Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: படைப்பின் திட்டத்தில் பெண் இல்லை...செக்ஸ் சுவிசேஷகரின் தில்லுமுல்லு அறிவிப்பு
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
படைப்பின் திட்டத்தில் பெண் இல்லை...செக்ஸ் சுவிசேஷகரின் தில்லுமுல்லு அறிவிப்பு
Permalink  
 


பெண்ணைப் படைப்பது என்பது இறைவனுடைய திட்டத்திலேயே இல்லையாம்...கள்ள உபதேசிகள் அவசர அறிவிப்பு..!!! வேதப்புரட்டர்களான இவர்களுக்கு என்ன நேருமோ, நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது. படைப்பின் திட்டத்திலேயே இல்லாத பெண் படைக்கப்பட்டுவிட்டதாலேயே இவர்கள் அடிக்கடி ஹோமோசெக்ஸ் பற்றி பேசி மனதை ஆற்றிக்கொள்ளுகிறார்கள் போல..!

 

by Jeyakumar Hosanna on Tuesday, 8 January 2013 at 13:01 ·
Jeyakumar Hosanna

குளவி (Hornet) கூட்டில் கை போட்டவன் கொட்டு வாங்காமல் தப்பினதில்லை என்று கேள்விபட்டிருக்கிறேன். அவசிய செய்தி என்பதால் வலியை தாங்கிகொள்ள முன் வந்துள்ளேன். க(கொ)டுமையான விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகிறது. சிறந்த விமர்சனத்திற்கு பரிசு கொடுக்கலாமா என்ற யோசனையில் உள்ளேன்

 

தேவ திட்டத்திற்கு வெளியே : 

        ஆண்டவரின் படைப்பின் முதல் வரைபடத்தில் பெண்கள் இல்லை என்ற உண்மையை தாழ்மையாய் எடுத்துவைக்க விரும்புகிறேன். (ஆதி2:18 பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.) மேற்கண்ட வசனத்தின்படி ஆதாம்தான் தேவ திட்டத்தில் உள்ளவன். ஆதாமின் நிலை கண்டு பிற்பாடு தேவனின் மனதில் தோன்றிய திட்டம்தான் பெண்ணை படைக்க வேண்டும் என்பதாகும். ஆண்கள் ஆதியில் படைக்கப்பட்டவர்கள். பெண்கள் பாதியில் படைக்கப்பட்டவர்கள். சாதாரணமாக சொல்லணும் என்றால் புற்றீசல்கள். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள். ஹா ஹாஹா......... 

ஏற்ற துணை (Helper) :   

        உலகம் எப்போதும் சாத்தானோடும் அவன் தந்திரங்களோடும்தான் கூட்டு சேர்ந்து நிற்கும். உலகம் எப்போதும் பெண்கள் ஆணுக்கு இணை என்று சொல்லிக்கொடுக்கும். ஆனால் ஆண்டவர் பெண்ணை ஆணுக்கு துணையாய்தான் படைத்தார்.  (I கொரி 11:9 புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப் பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.). அதாவது ஒரு மருத்துவருக்கு துணையாய் தாதியர் உதவியாய் பணிசெய்வது போல் ஸ்த்ரீ புருஷனுக்கு துணையே. இன்று சிலர் கணையாய் செயல்படுகிறார்கள் அது வேறு விஷயம். உலகம் தலைவன், தலைவி என்று சொல்லிக்கொடுக்கும். ஆனால் வேதம் தலைவன், துணைவி என்பதையே வலியுறுத்தும். நான் தலைவி என்று கூறுகிறவர்களால் புருஷனுக்கு எப்போதும் தலைவலிதான் மிஞ்சும். தலைவி வாழும் வீட்டில் வசிக்கும் புருஷனுக்கு தினம் தினம் ஆபத்து கடந்து வரும்.

சொத்துக்கள் :     

      அக்காலத்தில் பெண்கள் சொத்துக்களை போல் எண்ணப்பட்டார்கள். ஒருவன் எவ்வளவு சொத்து வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஒரு புருஷன் எத்தனை மனைவி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், ஆனால் ஒரு பெண் ஒரு புருஷனோடுதான் வாழ வேண்டும் என்பது நியமம். தேவனால் புகழப்பட்ட பக்தர்கள் பலரும் அக்காலத்தில் பல ஸ்திரீகளை வைத்திருந்ததாக நாம் காண முடிகிறது. தாவீது அடுத்தவன் மனைவியை தொட்டு தவறு செய்தபொது கொதித்தெழுந்த கர்த்தர் நாத்தானை அனுப்பி தாவீதே (II சாமுவேல் 12:8) உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்............ என்று சொன்னதை கவனித்தீர்களா?? விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமின் செயலை கவனித்தீர்களா? வேலைக்காரியை (ஆகார்) மனைவியாக்கியதை. நான் நினைக்கிறேன் ஆடு மாடுகளுக்கு கொடுக்கும் மதிப்பைதான் அக்காலத்தில் பக்தர்கள் கொடுத்திருக்கிறார்கள். இக்காலத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அக்காலத்தில் சமுதாய சீரழிவு கொஞ்சம் குறைவுதான்.

வீட்டை கட்டுதல் :

      முதல் வகுப்பிலே தேர்ச்சி அடையாத மாணவி எப்படி பத்தாவது வகுப்பில் தேர்வு எழுத முடியும்? அது போல சொந்த வீட்டை கட்ட தெரியாத ஒரு பெண்ணால் நாட்டை எப்படி கட்ட முடியும்? அப்படி செய்ய முற்படுவது வெறும் வேஷம். ஆண்களுக்கு வீட்டை கட்டும் அபிஷேகம் இல்லை என்பதை நான் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். ஒரு வேளை கடுமையான முயற்சியினாலும் பயிற்ச்சியினாலும் என்னால் கொஞ்சம் வீட்டைகட்ட அறிந்து கொள்ளலாம். ஆனால் வீட்டை கட்டும் அபிஷேகம் பெண்களுக்கு உரியதே! இதை பெண்கள் கொஞ்சம் கவனிப்பார்களா?? ஆனால் நாட்டை கட்ட கொடி பிடித்துக்கொண்டு வீதிக்கு வருவதை விதி என்பதா? இல்லை இவர்களின் மதி என்பதா?? பெண்ணே வீதியில் இறங்கி கூச்சலிடுபவளுக்கு என் வேதம் வேறு பெயர் போட்டு அழைக்கிறது என்பதை விளங்கிக்கொள்.

கண் போன்றவள் :

      மனிதனுக்கு கண் மிக முக்கியம். அது போல் மனித வாழ்வுக்கு பெண் மிக மிக முக்கியம். கண் தனது கடமையை உணர்ந்து செய்யும் வரை கண்ணால் மனிதனுக்கு பிரயோஜனம்தான். கண் நான் தலையாய்தான் இருப்பேன் என்று பிதட்டக்கூடாது. இன்றைய பெண்கள் நாங்கள் பலசாலிகள் என்று பிதட்டுகிறார்கள் ஆனால் எனது வேதமோ (Iபேதுரு 3:7) அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால்,.........என்று நீ பெலகீனமானவள் என்றுதான் கூறுகிறது. அம்மா! தாயே! வாய் போதாதம்மா? அபிஷேகம் வேண்டும்.குயிலுக்கு தேவை இனிமையான் குரல் அது போல் பெண் இனிமையாய் பழகுகிறவளாய் இருக்க வேண்டும். சாந்தம் என்ற குணம் மிகுதியாய் இருக்க வேண்டும். பெண்ணிற்கு நாணம் மிக  முக்கியம் என்று வேதம் கூறுகிறது. அதைவிவிட மானம் மிக மிக முக்கியம் என்றும் அதே வேதம் கூரத்தான் செய்கிறது. (I தீமோத்தேயு 2:10 தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.) பெண்ணே உனக்கு கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் கூடக்காரணம் என்ன தெரியுமா? இயேசு ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்ததால்தான்

முடிவு :

       ரோமர் 12:3 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.  என்ற வேத வசனத்தின்படி தேவன் நம்மை வைத்திருக்கும் அந்த நிலையில் யோசிக்க வேண்டும், செயல்படவேண்டும். மிஞ்சி எண்ணக்கூடாது.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard