Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பைபிள் பெண்ணடிமை புத்தகமாம்- ஒரு இறைமறுப்பாளரின் அவதூறு.
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
RE: பைபிள் பெண்ணடிமை புத்தகமாம்- ஒரு இறைமறுப்பாளரின் அவதூறு.
Permalink  
 


விவாதம் இன்னொரு திரியில் தொடருகிறது...பின்வரும் தலைப்பில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கட்டுரையில் பைபிள் ஸ்தீரிகள் பேசுவதற்கு தடைசெய்து பெண்களுக்கு பெரிய கொடுமை செய்துவிட்டதாக புலம்புகிறது...அதை ஒரு கிறிஸ்தவனும் கண்டிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

by மகிழ்நன் பா.ம on Thursday, 7 June 2012 at 12:09 ·
மேற்காணும் தலைப்பில் பதிக்கப்பட்டுள்ள அவதூறு கட்டுரையில் நாம் பதித்துள்ள கருத்துக்கள்...முழு விவரம் அறிய, தொடுப்பைத் தொடரவும்.


/// இந்தியாவில் சென்னை மாகாணத்தில் 1921 இல் நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கான வாக்குரிமை ஆண்களை போலவே வழங்கப்படுகிறது. அதுவும் கற்ற, பணக்கார பெண்களுக்கு மட்டுமே. ஆண்களுக்கும் அன்றைய சூழலில் இருந்த வாக்குரிமை இதுபோன்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ///


நிபந்தனையற்ற வாக்குரிமை வழங்கப்பட்ட பின்னர் தேசத்தின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதையும் யோசித்தால் நல்லது.

ஆண்,பெண் ஆகிய இருவருக்கும் சம உரிமையே பைபிளில் வழங்கப்பட்டுள்ளது.ஆனாலும் இணையான இருவரில் முதன்மையானவன் ஆண் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. கருக்கலைப்பும் கருத்தடையும் விவாகரத்துகளுமே பெண்ணுரிமை இயக்கங்களின் சாதனையாகும்.

பைபிளோ குரானோ அல்லது எந்தவொரு மார்க்க புத்தகத்தையுமே குருவியைப் போல கொத்தியெடுத்து விமர்சிப்பது முறையாக இருக்காது. உதாரணமாக இந்த கட்டுரையைக் குறித்து நான் விமர்சிக்கவேண்டுமானால் இதனை முழுவதுமாக படித்தபிறகே- மாத்திரமல்ல எழுத்தாளரின் உணர்வையும் நோக்கத்தையும் கிரகித்த பின்னரே அதனை செய்யவேண்டும்.அவ்வாறே பைபிளை விமர்சிக்கும் நோக்கத்துடன் கையிலெடுக்கும் ஒருவருக்கு அதில் எல்லாமே தவறாகவே தெரியும். ஆனால் படைப்பாளரின் பார்வையில் எல்லாமே சரியாக இருக்கிறது. படைப்பாளரையே மறுக்கும் படைப்பானது படைப்பாளரைக் குறித்து விமர்சிக்கும் தகுதியையும் இழக்கிறது.
//ஆணாதிக்க கலாச்சாரமும், மதங்களும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன.//

<<< இரண்டையும் பிரித்தாலே ஊட்டச்சத்தில்லாமல் இறந்து போகும். அவற்றுக்கு தனித்திருக்கும் தகுதி இல்லை. >>>

ஆமாம்...ரஷ்யாவில் கம்யூனிசம் செத்தது போலவே ??? பெண்ணுக்கு என்ன சக ஆணுக்கே கம்யூனிசம் கொடுத்த மரியாதையை வரலாறு பார்த்துக்கொண்டுதானிருக்கிறது. கம்யூனிசம் செய்த சாதனைகளை கொஞ்சம் எடுத்து சொல்லவா ?

  • மகிழ்நன் பா.ம//இந்த கட்டுரையைக் குறித்து நான் விமர்சிக்கவேண்டுமானால் இதனை முழுவதுமாக படித்தபிறகே- மாத்திரமல்ல எழுத்தாளரின் உணர்வையும் நோக்கத்தையும் கிரகித்த பின்னரே அதனை செய்யவேண்டும்//

    நல்ல Digene மாத்திரை சாப்பிட்டுட்டு கிரகிச்சிட்டு வந்து விவாதிங்க.... ஏங்க, கட்டுரை இங்கதானே இருக்கு..படிச்சிட்டு விமர்சிங்க...எவன் வேண்டான்னா?

