அருள்வந்தால் குறைந்தபட்சமாக இரண்டு வார்த்தை சொல்லலாம், அதிக பட்சமாக திருநீறை எடுத்து வீசலாம்... ஆனால் இதென்ன, எல்லாரும் பார்க்கும் படியாக, குழந்தைகள் பயப்படும்படியாக, உயிருள்ள ஒரு ஆட்டை பிடிச்சு, அதன் குரல்வளையை கடிச்சு, ரத்தம் குடிச்சு...பார்க்க பெரியவகளான நமக்கே பயமாயிருக்கே...இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். இந்த மாதிரி அருளாளிகளோட பார்வை பாய்ச்சல் எல்லாம் அப்பிராணிகளான ஆடு,கோழிகள் மீதுதான் இருக்கும்... காட்டுக்குள்ளே போயி கரடி, புலிகிட்ட இந்த வீரத்தை காண்பிச்சா பரவாயில்லை,செய்வாகளா?