Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அநாதி கிருபையின் இரகசியம்


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
RE: அநாதி கிருபையின் இரகசியம்
Permalink  
 


chillsam wrote:

 


அண்மையில் என்னைப் பார்க்க வந்த என் நண்பர் ஒருவர் என்னுடைய அறையிலுள்ள பழங்காலத்துத் தட்டுமுட்டுச் சாமான்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டார். மேசை நாற்காலி போன்ற புதிய பொருள்களை வாங்கித் தருவதற்கு அவர் முன்வந்தார். ஆயினும் அவருடைய வார்த்தைகள் என்னைக் கொஞ்சமும் அசைக்கமுடியவில்லை. என்னுடைய தேவைக்கு அறையிலுள்ள இந்தப் பொருள்கள் போதுமானவை. தேவனுடைய ஊழியத்திற்கு ஏராளமான மற்ற தேவைகள் இருக்கும்பொழுது என்னுடைய அறையை அலங்கரிக்கும்படி பணத்தைப் பாழாக்க நான் விரும்பவில்லை. ஒரு தேவ ஊழியனுடைய தனியறையும் மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாகத் திகழவேண்டும்.

 


 
இரட்சிக்கப்படும் முன்னர் நான் மற்றவர்களை குறித்துப்பேசி பரிகாசம் பண்ணித் தொந்தரவு கொடுத்து மகிழ்ந்தேன். அவர்களோடு தமாஷாக வாதாடும்போது ஒரு சிலரே என்னை மேற்கொள்ளமுடியும். ஆயினும் முழுநேர ஊழியத்திற்கு வந்தபின்னரோ, தேவையில்லாத பேச்சுகளை ஒழிக்க முற்பட்டேன். வீணான பேச்சுகள் உரையாடல்களாகியவைகளுக்குள் நம்மை இழுத்துச் செல்லுகின்றவன் பொல்லாங்கனாகிய சாத்தானேயாவான். மதிகேடான சொற்கள் புண்படுத்துகின்றன. ஆகையால் தேவ ஊழியன் தன்னுடைய நாவை அடக்கியாண்டுக்கொள்ள அறிந்திருக்கவேண்டும்.

 இந்த இரண்டும் இப்போது அனைவரது தேவையாக இருக்கிறது. இதனை நாம் பூர்திசெய்தாலே போதும்.... மற்றவை தானாகவே வரும்... :)



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

 

sundaram1.jpg

         பாஸ்டர்.சுந்தரம் (1909-1989)

 

என்னுடைய (பாஸ்டர்.சுந்தரம்) ஊழியத்தின் தொடக்க நாட்களில் நான் தேவனுடைய ஆவியானவரால் என்னை நானே அடக்கியாண்டுக்கொள்ளும்படி நடத்தப்பட்டேன். தேவனுடைய கிருபையினால் இன்றியமையாத் தேவைகளையேயன்றி ஏனைய எல்லாத் தேவைகளையும் குறைத்துக்கொண்டேன். வாலிபனாக இருந்த அந்நாட்களில் மூன்றுவேளை நன்றாய் சாப்பிட்டு வந்தேன். ஆயினும் என்னுடைய ஊழிய ஆரம்பகால முதலிரண்டு ஆண்டு ஊழியத்தில் ஒருவேளை உணவுடன் வாழக்கற்றுக் கொண்டேன். என்னுடைய வயிறும் நாவும் சரியான கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருந்தன. எனக்கு வழங்கப்படும் உணவைக் குறித்துக் குறை சொல்லக்கூடாததென்பதனை நான் ஒரு குறிக்கோளாகக் கொண்டேன்.

 

star2.gif  ஒருநாள் ஒரு சகோதரி எனக்கு காபி வழங்கினார்கள். அதில் சர்க்கரை சேர்க்க அவர்கள் மறந்துவிட்டார்கள். சர்க்கரையில்லாக் காபியை முன்னர் நான் குடித்ததே இல்லை. அந்தச் சகோதரியிடம் சர்க்கரை கேட்க வாயெடுத்தேன். ஆயினும் ஆவியானவரோ, எனக்குள் "இல்லை, உனக்குச் சர்க்கரை வேண்டாம்" என்றார். காபியைக் குடிக்காமல் வைத்துவிடலாமென்றுகூட நினைத்தேன். ஆனால் என்னுள் வாழ்ந்த ஆவியானவரோ என்னை விடவில்லை. அதை அப்படியே குடிக்குமாறு தூண்டினார். நான் கீழ்ப்படிந்தேன்!. இவ்வாறு சிறிய சிறிய காரியங்களிலும் தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுவது அற்புதமல்லவா!. உடுத்திக்கொள்ளும் உடுப்புகளைத் தெரிந்தெடுப்பதில் நான் வீண்படுத்தியகாலம் மிக அதிகம் உண்டு. நவநாகரீகமாகத் தைக்கும் சிறந்த தையல்காரரிடமே என்னுடைய உடுப்புகளைக் கொடுப்பது என் வழக்கம். ஆயினும் நான் இரட்சிக்கப்பட்ட பிறகோ என்னுடைய உடுப்புகளிலும் மற்றவர்களுக்கு மாதிரியாக விளங்கவேண்டுமென விரும்பினேன். என்னுடைய உடைகளெல்லாம் பருத்தி நூலாடைகள்தான். இரண்டு சட்டை, இரண்டு வேஷ்டியோடு வாழ நான் கற்றுக்கொண்டேன்.

 

  • "உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு". 1 தீமோ 4:12.

பரிசுத்த பவுல் தீமோத்தேயுவுக்கு கொடுத்துள்ள அறிவுரைகளை நான் கண்டிப்பாக அப்படியே கைக்கொண்டேன். ஏனைய விசுவாசிகளுக்கு நான் ஒரு மாதிரியாக விளங்கவேண்டுமென விரும்பினேன். ஆகவே ஐம்பொறிகளையும், சிந்தனை வாழ்க்கையையும் அடக்கி ஆண்டுக்கொள்ளும்படி தேவன் எனக்குத் துணிவையும் வல்லமையையும் அருளினார். பெருந்திண்டியையும், உலகத்தின் வேஷங்களையும் நான் கைக்கொண்டேனாயின், நான் மற்றவர்களுக்கு நன்மாதிரியாக விளங்கமுடியாதென்பதனை நான் நன்றறிந்திருந்தேன்.

 

ஒருநாள் நான் கைக்கடிகாரம் ஒன்று விலைக்கு வாங்கினேன். நான் அதனை விரும்பியபடியால், மற்றவர்களுடைய கைக்கடிகாரங்களோடு ஒப்பிட்டு என்னுடையதைக் குறித்து ஒப்பிட்டு சற்று மேன்மைப் பாராட்டத் தொடங்கினேன். ஆயினும் என்னுடைய கைக்கடிகாரம்கூட என்னுடைய ஜெபத்திற்குத் தடையாயிருந்ததென்பதனைக் கண்டுக்கொண்டேன். ஆகையால் அதனைக் கொடுத்துவிட்டு, கையடக்கமான கடிகாரத்தை வைத்துக்கொண்டேன். காலந்தவறாமையை நான் குறியாகக் கொண்டு அதில் பழகினேன். என்னுடைய வாலிப நாட்களில் நான் வாங்கின அந்த கையடக்கமான கடிகாரம் பல ஆண்டுகளுக்கு எனக்கு உதவியாயிருந்தது. மேலும் செப்பனிட முடியாத நிலையினையடைந்தபோதுதான் மற்றொரு ஒரு புதிய கடிகாரம் வாங்கினேன். இரட்சிக்கப்படும் முன்னர் நான் இவ்வுலகத்தின் ஆசாபாசங்களுக்கும், நாகரீகமான வேடங்களுக்கும் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன். அடிக்கடி மாறுபடுகின்ற நவநாகரீக வேடங்களுக்கேற்ப நடந்துக்கொள்ளும்படி என் பணத்தை நான் செலவிட்டேன். தேவனுடைய ஆலயத்தில் அமர்ந்திருக்கும் அந்நேரத்திலும், ஆராதனைக் கூடத்திற்குள் நவநாகரீகமாக உடையலங்காரங்களுடன் வருகை செய்கின்ற மக்களை என் கண்கள் கவர்ந்தன. ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டபோதோ இப்பழக்கங்கள் மாறிவிட்டன.

