுவாக ஆக்கியிருக்கும்.
முகம்மது வரலாற்றில் இருந்தவரா? இந்த புத்தகம் பொதுமக்களுக்காக பொதுமக்கள் மொழியில் எழுதப்பட்டுள்ள புத்தகம். இன்னொரு வகையில் சொல்லப்போனால், ஸ்பென்ஸர் தானாக எந்த ஆராய்ச்சியையும் செய்ததாக சொல்லிக்கொள்ளவில்லை. அவர் செய்திருப்பதெல்லாம், அதுவும் மிகவும் திறமையான முறையில், கடந்த நூறு ஆண்டுகளில் பல ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் ஒன்று சேர்த்து கொடுத்திருப்பதுதான். Günter Lüling, David Margoliouth, Patricia Crone ஆகியோர் எழுதிய ஆராய்ச்சிகள் இருக்கின்றன. மேலும் Christoph Luxenberg என்ற புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர், குரானை அரபி மொழி மூலமாக அன்றி, அந்த காலத்தில் புழக்கத்திலிருந்த சிரியாக் மொழி வாசிப்பில் அதனை படித்து அதற்கு இருக்கக்கூடிய வேறு பொருட்களை கொண்டுவந்தவர். அவ்வாறு ஆராய்ச்சி செய்வது பழமையில் ஊறிய இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் என்ற அச்சத்தால் புனைபெயரில் புத்தகம் பதிப்பித்தவர். இவை அனைத்து நூல்களையும் ஒருங்கிணைத்து, இந்த ஆய்வு முடிவுகளை இணைத்து, இந்த தடயங்கள் மூலம், தற்போதைக்கு இருக்கும் கொள்கை(அதாவது முகம்மது வரலாற்றில் இருந்தவர் என்ற கொள்கை)க்கு ஆதாரம் ஏதுமில்லை என்றும் அது உண்மையாக இருக்க மிகக்குறைந்த சாத்தியங்களே உள்ளன என்று கொண்டுவருகிறார். இதுவரை அறியப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், இஸ்லாம் என்ற மதம் மெல்ல மெல்ல முந்தைய யூத கிறிஸ்துவ நம்பிக்கைகள் அடிப்படை மேல் உருவாக்கப்பட்ட மதம். இந்த புதிய மதத்துக்கு அதிகாரப்பூர்வ முத்திரை கொடுக்க அதன் மீது ஒரு இறைதூதர் இருந்ததார் இவை அவர் கூறியவை என்று பின்னால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை. இந்த புத்தகத்தின் நூறு பக்கங்களுக்கு பிறகு ஸ்பென்ஸர் இந்த தேற்றத்தை தெளிவாக கூறுகிறார்.
”முகம்மது ஒரு அரபிய தூதுவர், மெக்காவில் பிறந்தார், அரபி மொழி பேசி அல்லாஹ்வின் செய்தியை அரபுகளுக்கும் பிறகு உலகத்தாருக்கும் கொண்டுவந்தார்.” இந்த வரியின் முஸ்லீமல்லாதவர்களும் பொதுவான உண்மையாக எடுத்துகொள்கிறார்கள். இருப்பினும் நுணுக்கி பார்த்தால், ஒவ்வொரு விஷயமும் கரைகின்றன. அந்த காலத்திய வரலாற்று ஆவணங்கள் எதிலுமே முகம்மது என்ற ஒரு அரபிய தூதுவர் மெக்கா அருகாமையில் இருந்தார் என்பதற்கோ அவர் உலகத்துக்கான எதாவது செய்தியை சொன்னார் என்பதற்கோ ஆதாரம் இல்லை. ஒருவேளை முகம்மது என்ற ஒருவர் இருந்திருந்தாலும், மெக்காவில் இருந்தார் என்பதற்கோ அவர் இஸ்லாமில் கூறப்படும் விஷயங்களை போதித்தார் என்பதற்கோ ஆதாரம் இல்லை. அவர் அப்படியே இருந்திருந்தாலும், அவரது வாழ்க்கை வரலாறும், அவர் கூறியதாக சொல்லப்படும் புனித புத்தகமும் அவரது மறைவு என்று கூறப்படும் வருடத்துக்கு பிறகு பல நூற்றாண்டுகள் கழித்தே உருவாக்கப்படுகின்றன.