நல்ல நட்பு...நல்ல வரவேற்பு...!!! அடிப்படையற்ற கருத்துக்களின் கோர்வையான ஒன்றை கட்டுரை என்று சொல்லுவதே அசிங்கமல்லவா ?

  • @Bharathi Kp //பெண்ணுக்கு என்ன சக ஆணுக்கே // தம்பீ.. வீட்டுல பெரியவங்க யாராச்சும் இருந்தா கூட்டிட்டு வா.

எதிர்கருத்துடன் வருவோரை மட்டந்தட்டி பேசுவதும் பரியாசம் பண்ணுவதும் தான் கம்யூனிசமா ?

நாங்களும் உங்களைப் போன்ற சாதாரண மான(முள்ள) வர்கள் தான்... மதவாதிகளும் சுரண்ட்ல்பேர்வழிகளும் வேறு காரியத்தில் பிஸியாக இருப்பார்கள்.
பெண்ணுரிமை என்று எடுத்துக்கொண்டால் அது ஒன்றும் கம்யூனிசத்துக்கு ஏகபோக உரிமை கிடையாது என்பதை முதலில் நண்பர்கள் உணரவேண்டும். பெண்ணுரிமைக்காக பாடுபட்டவர்கள் பொதுவுடைமைவாதிகளும் அல்ல.

  • மகிழ்நன் பா.மஓ நீங்க பேசுறதுதான் எதிர்கருத்தா? கட்டுரை கண்முன்னாடி இருக்கு..விமர்சிச்சிருவேன்.. விமர்ச்சிருவேன்னு...  ஏன் பூச்சாண்டி காண்பிக்கணும்... என் ஏரியாவுக்கு வா பாத்துக்கிறேங்கிற மாதிரியே இருக்கு.... நீங்க சவடால் விடுறத விட்டுட்டு...கருத்தியல்ரீதியா பேசுனா எதுக்கு நக்கல், விக்கல் எல்லாம் வருது...

கட்டுரையை விமர்சிப்பேன் என்று பூஸ்ஸாண்டி காட்டிலிங்கோ...உங்க கட்டுரையை பெரிய்ய மனசு பண்ணி மற்ற மார்க்க புத்தகங்களை நீங்க விமர்சிப்பதுடன் ஒப்பிட்டேனுங்கோ...சரீங்ளா ?!

இங்கே இறைமறுப்பு எனும் ஒரே காரணத்துக்காக எதிர்தரப்பினரின் உணர்வுகளைப் புண்படுத்துவது நாகரீகமாக இருக்காது. இயேசுவைப் பற்றி அவதூறு செய்தால் எனக்கு வலிக்கும் என்ற நோக்கத்துடன் ஒருவர் அவதூறு செய்தால் அவருக்கும் சினிமா நடிகரின் ரசிகருக்கும் வித்தியாசமிராது போகும். ஒரு சிந்தனையாளருக்கு முதலாவது அவசியமானது பண்பும் சகிப்புத்தன்மையுமே என்றால் அது மிகையல்ல.

சமுதாயத்தைக் கேடுகள் அனைத்துக்கும் இறைவனே காரணமென்றால் அது முழுக்க முழுக்க மனிதனின் இயலாமையினால் எழும் கூற்று ஆகும்.

நீங்களாவது ஒரு பெண்ணைத் துன்புறுத்தி அவளை கர்ப்பமாக்காமல் இருக்கலாமே...புனிதமான உறவுகளை சித்தாந்தங்களால் கெடுப்பது சமுதாயத்தை சீர்படுத்திவிடமுடியாது.
  • மகிழ்நன் பா.மசரிங்க...எவ்ளோ சகிக்கிறது? கட்டுரைக்கான உங்கள் விமர்சனத்தை நாளை மறுநாள் எதிர்பார்க்கலாமா? எதற்கு இந்த அழுகாச்சி காவியம்..