 

அண்மையில் என்னைப் பார்க்க வந்த என் நண்பர் ஒருவர் என்னுடைய அறையிலுள்ள பழங்காலத்துத் தட்டுமுட்டுச் சாமான்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டார். மேசை நாற்காலி போன்ற புதிய பொருள்களை வாங்கித் தருவதற்கு அவர் முன்வந்தார். ஆயினும் அவருடைய வார்த்தைகள் என்னைக் கொஞ்சமும் அசைக்கமுடியவில்லை. என்னுடைய தேவைக்கு அறையிலுள்ள இந்தப் பொருள்கள் போதுமானவை. தேவனுடைய ஊழியத்திற்கு ஏராளமான மற்ற தேவைகள் இருக்கும்பொழுது என்னுடைய அறையை அலங்கரிக்கும்படி பணத்தைப் பாழாக்க நான் விரும்பவில்லை. ஒரு தேவ ஊழியனுடைய தனியறையும் மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாகத் திகழவேண்டும்.

 

கிறிஸ்தவ சமுதாயம் அதனது உட்பூசல்களினிமித்தமாக மிகவும் நெருக்கடியான கட்டத்தினூடே சென்றுகொண்டிருந்தது. கிறிஸ்தவர்கள் தங்கள் நாவை அடக்கியாண்டுகொள்ளக் கற்றுக்கொள்வார்களாயின், இந்த உட்பூசல்கள் மறைந்தொழிவது திண்ணம். இந்தக் காரியத்திலும் நன்மாதிரியைக் கைக்கொள்ளும்படி நான் விரும்புகிறேன். என்னுடைய பழைய சுபாவம் குறுக்கிட்டபடியால், தொடக்க நாட்களில் என்னுடைய தீர்மானத்தில் உறுதியாய் நிற்பது கடினமாய்த் தோன்றியது. ஆயினும் ஊக்கமாய்த் தேவனை நோக்கி ஜெபம் பண்ணினேன். அவர் எனக்குத் தேவையான கிருபையை அளித்தார்.

 

star2.gif  அவசரமான வேலையை முன்னிட்டு மலேசியாவில் மேய்ப்பர்.டைட்டஸ் இந்தியா வரவேண்டியதாயிருந்தது. கோலாலம்பூரில் அவரில்லாத நாட்களில் சபையின் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். மலேசியாவில் உள்ள அவர் சபையின் விசுவாசிகளில் சிலர் இதனை விரும்பவில்லை. எனக்கு விரோதமாக அவர்கள் மேய்ப்பர் டைட்டஸ் அவர்களிடம் முறையிட்டார்கள். சுந்தரத்தின் பாடல்கள், பிரசங்கங்களெல்லாம் நன்றாயிருக்கின்றன. அவைகளை நாங்கள் விரும்புகின்றோம். ஆயினும், அவர் எங்களுடன் நெருக்கமாகப் பழகுகின்றாரில்லை. அவருடைய வாயிலிருந்து ஒரு சில வார்த்தைகளை வரவழைப்பதும் மிகவும் கடினமாகும் என்றார்கள். மேய்ப்பர் டைட்டஸ் இதனைக்குறித்து என்னிடம் பேசினபோது அந்த சபையினர் என்னைப்பற்றி கூறிய குற்றசாட்டைக்குறித்து பெருமையோடும், நான் தேவனை நன்றியோடும் ஸ்தோத்திரிக்கிறேன்.

 

இரட்சிக்கப்படும் முன்னர் நான் மற்றவர்களை குறித்துப்பேசி பரிகாசம் பண்ணித் தொந்தரவு கொடுத்து மகிழ்ந்தேன். அவர்களோடு தமாஷாக வாதாடும்போது ஒரு சிலரே என்னை மேற்கொள்ளமுடியும். ஆயினும் முழுநேர ஊழியத்திற்கு வந்தபின்னரோ, தேவையில்லாத பேச்சுகளை ஒழிக்க முற்பட்டேன். வீணான பேச்சுகள் உரையாடல்களாகியவைகளுக்குள் நம்மை இழுத்துச் செல்லுகின்றவன் பொல்லாங்கனாகிய சாத்தானேயாவான். மதிகேடான சொற்கள் புண்படுத்துகின்றன. ஆகையால் தேவ ஊழியன் தன்னுடைய நாவை அடக்கியாண்டுக்கொள்ள அறிந்திருக்கவேண்டும்.

 

  • "நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு பாவ சரீரம் ஒழிந்துப்போகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்" ரோம 6:6.

  • "துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்". ரோம 13:14.

  • "ஆவிக்கேற்றபடி நடந்துக்கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்". (கலா 5:16).

 

(மறைந்த பாஸ்டரும், பரிசுத்தவானுமாகிய மேய்ப்பர் சுந்தரம் அவர்களின் சாட்சிகளடங்கிய "அநாதி கிருபை" என்கின்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard