உனக்கு நிகரானவர் யார் ? - இந்த உலக முழுவதிலுமே . தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு
- எனும் கீர்த்தனைக்கு ஏற்ப இங்கே ஒரு நண்பர் செயல்பட்டிருக்கிறார். இந்த செய்தியிலிருந்து...
தனது உற்ற நண்பனை ஒரு பாம்பு கடித்துவிட்டதை உணர்ந்ததும் தீவிரமாக செயல்பட்டு தனது நண்பனின் உயிரைக் காப்பாற்ற ஏற்பாடு செய்துவிட்டு மறுகையில் அவனைக் கடித்த பாம்பைப் பிடித்து ஆஸ்பத்திரிக்கு ஓடியிருக்கிறார். அதற்குக் காரணம், கடித்த பாம்பைக் குறித்து அறிந்தாலே அதற்கேற்ற வைத்தியம் செய்து தனது நண்பனை மருத்துவர் காப்பாற்றமுடியும் என்பதே. தனது நண்பன் பிழைத்துக்கொள்ளுவான் என்ற நம்பிக்கையுண்டானதும் நண்பனைக் கடித்த பாம்பை அடித்துக்கொல்லுகிறார்.
இந்த செய்தியை வாசித்ததும் தேவ குமாரனாகிய இயேசுவானவர் செய்த மாபெரும் காரியம் நினைவலைகளில் எழும்பி மெய்சிலிர்த்தது. என்னருமை நண்பனே, நம்முடைய உற்ற நண்பரான இயேசுவானவர் நம்மை பிசாசின் வல்லடிக்கு மாத்திரம் காப்பாற்றவில்லை. நம்மை அந்த நிலைக்குத் தள்ளிய பிசாசையும் அழித்திருக்கிறார். இப்போது அவரை ஏற்றுக்கொள்ளவேண்டிய காரணம் உனக்கு புரிகிறதா ?
-- Edited by HMV on Wednesday 27th of March 2013 10:47:28 AM