அழுகாச்சி ??? அதான் அவ்வப்போது ஸ்மைலி போடுகிறோமே...

ஆரம்பிக்கவே இல்லை...அதற்குள் கர்சீப்பை நனைக்கும் யூகேஜி சிறுவனைப் போல சகிப்புத்தன்மையைக் குறித்து...

 


சிலர் பென்ணுரிமை பேசுவதே அப்பாவிகளை வேட்டையாடுவதற்காகவே....

 


பெண்ணுரிமை சங்கங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஏற்கனவே பார்த்துவிட்டோம்...

 


பெண்ணுரிமை என்பது ஆணுக்கு நிகராக பான் ப்ராக் போடுவது அல்லவே....

 


அதுமாத்திரமா ஆண்கள் இருக்குமிடத்திலெல்லாம் ஆணாதிக்கமும் இருந்தே தீரும். எங்களைப் பொறுத்தவரையிலும் க்ரெம்ளின் மாளிகையும் ஒன்றுதான்...வெள்ளை மாளிகையும் ஒன்றுதான்..இன்னும் வாடிகன் நகரத்தின் பீட்டர்ஸ் சதுக்கமும் ஒன்றுதான்...எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே...எச்சில் இலையில் என்ன உயர்சாதி தாழ்சாதி ??? சாராயக்கடையில் குடித்துவிட்டு உளரும் குடிகாரர்களில் கம்யூனிஸ்டும் இருக்கிறான்... கிறிஸ்தவனும் இருக்கிறான்... ஏனெனில் அடிப்படையில் இருவரும் மனிதர்கள் என்பதே.

 


ஆப்பிரிக்க சுரங்கங்களில் மண்பொடிகளில் எதையோ தேடியெடுத்து அதனை வாய்க்குள் அடக்கிக்கொண்டு வெளியே வருவார்களாம், வறுமையில் வாடும் ஏழை எளிய மக்கள். அவர்களிடம் சில மர்ம நபர்கள் வந்து சிலதை சிந்திவிட்டு அவர்கள் வாய்க்குள்ளிருக்கும் அந்த பொருளை பிடுங்கிச் செல்லுவார்களாம். அந்த ஏழைகள் பெற்றது சில சில்லறைக் காசுகள் எனில் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டது, வைரக் கற்களாம். இது இப்போதும் இந்த நவீன காலத்திலும் தொடரும் அவலம் தான். அந்த ஆப்பிரிக்க அடிமைகளுக்கும் இந்த கட்டுரையை ஏதோ வேத வாக்காக நினைத்து குதூகலிக்கும் சிலருக்கும் வித்தியாசமில்லை என்பேன், நான்.

  • Jeyachandra Hashmiஇந்த கட்டுரையும் வேதவாக்கு இல்ல. உங்க புனித நூல்ல இருக்கறதும் வேதவாக்கு இல்ல. இதுக்கு இன்னும் ஏங்க பதில் சொல்ல மாட்டேங்குறீங்க ???


Jeyachandra Hashmi அவர்களே நான் சரியான திசையிலேயே சென்று கொண்டிருக்கிறேன்...நீங்கள் தான் தேவையில்லாமல் பிதற்றிக்கொண்டிருக்கிறீர்கள். என்னிடம் கேள்வி கேட்ட அல்லது என்னை மையப்படுத்தி பதிக்கப்பட்ட வரிகளுக்கு கட்டுரையின் மையப் பொருளை விட்டு விலகாமல் கட்டுப்பாட்டுடனே எழுதிக்கொண்டிருக்கிறேன்.உங்களுக்கு பிடித்தமானபடி எழுத நான் ஒன்றும் உங்களுக்குக் கட்டுப்பட்டவன் அல்ல.


இந்த கட்டுரை வேத வாக்கு அல்லவென்றால் இதுகுறித்து நான் ஏன் விவாதிக்கவேண்டும் ? விமர்சிப்பது வேறு விவாதிப்பது வேறு என்பதை மனதில் நிறுத்தவும்.


ஆனா ஊனா பதில் சொல்லு....பதில் சொல்லு....என்று அரற்றும் நீங்கள் உங்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கும் பதிலை சொல்ல முடியாமல் அவற்றை தமிழக சட்டமன்ற சபாநாயகரைப் போல நீக்கியதை நினைவில் கொள்ளவும்.


