Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொங்கல் பண்டிகை கொண்டாடுவது தவறா ?
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
பொங்கல் பண்டிகை கொண்டாடுவது தவறா ?
Permalink  
 


Vijay Kumar
ரோமர்களின் சூரியக் கடவுளது பிறந்தநாளை இயேசு பிறப்பின் பண்டிகையாகக் கொண்டாடி "ரோமர் 14:6- சொல்லுகிறபடி நாட்களை கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்வது தவறில்லை" என்று சொல்லும் கூட்டத்தினர் தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கலை "அறுப்பின் பண்டிகையாக" தமிழ் பற்றுள்ள கிறிஸ்தவர்கள் விசேஷித்துக் கொண்டால் அதை அனுமதிப்பார்களா???
 

Ponnudurai Joseph
பொங்கல் திருநாளம என்பது தமிழ்திருநாள். ஒவ்வொரு தமிழனும் மதபாகுபாடில்லாமல் கொண்டாடும் திருநாள். திருவள்ளுவரின் பிறந்தநாள் அன்று வருவதால் தமிழறிஞ்சர்களின் வேண்டுகோளின்படி தை மாதம் முதலாம தேதியில் கொண்டாடப்படுகின்ற தமிழ் திருநாளை தமிழ் வருடப்பிறப்பாக அறிவிக்கப்பட்டது தமிழக அரசால் கலைஞர் அவர்கள் ஆட்சியில்.

தமிழனாக பிறந்த எவனும் தமிழ் திருநாளை கொண்டாடினால் அதற்கு மதசாயம் பூசுகிறவன் மடையன் அதாவது மாங்கா மடையன். பெங்களூரில் இருந்தால்கூட நான் என் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பொங்கல் பண்டிகையை வெகுவிமர்சையாக வருடாவருடம் கொண்டாடுவோம். வீட்டன் முற்றத்தில் கோலம் போடுவதும் எந்த விதத்திலும் தவறு ஆகாது. எந்த ஊரில் இருந்தாலும் சரி பொங்கல் பண்டிகையை என் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வெகு விமர்சையாக கொண்டாடுவேன். ஏனெ;றால் நான் தமிழன். பொங்கல் என் பண்டிகை.

சரி பொங்கலுக்கும் கிறிஸ்ஸ்க்கும் என்ன லிங்க்????? புரியலையே விஜய் !!!!

என் காததருடைய பிறந்த நாளில் ரோமானியருடைய சூரியக்கடவுளின் முக்கிய பண்டிகை வருவதனாலோ கிரேக்கருடைய சந்திரக்கடவுளின் பண்டிகை வருவதாலோ நான் சூரியனையோ அல்லது சந்திரனையோ வணங்கப்போவதில்லை. அம்மாவாசை நாளில் என் கர்த்தருடைய பிறந்த நாள் வந்தால் நான் பூஜை செய்யப்போவதில்லை.

அதேபோல் பொங்கல் நாளில் என் சொந்தக்காரர்கள் சூரியனுக்கு பூஜை செய்வார்கள் நான் பொங்கல் கொண்டாடினால் நான் பூஜை செய்வதாகவோ அல்லது சூரினை வணங்குவதாகவோ ஆகாது.

அதனால் கிறிஸ்மஸ் கொண்டாடுவதும் பொங்கல் கொண்டாடுவதும் எந்தவிதத்திலும் தவறு ஆகாது. அது சந்தோஷமாகதான் இருக்கும்.



http://www.facebook.com/bro.vijay/posts/4558956445264


ஒற்றுமையில் வேற்றுமையும் வேற்றுமையில் ஒற்றுமையும் காணும் தமிழ்க் கிறிஸ்தவர்களின் போர்ப்படைத் தளபதிகளுக்கு (பொங்கல்) வாழ்த்துக்கள். மாற்றுக் கருத்தை எதிர்கொள்ளும் திறனில் பாபிலோனின் செல்லப் பிள்ளைகளாகவும் எழுத்திலும் பேச்சிலுமோ எருசலேமின் கழுதைக் குட்டிகளாகவும் காட்டிக்கொள்ளுகிறார்கள்,சிலர்.

Raj Kumar
இந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் கண்டும் கானாதது போல நடித்து அடுத்த கேள்வியைக் கேட்கக் கிளம்பிவிடுவீர்கள்.. அதனால் கண்டும் காணாமல் போவது உத்தமம்


Vijay Kumar
ம்ம்ம்ம்...பதில் தர இயலாத போதெல்லாம் பரிசேயர்கள் பரிகாசத்தில் இறங்கி விடுவார்களாம், "பைபிள் அங்கிள்" என்று தன்னை அழைத்துக்கொள்ளும் சகோதரன் ராஜ்குமார் அவர்கள் இங்கு கவுண்டமணியாக மாறியிருக்கும் காரணமும் அதுதான் என்று நினைக்கிறேன்.

மேற்காணும் பின்னூட்டத்தில் கிறிஸ்துவுக்குள்ளான தன்னைப் போன்ற மற்றொரு சகோதரனை பரிசேயன் என்று இகழுவதில் உலகம் உள்ளே வந்துவிட்டது போலிருக்கிறது.


-- Edited by HMV on Thursday 17th of January 2013 09:15:15 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard