மும்மூர்த்தி (தீர்க்கதரிசி) களான மோன்ஸி / ஸ்ஸ்ஸ் / விஸ்க் ஆகியோருடைய பேராதரவுடனும் ஆசியுடனும் ”கும்கி” எனும் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. மீடியா மிருகங்களின் அதிசய தேவனான இயேசு என்பவருடைய ஆசியுடன் வெளியாகி சக்கைப்போடுபோட்ட மைனா படத்தின் இயக்குநரும் மீடியா மிருகங்களின் ஆதரவாளருமான பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மாத்திரமல்லாது கிறிஸ்தவ மக்களின் ஆவலையும் தூண்டியிருக்கிறது. மைனா படத்தை ஓடவைத்த இயேசு கும்கி படத்தையும் ஓடவைப்பாரா அல்லது அதை தியேட்டரைவிட்டே துரத்துவாரா என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர். ஏனெனில் கும்கி படத்தின் வெற்றியிலேயே மீடியா மிருகங்களின் மானமும் அடங்கியிருக்கிறது. சினிமா இயக்குநர்களுக்காக ஜெபித்து திரைப்படங்கள் வெற்றியடைய வரம் தரும் மும்மூர்த்திகளான மீடியா மிருகங்கள் இந்த படமும் வெற்றியடைந்தால் அதனை ஏஞ்சல் டிவியில் போட்டு மகிழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதன்பிறகு தங்கள் அற்புத சக்தியினால் அனைத்து சினிமாக்காரர்களுக்கும் ஆசிவழங்கி தொழில் வளரவும் கலைத்துறையின் வருமானத்தில் பெரும்பகுதியை தங்கள் ஊழியத்துக்காக ஈர்த்துக்கொள்ள திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கலாம். இந்த திரைப்படத்துக்கு மற்றொரு புகழ்பெற்ற கிறிஸ்தவ நபரான இமான் என்பவர் இசையமைத்திருக்கிறார். அவருடைய முழுபெயர் இம்மானுவேல் என்பதாக இருந்தாலும் அவர் தேவனோடு இல்லாததால் இமான் என்று அழைக்கப்படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
பின்குறிப்பு: இந்த மீடியா மிருகங்கள் ஆசிவழங்க பயன்படுத்திவரும் இயேசு எனும் நாமத்துக்கும் நாசரேத்தூர் தச்சனுடைய குமாரனான இயேசுகிறிஸ்து என்பவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-- Edited by chillsam on Thursday 27th of December 2012 04:55:05 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)