நாம் இருவர் பேசும் காரியத்தில் நீங்கள் தேவனை இழுக்கலாம் நாங்கள் இற்றுப் போன தத்துவமான கம்யூனிசத்தைக் குறித்து கேள்வி கேட்கக்கூடாதோ ?

 


உங்களால் கம்யூனிசத்தை உயர்த்தி ஒன்றையும் சொல்லமுடியாவிட்டால் இறை நம்பிக்கையைக் குறித்து எதையும் பேசக்கூடாது. இறை மறுப்பே கம்யூனிசத்தின் ஆதாரம் எனில் அதைவிட கேவலமான கொள்கை வேறொன்று இருக்கமுடியாது.

 


இந்த கட்டுரையைப் பொறுத்தவரை என்னுடைய கருத்தை ஏற்கனவே பதித்துவிட்டேன். இது மேலோட்டமாக மேய்ந்து அவசரத்தில் தெளிக்கப்பட்டது என்பதே உண்மையாகும். பெண்ணடிமைத்தனத்துக்கு மதங்களே காரணம் எனில் வெற்று பேச்சாளர்களான நீங்கள் செய்தது என்ன என்று கேட்டிருக்கிறேன். பைபிள் என்று எடுத்துக்கொண்டால் அது பெண்ணடிமை புத்தகமல்ல. மதங்களுக்கும் மதவெறியர்களுக்கும் நாங்கள் ஒருபோதும் வக்காலத்து வாங்கவும் இல்லை.

 


அதான் சொல்றேனே...உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. உங்கள் கருத்தை விமர்சிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. நீங்கள் அதையே செய்துகொள்ளலாம். நேரடி மோதலைத் தவிர்க்கவும். கிண்டல் கேலி பரியாசம் அவதூறு தூஷிப்பது மதநம்பிக்கைகளை இழிவுபடுத்துவது புண்படும் வண்ணம் பேசுவது ஆகியன சமூக விரோதிகளுக்கே உரிய அடையாளமாகும். சிந்தனையாளர்களுக்கு அது ஏற்புடையதல்ல.

 


தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடித்தீர்கள்...தற்கொலையைப் பொறுத்தவரை உயிரின் அருமையும் அதன் புனிதமும் மதநம்பிக்கையாளர்களுக்கே சொந்தம் அல்லவா,அது குறித்து உங்களுக்கு என்ன கவலை என்று கேட்டிருந்தேன்.

 


இந்த கட்டுரையானது எடுத்துக்கொண்ட களத்தில் இருந்த நியாயமானது அதனைக் கொண்டு சென்ற தடத்தில் இல்லை. முக்கியமாக பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டியிருக்கும் உங்களுக்கு முழு வேதமும் தெரியாது.ஆனால் ஒருவர் இந்த கட்டுரையைப் பாராட்டுவதாக நினைத்துக்கொண்டு ”மசிறு” என்று கடுஞ்சொல்லை வீசுகிறார். நாங்கள் கௌரவமானவர்களோடு மணிக்கணக்கில் விவாதிக்க ஆயத்தமாக இருக்கிறோம்.ஆனால் எடுத்தெறிந்து பேசுவோருடன் அல்ல.

  • Jeyachandra Hashmi அய்யா..எல்லாம்ம சரி...உங்களுக்கு முழு வேதமும் தெரியும்ல. நீங்க இந்த கட்டுரைக்கான பதிலை சொல்லுங்க. அது உங்க வேலை இல்லைனு ஏன் கழண்டுக்கறீங்க?


இந்த கட்டுரையை எழுதியவர் கையிலேயே அது இருக்கிறதல்லவா...அதை அவர் முழுமையாக வாசித்துவிட்டு சரியாக எழுதட்டும்.அல்லாவிட்டால் எமது விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்.கருத்தை பொதுவில் வைப்போம்...வாசக நண்பர்களே நியாயத்தை தீர்மானிக்கட்டும்.

