தோழர்..தோழர் என்று வாய் நிறைய சொல்லுகிறாய்
தோழி என்று சொன்னால் பெண்ணடிமைத்தனம் என்று
தோழர் என்றே பெண்ணையும் சொல்லுகிறாய்
தோழமையில்லாமல் தோழர் என்று சொல்லுவாயா ?
தோழமையின் அர்த்தம் அறிவாயா ?
ஒரு பொருளின் ஆழத்துக்குச் செல்லாமலே
நுனிப்புல் மேய்வாயோ ?
தோழமையின் தத்துவம் உனக்கு தெரியுமோ ?
இயேசு என்றொரு மகான்
அவ்ர் வரலாற்று புருஷர்
அவரை அறிவேன் என்று சொல்லியும்
அவரையும் நீ உணர்ந்தாய் இல்லை
அறிவதே அறிவு என்பதை
தப்பர்த்தம் கொண்டாயோ ?-நீ
அறியாததைக் குறித்து
அறிந்ததைப் போல
அலப்புவதா நாத்திகம் ?
தன்னை எதிரிகளிடம் காட்டிக்கொடுத்தவனையும்
சிநேகிதனே என்று அழைத்தவர் இயேசு.
சிநேகத்துக்கான அடையாளமாக தம்
இன்னுயிரைத் தந்தவர் இயேசு.
தம் சீடர் அனைவரும்
சிநேகத்தில் தம்மைப் போலிருக்கவே
இறைவனிடம் இறைஞ்சியவர் - அந்த
சிநேகத்தை சமுதாய மறுமலர்ச்சிக்கான
வித்தாக ஊன்றியவர் இயேசு.
நீ விதைக்கப்படாவிட்டால் பலன் தரமாட்டாய் என்று
அறைகூவல் விட்டவர் இயேசு. -அதில்
தம்மையே விதைத்தவர் இயேசு.
அவர்தம் அருமையும் பெருமையும் நீ
உணராவிட்டாலும் அவரை சிறுமைப்படுத்தாதிருக்கலாமே ?
ஒரு சினிமாக்காரனிடம் காட்டும் கரிசனையைக் கூட
யுகப் புரட்சிக்கு வித்திட்டு, இன்றும்
எங்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவரிடம்
காட்ட மறுப்பது ஏன் ?
சினிமாவைக் குறித்து ஆர்வமாக அலசும் நீ
சத்தியத்தை ஆராய மறுப்பது ஏன் ?
சத்தியத்தினால் புகழடையமுடியாது என்ற
சுயநலம் தானே ?
இயேசுவை சிலுவையில் அறைந்து அவமானப்படுத்தி
சுற்றிநின்று தூஷித்த -இரும்பு
மிருகங்களைவிட நீ மோசமானவனா ?
ஓயாமல் பொதுவுடைமை பேசுகிறாய் ஆனாலும்
உனக்கென்று தனி அங்கீகாரம் தேடுகிறாய்.
(தொடரும்...)