1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!
2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம்.ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!
4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!
5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடியசெல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!
6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!
7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்க ளால் தயாரிக்கப்படுகி ன்றன. பாத்திரம்கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது ..!!
8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!
10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!
11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப் போம்...!!!!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)