 


உங்களுக்கு என்ன பதில் சொல்லணும்...நீங்கள் யார் நான் யார் ? இந்த கட்டுரையில் பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து அவதூறு செய்திருக்கிறீர்கள்...அதை எதிர்க்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி கொழுத்த கம்யூனிசம் அதன் வேர்களிலேயே செத்துவிட்டது...வேறு வேலையைப் பாருங்க...சார்..!

 


இந்த கட்டுரையை அணுவணுவாக ஆராய்ச்சி செய்ய இது என்ன அவார்டு ஃபிலிமா என்ன ? ரோட்டிலே ஆயிரம் போஸ்டர் ஒட்டுறான்...அது மேல இன்னொருத்தன் ஒட்டிட்டு போறான்...சிலதை மாடு தின்னுது சிலதை மனுஷன் கிழிச்சி போடறான்...ஆனா சத்திய வேதம் யுகங்களைக் கடந்தும் நிலைத்து நிற்கிறது.உங்களுக்கும் எனக்கும் சோறு போடுது....அது போதுமே.

 

Jeyachandra Hashmiஅடடா...மறுபடியும் கம்யூனிசத்துக்கு ஏன் போறீங்க??? அவதூறு செய்யவில்லை. கேள்விதானே கேட்டிருக்கிறோம். அதற்கு விளக்கம் தாருங்கள். ஏன் இங்க தேவையில்லாமல் கம்யூனிசத்துக்குலாம் போறீங்கன்னு தெரியல. உங்களுக்கு பதில் இல்லைன்னா, பாஸ், னு சொல்லிட்டு போங்க...


உங்களுக்கும் அதே பதில் போதும்.

 


ரோம் நகரம் எரிந்துகொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தானாம். கோர்பசேவ் வாழ்க.

 

  • Jeyachandra Hashmi மக்கள் மரணித்துக்கொண்டிருந்தபோது, தேவன் அப்பன் சாப்பிட்டுக் கொண்டிருந்தானாம். தேவன் வாழ்க...

ஜீவ அப்பம் நானே என்று சொன்ன அவர் தன்னை பிட்டுக்கொடுத்தார்...சாப்பிடாதவன் பசியில் புலம்புகிறான்...புலம்பி சாகிறான்.

அற்புதர் இயேசுவானவர் சிலுவையில் அறையப்பட்டு துடித்துக்கொண்டிருந்தபோது அவரை எள்ளி நகையாடி தூஷித்தவர்களைவிட நீங்கள் கொடுமையானவர் போல.

மனிதர்களுக்கிடையே எழும் விவாதத்தை சமாளிக்க வக்கில்லாமல் அரூபியானவரை தூஷிக்கும் உங்களுக்கும் மலையைப் பார்த்து குரைக்கும் நாய்க்கும் வித்தியாசம் இராது.

ஆமாம்...அவர் பேரை சொன்னாலும் ரொட்டி கிடைக்கும்...பக்கத்து ஊரில் சென்று அவரை எனக்குத் தெரியாது என்று சொன்னாலும் ரொட்டி கிடைக்கும்...இவ்விரண்டு பேரில் நீங்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும்.

எப்படியோ இவ்வுலகமே ஒன்று அவரை சொல்லி பிழைக்கிறது.இல்லை,அவரை மறுத்து பிழைக்கிறது. எப்படியோ வயிறு’ன்னு ஒண்ணு இருக்கே.

மனிதன் தனித்து வாழத் தெரியாதவன். தனித்தன்மையோடு வாழ விரும்புபவன். இவ்விரண்டு காரியமே மனுக்குலத்தை பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. அவனுக்கு ஏதேனும் ஒரு கூட்டத்தில் இருந்தாகவேண்டும். அதில் அவன் தலையே முன்னால் இருக்கவேண்டும்.ஏனெனில் அவன் மனிதன்.

  • Jeyachandra Hashmi //அவர் பேரை சொன்னாலும் ரொட்டி கிடைக்கும்.//

    அப்ப நீங்க அவர் பெயரைச் சொல்லியே ஓசில அப்பம் வாங்கி தின்றீங்கன்னு ஒத்துக்கறீங்க? தாங்க்யூ வெரி மச்...

ஆமா அவர் தான் எனக்கு சோறு போடறார்...உங்களுக்கும் அவரைப் பற்றி அசிங்கமா ஏதாவது சொல்லாட்டா சோறு கிடைக்காது என்று நிரூபித்திருக்கிறீர்கள்,நன்றி.


