Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நிக் - ஒரு அதிசயப் பிறவி


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: நிக் - ஒரு அதிசயப் பிறவி
Permalink  
 


429508_550485681639422_213516091_n.jpg

Hi Friend, this is a personal testimony of Nick Vujicic, the man without arms and legs. Please read and be encourage..

My name is Nick Vujicic and I am thankful to have been born 30 years ago with no arms and no legs. I won’t pretend my life is easy, but through the love of my parents, loved ones, and faith in God, I have overcome my adversity and my life is now filled with joy and purpose. I reside now in California with my wife, Kanae, and we both love seeing people’s lives changed for the better or touched in some way. It is my hope that your life is positively impacted by my story.

I was born and raised in Melbourne, Australia, and it was a shock to my parents that I arrived without limbs. There is no medical reason for it. My parents did their very best to keep me in the mainstream school system and give me every opportunity to live to the fullest. I was blessed to have a brother and a sister as my best friends too.

We later moved to Brisbane, Australia, where I lived for 14 years before I made the move to California. At age eight, I could not see a bright future ahead and I became depressed. When I was ten years old, I decided to end my life by drowning myself in a bathtub. After a couple attempts, I realized that I did not want to leave my loved ones with the burden and guilt that would result from my suicide. I could not do that to them.

I wasn’t depressed my entire childhood, but I did have ups and downs. At age thirteen I hurt my foot, which I use for many things like typing, writing and swimming. That injury made me realize that I need to be more thankful for my abilities and less focused on my disabilities.

When I was fifteen years old, I sealed my faith in God and from there it has been an amazing journey.

A janitor at my high school inspired me to start speaking about my faith and overcoming adversity when I was seventeen. I spoke only a dozen times to very small groups over the next two years. Then I found myself in front of three hundred sophomore (grade 10) students and I was very nervous. My knees were shaking. Within the first three minutes of my talk, half the girls were crying, and most of the boys were struggling to hold their emotions together. One girl in particular was sobbing very hard. We all looked at her and she put her hand up. She said, “I am so sorry to interrupt, but can I come up and hug you?”

She came hugged me in front of everyone, and whispered in my ear, “Thank you, thank you, thank you. No one has ever told me that they loved me and that I am beautiful the way I am.”

Her gratitude inspired me to go across 44 countries and speak 2,000 times. I realized that we all need love and hope and that I was in a unique position to share that with people around the world.

While majoring in both accounting and financial planning at a university, I also worked on developing my abilities as a speaker. I worked with a speaking coach who helped to cultivate me as a presenter. He especially worked on my body language as my hands flew everywhere at first!

I spoke on motivational topics after creating the company, attitude is altitude. I also launched a non-profit ministry, life without limbs, to spread my messages of faith and hope around the world.

Whoever you are, wherever you’re from and whatever you are dealing with, I hope that you will be inspired by my story and my message. Please enjoy browsing around this website where I share with you my thoughts on faith, hope and love to encourage you and to help you overcome your own challenges.

Dream big my friend and never give up. We all make mistakes, but none of us are mistakes. Take one day at a time. Embrace the positive attitudes, perspectives, principles and truths I share, and you too will overcome.

JUST TYPE AMEN and CLICK THE SHARE BUTTON FOR OTHERS TO LEARN TOO.

Be encourage always..

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

26271_357131664391524_593065001_n.jpg

நிக் - ஒரு அதிசயப் பிறவி

நான் பிறந்தவுடன் என்னை பற்றி கேள்விப்பட்ட என் தாயும் தகப்பனும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டனர். என் அப்பா மருத்துவரிடம் சென்று என் மகனுக்கு ஒரு கை இல்லையா என்று கேட்டார். மருத்துவர் "ஒரு கை மட்டும் அல்ல. அவனுக்கு இரு கையும், இரு கால்களும் இல்லை" என்று கூறினார். என் பெற்றோரால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் கடவுளை அதிகமாக நம்பினதால் அவர் மீது வைத்திருந்த விசுவாசத்தை விடவில்லை. என் தாய் முதல் 4 மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு கஷ்டப்பட்டார்கள்.

தேவன் நிச்சயம் ஓர் திட்டம் வைத்திருப்பார் என்று என் பெற்றோர் நம்பினார்கள். நான் தேவனிடம் சாவல் விட்டேன். "தேவனே, நான் ஒரு பாவி என்று தெரியும். ஆனால் நீங்கள் எனக்கு இந்த பதிலை தர வேண்டும். ஏன்? ஏன் என் இருகைகளையும் கால்களையும் எடுத்துவிட்டீர்கள். மற்ற எல்லோருக்கும் கொடுத்திருக்கும் பொது ஏன் எனக்கு கொடுக்கவில்லை. நீர் இதற்கு பதில் தரவில்லை என்றால் நான் உமக்கு எதுவுமே செய்ய மாட்டேன்".

கடவுள் என்னுடைய கேள்விக்கு பதில் தராவிட்டால் நான் என்னை முடித்துக்கொள்வேன். என்னுடைய 8ம் வயதில் தற்கொலை செய்துகொள்ளும் விதமாக தண்ணீரில் குதித்தேன். அனாலும் காப்பாற்றப்பட்டேன். அதன் பிறகு என் பெற்றோர் என் மீது வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கையை தெரிந்துகொண்டேன்.

