இறைவன் கொடுத்தஇலவச தண்ணீரை -மனிதன் பைகளில் அடைத்து பணம் பண்ணுகிறான் உடுப்புக் கடைக்கு உடையெடுக்கச் சென்றால் வியாபாரி உடுத்தியிருப்பதையும் உருவப் பார்க்கிறான் மழைக்குக் காரணமான மரங்களை அழித்துவிட்டு மழைக்கு யாக்ம் பண்ணுகிறான் ம்னிதன் மாயம் பண்ணுகிறான் பணக்காரன் சட்டத்தை பணம் கொடுத்து மீறுகிறான் பாமரனுக்கோ திருவோட்டை பரிசாகக் கொடுக்கிறான் மன்சாட்சி செத்துப்போனவன் மருத்துவன் ஆகிறான் மருத்துவம் தொழிலானதால் மனித நேயத்தை மறந்துபோகிறான் மெய்யை மையால் மறைத்து பொய்யைப் பரப்புகிறான் பத்திரிகையாளன் -தன் பையை நிரப்புகிறான் நவீன இசையுடன் நயவஞ்சகத்தைக் கலந்து உலாவ விடுகிறான் -ஊடகத்தான் ஊசியில் விஷம் ஏற்றுகிறான் விளைச்சல் நிலங்களை வீட்டு மனையாக்குகிறான் -வியாபாரி விலைவாசி உயர்வு என்று வேஷம் போடுகிறான் நலிந்தவன் நம்பிக்கையோடு நீதிமன்றம் நாடுகிறான் -ஆனால் நீதிபதியோ ஊழல் வழக்கில் நீசருக்கு துணையாயிருக்கிறான் சாலையோரச் சிற்றுண்டிகள் சாகக் கிடக்குது மெக்டோனால்டும் கேஎஃப்சியும் கொள்ளையடிக்கிறது சமுதாயத்தின் அவலங்களை சிந்திக்காத கிறிஸ்தவனே சபைகளில் நிரம்பிவழிகிறான் சவால்களை சந்திக்க மறுக்கிறான் சிந்திக்க மறுத்து -கிறிஸ்தவன் சீரழிந்து போகிறான் சமூகத்தை மறந்து சபையில் கூப்பாடு போடுகிறான் விசாவுக்கு ஜெபம் வேலைக்கு ஜெபம் -என்று கோபுரம் கட்டுகிறான் -மதவாதி கல்லாவை நிரப்புகிறான் கிறிஸ்தவன் திருந்துவது எப்போது கேடுகள் மறையும் அப்போது சிந்தித்தால் மலரும் புதுயுகம் சாதிக்க முயலுவோம் அனைவரும்.நன்றி:
அடிச்சுவடுகள், “டேவிதன்”