( கலாநிதி சாம் கமலேசன் அவர்களின் எளிமையான கிறிஸ்மஸ் செய்தி. இது "ஆதி" எனும் பெயரில் ”நண்பர் சுவிசேஷ ஜெபக் குழு ” ஸ்தாபனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இதன் எழுத்து வடிவத்தை எனது பாசத்துக்குரிய வாசகர்களுக்காகப் படைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். )
பாடற் குழுவினரின் கிறிஸ்மஸ் வாழ்த்து பாடலுடன்....கலாநிதி சாம் கமலேசன் அவர்களின் கிறிஸ்மஸ் செய்தி தொடருகிறது...
”ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.” (யோவான்.1:1-3)
” ஒரு சிறு பையன் சண்டே ஸ்கூல் போயிட்டு வந்தானாம். அப்ப தான் கிறிஸ்மஸைப் பற்றி பேசிகிட்டிருந்திருக்காங்க.. அதனால அவன் அப்பா கேட்டாராம், இன்னிக்கு என்னடா சொல்லி கொடுத்தாங்க, சண்டே ஸ்கூல்ல..? அவன் சொன்னானாம், தேவன் ஆதியிலே பிறந்தார் பாருங்க, அதைப் பற்றி சொல்லி கொடுத்தாங்க. தேவன் பிறந்தாரா, எப்போ... ஆதியிலே... எப்படி தேவன் பிறக்கமுடியும் ? ஆதியிலே தேவன் மனுஷனானார்.
சிறு குழு ஒண்ணு இருந்துச்சாம். அது ஒண்ணும் பெரிய பேர்போன குழு இல்லை. வயதான ஒரு ஆசாரியன் அவனுடைய மனைவி. இரண்டு பேருக்கும் பிள்ளை கிடையாது. அவர்களுடைய உறவிலே ஒரு பெண், 18 வயசுக்குள்ளே இருக்கும் ஒரு பெண். அவளுக்கென்று நியமித்திருந்த ஒரு வாலிபன், தச்சு வேலை செய்யிறவன். வயசான ஒரு ஆள் கோவில்ல உட்கார்ந்து காத்துகிட்டே இருக்காரு, இஸ்ரவேலுடைய இரட்சிப்பை நான் கண்டதுக்கு அப்புறம் தான் நான் மரிப்பேன் என்ற நிச்சயத்திலே காத்துகிட்டே இருக்காரு. கைம்பெண்ணான ஒரு வயதான பெண், அவளும் தேவாலயத்திலேயே உட்கார்ந்திருக்கா. இதோடு கூட மேய்ப்பர்கள்... இவங்கல்லாம் ஒரு குழு. எப்போமோ ஆண்டவர் நிச்சயமா தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையிலே காத்துகிட்டே இருக்கும் ஒரு குழு. இப்படிப்பட்டவர்கள் மத்தியிலே ஆண்டவர் தம் வருகையைப் பற்றி சொல்லுகிறார். ஒரு சின்ன பிள்ளையாகப் பிறந்தார். என்னுடைய பெலவீனத்தை நான் உணரும்னா அவர் என் பெலவீனத்துக்குள்ளே வந்தாத்தானே எனக்கு தெம்பு கொடுக்கமுடியும், இல்லேன்னா எப்படி சொல்லமுடியும்..? எத்தனையோ விதங்களிலே ஆண்டவரைக் கண்டுபிடிக்கணும்னு நாம் பார்க்கறோம், எங்கெங்கேயோ போய் பார்க்கறோம். ஆனால் உயிருள்ள ஒரே ஒரு தேவன். தன்னை உனக்காகவும் எனக்காகவும் கொடுக்கவந்த தேவன். சிறு பாலகனாக வந்து நீயும் நானும் வாழ்க்கையிலே என்னெனென அனுபவமெல்லாம் அனுபவிப்போமோ அதையெல்லாம் அனுபவித்து நேர்மையையும் சத்துவத்தையும் ஜீவனையும் கொடுக்க வந்த தேவன். ஆதியிலே வார்த்தை... அந்த வார்த்தை தேவன். உண்டானது எதுவும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவரே ஜீவனை அருள வந்தார். அவரைப் பற்றுவதில் மட்டுமே நமக்கு பிழைப்பு யோசித்துப்பார்ப்போம். இந்த பாடல்களை கொஞ்சம் ஆழ்ந்து கேளுங்கள் சத்துவம் உங்களோடு பேசும்.”