புத்தகத்தின் இறுதிப்பகுதியில் ஸ்பென்ஸர் மூல கருத்தை விட்டுவிட்டு குரான் அரபி மொழியிலிருந்து எடுக்கப்பட்டதா என்ற ஆராய்ச்சிக்கு போகிறார். ஆனால், இவ்வறு செல்வதற்கான காரணம் வெகுவிரைவிலேயே தெரியவருகிறது. குரானின் பல முக்கியமான பகுதிகள் சிரியாக் மொழியில் எழுதப்பட்ட யூத, கிறிஸ்துவ நூல்களிலிருந்து ஏறத்தாழ காப்பி அடிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களை முன் வைக்கிறார். இஸ்லாமின் வேர்கள் அதற்கு முன்னால் இருந்த மத புத்தகங்களிலிருந்து எடுத்தாளப்பட்டவை. (அல்லாஹ்விடமிருந்து தனித்துவமாகவும் முழுமையாகவும் பெறப்பட்டதாக கூறப்படும் நம்பிக்கைக்கு மாற்றாக). அப்படியானால், “இறைதூதர்” என்ற கதையும் கடன் வாங்கப்பட்ட ஒரு கதையா?
ஏற்கெனவே இருக்கும் ஒன்றை பொய்யென நிரூபிப்பதன் பிரச்னையே அது மிகவும் உழைப்பை உறிஞ்சக்கூடியது, ஏராளமான நுண்ணிய தகவல்களை தேடுவது என்பதுதான். எந்த மாதிரியான பொதுமைப்படுத்தல்களாலும், அதன் இருப்பை மிக எளிதில் உதாசீனம் செய்துவிடவியலாது. ஒரு நூறு பெட்டிகள் உங்கள் வீட்டில் இருந்தால், அவற்றில் ஒரு வாதாங்கொட்டை எதுவும் இல்லை என்று நிரூபிக்க வேண்டுமானால், ஒவ்வொரு பெட்டியையும் திறந்து அவற்றில் வாதாங்கொட்டை இல்லை என்றுதான் நிரூபிக்க வேண்டும். அந்த எதிர்பார்ப்புக்கு இணங்க, ஸ்பென்ஸர் எத்தனை வரலாற்று ஆவணங்களை திறக்க முடியுமோ அத்தனை ஆவணங்களையும் ஆராய்கிறார். இவை அனைத்தையும் புத்தகத்தில் எழுதுவது ஒரு பொதுமக்கள் படிக்கக்கூடிய புத்தகத்துக்கு மிகவும் பெரியதாக இருக்கும். இருந்தாலும், ஒவ்வொரு வரலாற்று தடயத்தையும் மேலும் ஆராய விரும்பும் வாசகர்களுக்கு உதவியாக மிகவும் நீண்ட ஆவண இணைப்பை வழங்கியிருக்கிறார்.
தடயங்களில் தனக்கு தேவையானதை மட்டுமே எடுத்துகொண்டு ஸ்பென்ஸர் தனது புத்தகத்தை எழுதியிருக்கிறாரா? அதாவது முகம்மது என்பவரைப் பற்றிய ஆரம்ப கால இஸ்லாமின் வரலாற்று ஆதாரங்களில் அவர் இருந்தாரா என்பதற்கு சந்தேகம் வரக்கூடியவற்றை மட்டுமே எடுத்துகொண்டு, அவர் இருந்திருக்கிறார் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை உதாசீனம் செய்திருக்கிறாரா? நிபுணன் அல்லாத என்னைப் போன்ற ஒருவரால் அதனை நியாயமாக அணுக முடியாது. ஆனால், இந்த புத்தகத்தில், இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆரம்ப காலத்திலிருந்து, அதற்கு பின் ஒரு நூற்றாண்டுகளான அனைத்து ஆவணங்களையும், உதவக்கூடிய உதவாத அனைத்து வரலாற்று ஆவணங்களையும் அவர் முழுமையாக கொடுத்திருக்கிறார். விவாதமும், வன்முறையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு துறையில் இந்த புத்தகம், ஒரு அச்சமற்ற, நியாயமான பல்கலைக்கழக ஆய்வாளரின் பார்வையிலிருந்து இஸ்லாமை அணுகுகிறது. இந்த புத்தகத்துக்குப் பின்னால், இந்த ஆவணங்களை எதிர்கொள்ளாமல், இஸ்லாமின் தோற்றத்தை பற்றி தனக்குத்தானே கொடுத்துக்கொள்ளும் அங்கீகாரத்தை கேள்வி கேட்காமல், அப்படியே ஒப்புகொண்டு போகும் எந்த ஒரு ஆய்வாளரையும் சந்தேகத்துடனேயே பார்க்கும்படி வைக்கிறது.
ஐரோப்பிய, அமெரிக்க மனதுக்கு, இருண்ட காலங்கள் Dark Ages எனக்கூறப்படும் காலம் ஏறத்தாழ முழுமையாக இருண்டதாக இருக்கிறது. கிபி 600களில் நடந்த எதனையும் அறுதியுடன் கூறுவது மிகவும் மெத்த படித்த அறிஞர்களுக்கு கூட கடினமானதாக இருக்கிறது. இந்த இருண்டகாலங்களை பற்றிய இலக்கிய, அகழ்வாராய்ச்சி மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. ஆனால், இந்த கால கட்டத்தில்தான் முகம்மதின் கதையும் இஸ்லாமின் தோற்றமும் நடக்கிறது. ஆகவே, இந்த காலத்தில் தடயங்கள் கிடைக்காமல் இருப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான் என்று வாதிட இடமிருக்கிறது.
இருப்பினும், இஸ்லாமை பற்றிய வரலாற்றை ஆராயப்புகுந்தால், ஒரு சிக்கலான நிலையையே எட்ட வேண்டியதிருக்கிறது. முகம்மது இருந்ததாக கூறப்படும் காலத்தை நெருங்க நெருங்க, ஆதாரங்களும் மூலங்களும் ஆவணங்களும் அரிதாகி விடுகிறது. முகம்மதின் இறப்பு முடிந்து நூறு ஆண்டுகளுக்கு பிறகுதான் நிகழ்ச்சிகள் ஆவணப்படுத்தப்படுகின்றன. அதற்கு முன்னால், செல்வது கடினமாகிவிடுகிறது. திரை இறங்கிவிடுகிறது. அந்த திரையை கிழித்து அதன் ஆரம்பத்தை பார்க்க முடிவதில்லை. ஆகவே, நம்மால் முகம்மது ஒரு உண்மையான மனிதரா? அல்லது உருவாக்கப்பட்ட பிரமையா, அல்லது வசதியாக உருவாக்கப்பட்ட கட்டுக்கதையா என்று சொல்லமுடிவதில்லை.
இன்றைய நவீன அரசியல் சூழ்நிலையில், முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா? Did Muhammad Exist? என்ற தலைப்பே ஒரு சவால்தான். இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு, இந்த மாதிரி தலைப்பை வைத்ததற்காகவே, எதிர்ப்பு, வன்முறை, ஒதுக்கல், பத்வாக்கள் ஆகியவை வரக்கூடும் என்பதால், உண்மையில், “முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா? என்ற தலைப்பில் புத்தகம் எழுதலாமா?” என்றுதான் இந்த புத்தகத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தலைப்பு கேள்விக்கு விடை இன்றைய அரசியலில் “கூடாது” என்றுதான் இருக்கும். ஆகவே, “முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா?” என்ற கேள்விக்கும் விடை “இல்லை” என்றுதான் இருக்கும். ஏனெனில், முகம்மது வரலாற்றில் நிச்சயம் இருந்திருந்தால், அவரது இருப்பு ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட கேள்வியை கேட்பதற்கு எந்த விதமான அச்சுருத்தலும் நிச்சயம் இருக்காது. மேலும், இந்த புத்தக ஆசிரியர், முகம்மதின் வரலாற்று இருப்பை சந்தேகப்பட்டிருப்பதாலும், அவரது முடிவை எளிதில் பொய்யென நிரூபிக்க முடிந்திருந்தால், இந்த கேள்வியும் உடனே உதாசீனம் செய்யப்பட்டு மறக்கப்பட்டிருக்கும். ஆகவே, இந்த புத்தகம் விவாதத்துக்குரியதாக இருப்பதாலும், இது சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பதாலும், இந்த புத்தகத்தின் வாதங்களில் சத்திருக்கிறது என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
இயேசு வரலாற்றில் இருந்தாரா என்பதை பற்றி ஆய்வாளர்கள் ஆராயும்போது அது விவாதத்த்குரியதாக இல்லை. விவிலியத்தில் இருக்கும் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்போது அது விவாதத்துக்குரியதாக இல்லை. விவிலியத்தில் இருக்கும் நிகழ்வுகள் நடக்கவே இல்லை என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது, ஒரு சில கிறிஸ்துவர்கள் அப்படிப்பட்ட ஆய்வு முடிவுகளை வருத்தத்துடன் பார்த்தாலும், ஆய்வாளர்கள் மீது கொலை மிரட்டல் விடப்படுவதில்லை. கிறிஸ்துவம் தனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களை தாண்டி நிற்கிறது. அது தன் செய்தி தரும் வலிமையால் நிற்கிறது. அதன் வரலாற்று தகவல்களால் நிற்கவில்லை. அதே போல இஸ்லாமும் இவற்றை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
Did Muhammad Exist? by Robert Spencer ISI Books, April 2012 $27.95
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)