என் தாய் என்னிடம் கூறினார்கள். நிக், நிச்சயம் தேவன் உன்னை பயன்படுத்துவார். எனக்கு எப்போ எங்கே என்று தெரியாது.

இந்த வார்த்தை என்னில் கிரியைசெய்தது. நாம் சரீரத்தில் உடைபட்டிருப்பதை விட இருதயத்தில் அவருக்காக உடைபட வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் தேவன் என்னை பயன்படுத்த முடியும் என்று தெரிந்து கொண்டேன்.

என்னுடைய 15ம் வயதில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டேன். யோவான் 9: 2,3 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.

2 தீமோத்தேயு 3:16. வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது;

என்று எழுதப்பட்டுள்ளது. நான் விசுவாசிக்கிறேன், தேவன் எனக்குள்ளாக சுவாசத்தையும், விசுவாசத்தையும் ஊதியிருக்கிறார். இந்த விசுவாசமும், சமாதானமும் என்னை வழிநடத்துகிறது. என் தேவன் என் கேள்விக்கு பதில் கொடுத்து விட்டார் என்று விசுவாசிக்கிறேன். ஏன் என்று கேட்ட கேள்விக்கு தேவன் கொடுத்த பதில் "நீ என்னை விசுவாசிக்கிறாயா?" நான் "ஆம்" என்று சொன்னேன். அது போதும், வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை.

நான் எதற்காக இங்கே இருக்கிறேன் என்கிற உண்மையை இயேசு கிறிஸ்துவுக்குள் அறிந்துகொண்டேன். வேறு எங்கும் இல்லை. பலர் என்னை பல விதங்களில் குறை கூறி உள்ளனர். நீ எதற்கும் லாய்க்கியில்லை என்று உதறி தள்ளினர். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் உண்மையை கண்டுபிடிக்கவில்லை என்றால் பொய்கள் தான் உண்மை என்று நம்பவேண்டும். நாம் வேதத்தை வாசிக்கும் போது நாம் யார் என்கிற உண்மை புரியும். நான் மனிதன் அல்ல. தேவனின் பிள்ளை. பாவம் கழுவப்பதினால் ராஜாதிராஜாவம் இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.

இது நிக் அல்ல. எனக்கு கொடுக்கப்படும் அனுதாபங்கள் இல்லை. நான் ஒன்றும் இல்லாதவன். கடவுள் எனக்குள் வாழ்கிறார். அவருடைய பலத்தில் நான் இருக்கிறேன். இயேசு என்ன செய்தாரோ நானும் செய்கிறேன்.

எனக்கு தேவன் அதிசயத்தை செய்யாமல் போனாலும் நான் அவருடைய திட்டத்தில் இருக்கிறேன். ஊழியம் ஆரம்பித்த புதிதில் சுமார் 200,000 பேர் இரட்சிக்கப்பட்டார்கள். யாராவது ஒருவரையாவது இயேசுகிறிஸ்துவுக்குள் வழிநடத்துங்கள். ஆமென் ....

சகோதிர சகோதிரிகளே... அருமையான ஓர் சாட்சி அல்லவா. நம்மை பற்றி சிந்திப்போம். நாமும் தேவனுடைய திட்டத்தின் படி இங்கே இருக்கிறோம். அந்த உண்மை நமக்கு புரிகிறதா? உங்களிடம் என்ன குறைகள் உண்டு? அதை தேவனிடம் கொடுங்கள். தேவன் உங்களை பன்மடங்காக உயர்த்துவார். நிக் சுமார் 24 நாடுகள் (இந்தியா உட்பட) சென்று பல லட்சம் பேர்களை கடவுளுக்குள் வழிநடத்தி உள்ளார். உங்களை தேவன் அழைத்த விதங்களில் பயன்படுத்துவார்.

மோசேவுக்கு திக்கு வாயன் - தேவன் பயன்படுத்தினார்
தாவீது ஆடு மேய்ப்பவன் - தேவன் பயன்படுத்தினார்
எரேமியா பேசத்தெரியாதவன் - தேவன் பயன்படுத்தினார்
பேதுரு மறுதலித்தவன் - தேவன் பயன்படுத்தினார்

ஒன்றே ஒன்று தான். மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள் என்பதுபோல் நீங்களும் இயேசு கிறிஸ்துவை முழுமனதுடன் நம்பி அவரை தினமும் தியானியுங்கள். அதிகாலையில் வேதம் வாசித்து ஜெபம் செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். தேவன் உங்களை உயர்த்துவார். உங்களிடம் சரீர பிரகாரமான குறைகள் உண்டா? தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் குறைகளை தேவன் நிறைவாக்குவார்.
யோவான் 9:3 அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.  நீங்கள் கிறிஸ்துவின் செய்கைகளை வெளிப்படுத்தும்படி இப்படி பிறந்துள்ளீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக... ஆமென்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard