அறிவூட்டும் அகவுணர்வுகள் என்றால் என்ன ? - ஆசிரியர் குறிப்பு.
வேதத்தை தியானிப்பது மற்றும் ஜெபிப்பது தவிர்த்து சிந்தித்தல் எனும் பயிற்சியையும் நான் அடிக்கடி மேற்கொள்ளுகிறேன்.எனது பயணங்கள் காலை மாலை நடைகள் மற்றும் ஓய்வுநேரங்களில் இதை செய்கிறேன். சிந்திப்பதற்கான காரியங்களை சிலவேளைகளில் நானே தெரிந்தெடுத்துக் கொள்ளுகிறேன். மற்றபடி என் மனதில் அவ்வப்போது பளிச்சிடும் காரியங்களில் என் சிந்தனையை செலுத்துகிறேன். இப்பயிற்சியின் முடிவில் இக்கருத்துக்களை சுருக்கமான சிலவரிகளில் எழுதிவிடும் நிலை அடைகிறேன். இவற்றை எனது குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொண்டு இவை வேத வசனத்துக்கு இசைந்து இருக்கின்றனவா என கணிக்கிறேன். ஒரு கருத்து சத்தியம் தான் என்ற அக உணர்வு அதிகரித்ததும் அதை ஓர் அறிவூட்டும் அக உணர்வு என்றழைக்கிறேன். 1991 முதல் 1995 வரை எனது நாட்குறிப்பேடுகளில் எழுதி வைத்துள்ளவற்றின் தொகுப்பே இச்சிறு நூலாகும்.
வேதப்புத்தகங்களின் ஆக்கியோன்களைப் போல நான் இந்த அறிவூட்டும் அகவுணர்வுகள் தவறாதவை (infallible) என உரிமை பாராட்டமுடியாது. ஆனால் ஆவியானவரின் உந்துதல்களும் வேதத்தின் தத்துவங்களும் காலத்தின் நிலைமைகளும் இந்த அக உணர்வுகளின் பயனை உறுதிப்படுத்தும். தேவனது இரட்டை வரங்களாகிய ஞானத்தைப் போதிக்கும் வார்த்தைக்காகவும் அறிவை உணர்த்தும் வார்த்தைக்காகவும் அவருக்கே துதி உண்டாகட்டும். இந்த அகவுணர்வுகளின் பெரும்பாலானவை பகுத்தாயும் பாணியில் அமைந்துள்ளதால் அவை குற்றங்காணல் போல் தோன்றலாம். ஆக்கப்பூர்வமான குற்றங்காணலில் நான் நம்பிக்கையுள்ளவன். ” இடிக்கவும் கட்டவும் “ (எரேமியா.1:10)
இந்த 132 அறிவூட்டும் அகவுணர்வுகள் எந்தவொரு அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்படவில்லை. இவை ஆசீர்வாத பத்திரிகையில் அவ்வப்போது சரங்களாய் வெளிவந்தன. அதேவரிசையில் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. எந்த இரு பக்கங்களை நீங்கள் எடுத்து வாசித்தாலும் பல்வேறு காரியங்கள் மீது சிந்தனைக்கு உணவு உங்களுக்கு கிடைக்கும். ஒரே நேரத்தில் இருபக்கங்களுக்கு மேல் வாசிக்காது இக் கருத்துக்களை அசைபோடும்படி உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். பரிசுத்தாவியானவர் இக்காரியங்களை குறித்த உங்கள் அறிவை மென்மேலும் தெளிவாக்க ஜெபிக்கிறேன். இந்த அறிவூட்டும் அகவுணர்வுகளை நீங்கள் எங்கும் தாராளமாக எடுத்தாளலாம்.
இந்த அகவுணர்வுகளின் மொழி நயத்தையோ கருத்தாழத்தையோ நீங்கள் பெருக்கக்கூடுமானால் அடுத்த பதிப்புகளில் உங்கள் ஆலோசனைகளை சேர்த்துக்கொள்ள மகிழ்வுடன் ஆயத்தமாக இருக்கிறேன். நீங்கள் இச்சிறு நூலை படிப்பதினால் உங்கள் சிந்தனைக்கும் உணர்வுக்கும் பயனுள்ள பயிற்சி கிட்டும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எந்தவொரு விசுவாசியையும் குறிப்பிட்டு அவன் வரம் பெற்றவன் என்று சொல்லுவது தவறு. விசுவாசிகள் எல்லோருமே வரம்பெற்றவர்கள் தான். கிறிஸ்துவின் உடலில் வரமில்லாத உறுப்பே கிடையாது.
தேவ மக்களை குருமார்,சபையார் என்று பிரிப்பதால் இரண்டாம் குழுவினரை வேலையில்லா பெரும்பான்மையோராய் மாற்றிவிட்டோம்.நமக்குக் கொடுக்க ஆவியானவரிடம் இருப்பது ஒன்பதே வரங்களானால் அவர் சரியான கருமி அல்லது பரம ஏழை.எந்தவொரு பட்டியலாலும் தேவனை மட்டுப்படுத்த துணியாதிருப்போம்.
கிறிஸ்தவர்கள் வாசிக்காமல் வைத்திருக்கும் வேதாகமங்களையெல்லாம் சேகரித்தால் இன்னும் பல்லாண்டுகட்கு வேதப்புத்தகம் அச்சடிக்க தேவையே இருக்காது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
”அறிவூட்டும் அகவுணர்வுகள்” என்ற தலைப்பில் அண்ணன் ஸ்டான்லி அவர்கள் எழுதிய ஒரு கையடக்க புத்தகம் ஒன்று அண்மையில் எனக்குக் கிடைத்தது. அதிலுள்ளவை மெய்யாகவே சிந்திக்கத் தூண்டியதால் நாளொன்றுக்கு இரண்டாக அவற்றை இங்கே எழுத தீர்மானித்திருக்கிறேன். சுவைத்து மகிழ எனதருமை வாசகர்களை அழைக்கிறேன். ஒரு அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் இதேபோன்ற தொகுப்பை நானும் சிறுசிறு காகிதங்களில் எழுதிவைத்திருக்கிறேன். அவையெல்லாம் ஒரு குப்பையைப் போல சேர்ந்திருக்கிறது. இதனிடையே இணைய வசதி வந்தபிறகு அவ்வப்போது இங்கே எழுதி வைக்கிறேன்.
இனி...
”இல்லாவிடில்”, ”அதுவரை” ஆகிய இரண்டும் இறையரசின் திறவுகோல் வார்த்தைகளாகும்.நீங்கள் ஆவியினால் பிறவாவிடில் இறையரசில் சேரமுடியாது. ஆவியினால் நிரப்பப்படும்வரை பிறரை இறையரசில் சேர்க்கமுடியாது.