வெட்டிப் பேச்சும் வெட்டி பேசுவதும் இறைமறுப்பாளரின் தனித்தன்மை போலும். இருவரிகளில் ஒரு கருத்தை சொன்னால் அதிலிருந்து ஒன்றை வெட்டியெடுத்து... ஆஹா...நாய்கள் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரி சிந்திக்கிறதே..!!!

  • @Jeyachandra Hashmi /// அவரைப் பற்றி பேசுவதும் பேசாததும் என் சோற்றுக்கு எவ்விதத்திலும் உதவுவதில்லையே... அவர் என்ன எனக்கு சர்வரா??? என் சாப்பாட கொண்டு வந்து தர்றதுக்கு... ///


/// ஆமாம்...அவர் பேரை சொன்னாலும் ரொட்டி கிடைக்கும்...பக்கத்து ஊரில் சென்று அவரை எனக்குத் தெரியாது என்று சொன்னாலும் ரொட்டி கிடைக்கும்...இவ்விரண்டு பேரில் நீங்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும்.///


ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு நல்லதீங்கோ...வீட்டு சாப்பாடு ட்ரை பண்ணுங்கோ....

  • @Jeyachandra Hashmi //அவர் பேரை சொன்னாலும் ரொட்டி கிடைக்கும்.//
/// அப்ப நீங்க அவர் பெயரைச் சொல்லியே ஓசில அப்பம் வாங்கி தின்றீங்கன்னு ஒத்துக்கறீங்க? தாங்க்யூ வெரி மச்...///


ஓசியிலே அப்பம் மட்டுமா...தாய்ப்பாலிலிருந்து ஒன்றுக்கும் மனிதனால் விலை நிர்ணயிக்கவோ கொடுத்து தீர்க்கவோ முடியாதுங்க....ஒரு விவசாயி இன்றைக்கு சாகக் காரணம்...மழை எனும் அருட்கொடை நின்றதால் தானே...ஆனால் விளைச்சல் அமோகமாக இருக்கையில் அவன் கொண்டாடுவது இறைவனையல்லவா ? ஏனெனில் அவனுக்குத் தெரியும்,அவ்னுடைய முயற்சி மாத்திரமல்ல,விளையச் செய்தவரின் பங்கே பிரதானம். இறைமறுப்பாளரான உங்களைப் போன்ற புண்ணியவான்களால் பருவம் தப்பி மழையும் வறண்ட நிலங்களூம் விவசாயிகளின் மரணத்துக்கு மாத்திரமல்ல, அந்த இனமே அழிந்துபோகும் நிலைக்கு வந்துவிட்டது.

 

  • Jeyachandra Hashmiஓ..அப்ப எங்களால்தான் மழை நின்றுபோய்விட்டது என்று சொல்கிறீர்கள். நிலங்கள் வறண்டு விட்டது என்று சொல்கிறீர்கள் இல்லையா??? உங்கள் கடவுள்தான் மிக மிக வலிமையானவராச்சே? அவர் எங்கள் நடவடிக்கைகளை தடுத்து மழையை வரவழைத்திருக்கலாமே. நிலங்களை செழிக்க செய்திருக்கலாமே. அவரை மீறி எங்களால்தான் மழை வராமல் இருக்கிறதென்றால் நாங்கள் கடவுளை விட வலிமையானவர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா ???

இது ஒரு இறைமறுப்பாளருக்கு அழகல்ல. இது இயலாமையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. ஒவ்வொரு கைப் பிடி சோறும் இறைவனின் அருட்கொடையே. விளைச்சல்கள் மாத்திரமல்லாமல் அனைத்து ஜீவராசிகளின் இயக்கமும் இறைவனுக்கு கட்டுப்பட்டதே. அவரே தன்னை மறுப்பவருக்கும் உணவளிக்கிறார். சில்லுகளையும் சிப்புகளையும் பிறாண்டிக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறுசுகளுக்கு இது தெரிய நியாயமில்லை தான். அம்மா சோறு சமைத்து அழைக்கும் சத்தத்தையே மதிக்காமல் அசட்டை செய்து ஃபாஸ்ட் ஃபுட்டை நோக்கி ஓடும் இளைஞர்கள் இறைவனின் அருமையை ஒருபோதும் அறியப்போவதில்லை.ஆனால் நிலத்தில் லட்சங்களைக் கொட்டிவிட்டு வானம் பார்த்து நிற்கும் விவசாயிகளின் கண்ணீர் துளிகளே மேகமாகி வானம் மழையைப் பொழிகிறது. இன்றும் விளைச்சல் தொடருகிறது. துர்சம்பவங்கள் நகரவாசிகளுக்கான எச்சரிக்கையேயன்றி கிராமவாசிகளுக்கல்ல.

