"ஆதாம் தான் முதல் தொழிலாளி, அவனத்தான் பண்படுத்தவும் பாதுகாக்கவும் கடவுள் ஏற்படுத்தியிருந்தார்"
"எனக்கு எல்லாம் ஏதேன் தோட்டத்துல அப்படி ஒரு வேல கிடைச்சாமரியாதையாஇருந்திருப்பேன். ஜாலியா இருந்திருக்கும்"
"கடவுள் குடுத்த சாதாரண கட்டளைக்கு கீழ்ப்படியல, அதனாலத் தான் ஏதேன் தோட்டத்துல இருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டார் கடவுள். நெற்றி வியர்வை நிலத்துல விழற மாதிரி வேலை செய்ய வச்சிட்டாரு"
"இஷ்ட்டப்பட்டு செய்ய வேண்டிய வேலைய கஷ்ட்டப்பட்டு செய்ய வச்சது அந்த ஆதாமும் ஏவாளும் தான். பாவிங்க."
"ஏதோநீபெரிய யோக்கியன் மாதிரியும் ஆதாம் ஏவாள் மட்டும் தான் எல்லாத்துக்கும் காரணம் அப்படிங்கறமாதிரி பேசறே?"
"ஆமா, நான் என்ன முழு நேர ஊழியக்காரங்கள மாதிரியா, வாரம் முழுசும் சும்மா இருந்திட்டு வாரக்கடைசியில கொஞ்சமா வேல செஞ்சிட்டு நல்லா சம்பாதிக்கிறதுக்கு. நான் வேலை செஞ்சு சம்பாதிச்சிட்டு, பகுதி நேரமா ஊழியம் செய்யறேன். கடவுளுக்கு காணிக்கை குடுக்குறேன்."
"வசம்மாமாட்டிக்கிட்ட நீ. வாரக்கடைசியில வேலை செய்யற அவங்க, வாரம் முழுசும் என்ன செய்யறாங்கன்னு உனக்குத் தெரியுமா? வாரக்கடைசி பிரசங்கம், ஜெபம் ஊழியம் இதுக்கெல்லாம் பின்னால ஒரு முழு வாழ் நாளே இருக்குதுன்னு உனக்குத் தெரியுமா? ஒரே அடியில சிக்சர் எடுக்கறான்னு பாராட்டுறோம், ஆனா அந்த ஒரு ஷாட்டுக்குப் பின்னால எத்தன வருஷ உழைப்பு இருக்கு. மேட்சுக்கு முன்னால எத்தன மணி நேரம் உயிரக்குடுத்து பயிற்சி பண்ணுறாங்கன்னு தெரியுமா?"
"நான் என்ன சொல்ல வந்தேன்னா…"
"மாச சம்பளத்த வாங்கிட்டு, நேரப் போக்குக்கு ஊழியம் செய்யறவன் நீ. ஊழியத்துக்குப் போறேன்னு சொல்லிட்டு வேலைய சரியா செய்யறது இல்ல. வேலை நேரத்துல ஜெபம் பண்ணப் போறேன்னு சொல்ற. வேலைக்கு லேட்டா போயிட்டு, சீக்கிரமே வந்துடுற. வேலை செய்யற இடத்துல நல்ல பெயரே கிடையாது. இது என்ன ஊழியமோ?"
"அடடா நாட்டு நடப்ப சொன்னா கோவிச்சுக்கிறீங்களே?"
"ஆமாநாட்டுல ரெண்டு வகையிலேயும் நடப்பு இருக்குது. உன்ன மாதிரி டுபாக்கூர் பார்ட் டைம் ஊழியர்களும் இருக்கறாங்க, உண்மையும் உத்தமமுமா வேலையை செய்துட்டு மற்ற நேரத்துல ஊழியம் செய்யறவங்களும் இருக்கறாங்க. முழு நேர ஊழியர்னு சொல்லிட்டு, பிழைப்புக்கு ஊழியம் செய்யறவங்களும் இருக்காங்க."
"அப்போநான் ஊழியம் செய்யலன்னு சொல்றீங்களா?"
"நீபண்றது அட்டூழியம்னு சொல்றேன்.ஒழுங்காவேலைசெய்யற இடத்துல நேர்மையாவேல செஞ்சு கடவுளுக்குநல்ல பெயரை வாங்கிக்குடு. அது தான் முதல் ஊழியம். அப்புறமா மற்ற நேரங்கள்ள மத்தவங்களுக்கு சுவிசேஷம் சொல்லலாம்."
"எனக்கு வேலையில மனசேஒட்ட மாட்டுக்குது, கடவுளுக்காக ஏதாவது செய்யணும்னு துடிக்குது மனசு."
"வேலைய விட்டுட்டு ஊழியத்துக்குப் போறது தானே?"
"ஆனாஎனக்கு முழு நேர ஊழியத்துக்குப் போறதுக்கு கடவுளோட அழைப்பு இருக்கற மாதிரி தெரியலியே?"
"அது எப்படி இருக்கும்?வேலைய விட்டுட்டா… மாசாமாசம் சம்பளத்த வாங்கி நல்லா செலவு செஞ்சிட்டு, ஆன்மீக நேரப் போக்குக்கு ஊழியம்னு எதையோ செஞ்சிட்டு, அப்புறமா மத்த முழு நேர ஊழியக்காரங்கள எல்லாம் குறை சொல்ல முடியாது இல்லியா?"
"ஐய்யோசாமி,நான் இனிமேபகுதி நேர ஊழியத்துக்குப் போகல, சரி தானா?"
"அப்போ முழு நேர ஊழியத்துக்குப் போகப் போறியா? உனக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்கள்."