 

 



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

சரி...நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. மகிழ்நன் பதிந்துள்ள கருத்துகளுக்கு பதில் மட்டும் சொல்லுங்களேன்..

சம்பந்தப்பட்ட இடங்களில் தேவைக்கும் அதிகமாகவே பதிலளிக்கப்பட்டுள்ளது. கேள்வி கேட்பதிலும் பதிலைப் பெறுவதிலும் சிலருக்கு தனி திறமை தேவைப்படலாம். எடக்கு மடக்கு கேள்விகளோ பதில்களோ ஒருவருக்கும் பயன் தராதும் போகலாம். பைபிளைக் குறித்து ஒன்றுமே அறியாமல் நிறக் குருடர்களைப் போல கருத்து சொல்லுவது சரியாக இருக்காது. அது குருடர்கள் யானையைத் தடவியது போன்ற அனுபவமாகவே இருக்கும்.குருடர்கள் பார்வையடைவது அவசியம், பார்வையுள்ளதாக நினைப்போர் அதனைப் பராமரிப்பதும் அவசியம். இயேசுவானவர் இந்த உலகத்துக்கு ஒளி என்று தன்னைக் குறித்து சொல்லியிருக்கிறார்.

  • I யோவான் 1:7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
  • யோவான் 3:20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.

https://www.facebook.com/jeyachandra.hashmi/posts/548740631820356?comment_id=116716399&offset=0&total_comments=50



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
பைபிள் பெண்ணடிமை புத்தகமாம்- ஒரு இறைமறுப்பாளரின் அவதூறு.
Permalink  
 


பரிசுத்த வேதாகமத்தின் ஒரு குறிப்பிட்ட வசனத்தைக் குறிப்பிட்டு அது பெண்ணடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட போதனை என்று ஒரு இறைமறுப்பாளர் அவதூறு செய்திருக்கிறார். அதில் நாம் பதித்துள்ள கருத்துக்களை இங்கே பகிர்வதுடன் சேமித்துக்கொள்ளுகிறோம்.ஏனெனில் தற்காலத்தில் எதிர்கருத்துக்களை பொறுத்துக்கொள்ள மனதில்லாமலும் சகிப்புத்தன்மை சிறிதும் இல்லாமலும் நாம் பதிக்கும் கருத்துக்களை தன்னிச்சையாக நீக்கிவிடுகிறார்கள்.

இனி...

‘I பேதுரு 3:5 இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.’

புருஷர்களுக்கு கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்களாம். அயோக்கியர்கள். பெண்களை அடிமைப்படுத்துவதில் எல்லா மதங்களும் பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டுதான் செயல்படுகின்றன.

 

  • பெண்ணுரிமை பேசிக்கொண்டே பெண்ணுக்கு கொடுமை செய்பவர்கள் ஏராளம்.
  • அவர்களே அயோக்கியர்கள்.
  • யோக்கியம் எனும் வார்த்தையின் பொருளே அறியாமல்...அயோக்கியனை எப்படி அடையாளம் காண்பீர்கள் ?
  • ’தான் அடங்க தன் குலம் விளங்க..’ என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். ’அடக்கம் அமரருள் உய்க்கும்..’ என்று வள்ளுவரும் சொல்லுகிறார்.
  • இந்தியாவை (மறைமுகமாக) ஆளுவதும் பெண் தான்...தமிழகத்தை ஆளுவதும் பெண் தான்...இப்படி எல்லா அமைப்புகளிலும் பெண்கள் அமர்ந்துவிட்டார்கள்.அடுத்து ஆணுரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் வலுப்பெறும். இது இப்படியே தொடரும்...யுகா யுகமாக.
  • தன்னைத் தானே ஒருவர் செதுக்கிக்கொள்வாராம்... ஐயகோ காலத்தின் கொடுமையே... இறை மறுப்பாளருக்கு வந்த சோதனை தான் என்னே ?!
  • கல்லும் நானே...உளியும் நானே...செதுக்கும் சிற்பியும் நானே...நல்ல தத்துவம்...ஆணவம்... அகங்காரம்... பெண்ணுரிமை ???
  • Jeyachandra Hashmi /// மற்றவர்களின் குணங்களைக் கண்டு அதை நான் உள்வாங்கி என்னை மேலும் செம்மைபடுத்திக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன். ///

    இது மிகச் சரியான கருத்து. ஆனாலும் என்னை நானே செதுக்கிக்கொள்ளுதல் என்பது கருத்தியலுக்கு விரோதமானது ஆகும். இது இறைமறுப்பாளருக்கு நேர்ந்த சோதனையே.
  • எல்லோருமே நேரடியாக மையக் கருத்துக்கு உடனே வந்துவிடமாட்டார்கள். அதற்கான சூழலை அமைத்திடவே சற்று நேரம் எடுத்துக்கொள்ளுவது இயல்பானதே.ஆனாலும் அதனை மழுப்பல் என்று வர்ணிப்போருக்கு இறுதிவரையிலும் உண்மையை உண்மையிலிருந்து அறியும் வாய்ப்பே கி(எ)ட்டாது போகிறதுண்டு. 
  • உண்மையை உண்மையிலிருந்து அறிவதே அறிவுடைமையாகும்.
  • மத்தேயு 15:14 அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். 
  • /// நானே என்னை செதுக்கிக்கொள்ளுதல் என்பது எப்படி கருத்தியலுக்கு விரோதமானதாகும்.///

    இது கேள்வி வாக்கியமா அல்லது செய்தி வாக்கியமா ? செய்தி வாக்கியமெனில் எதிர்கருத்து மோதலுக்கே வழிவகுக்கும். கேள்வி வாக்கியமெனில் நட்புக்கு பாதை போடும். எனவே ஏற்கனவே ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறேன்,இறுதிசெய்துவிட்ட ஒரு தீர்ப்புக்காக வழக்காட என்னால் முடியாது,என்பதாக.
  • செதுக்குதல் என்பது ஒரு செயல் எனில் அதனை செய்வதற்கு இன்னொருவர் வேண்டும். உதாரணமாக அன்பு செய்தல் என்பது ஒரு உணர்வுபூர்வமானதொரு செயல் எனில் அதை நிறைவேற்றுவதற்கு குறைந்த பட்சம் இரு நபர் வேண்டும். அதில் ஒருவர் தருபவராகவும் இன்னொருவர் பெறுபவராகவும் இருப்பர்.
  • குருடன் பற்றிய வசனம் பரிசுத்த வேதாகமத்தில் கூறப்படுவதாகும். அதனை ஏற்று நீங்களும் மதவாதியாகிவிடாதீரும். உங்களுக்கு சொந்தமல்லாத ஏற்புடையதல்லாத உங்கள் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றைக் குறித்து கருத்து கூறுவது போன்ற மடைமை வேறொன்றும் இருக்கமுடியாது. இங்கே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குருடன் என்று யாரை வர்ணிக்கிறார் என்று சற்று நிதானித்து பதில் கூறவும். சேம் சைடு கோல் போட்டுவிட்டு பிறர் மீது பழிசொல்லவேண்டாம்.
  • வேதம் அதாவது எங்கள் பைபிள் பெண்ணடிமையை அடிப்படையானது என்று தீர்மானித்துவிட்டு அதுகுறித்து விவாதிக்க துவங்கினால் நீங்கள் மூக்குடைபடுவது நிச்சயம்.
  • பரிசுத்த வேதத்தின் ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு அவதூறு செய்யும் உங்களை இதுவரை கண்டும் காணாமல் விட்டு வைத்ததே ஆண்டவருடைய இரக்கமாகும்.




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard