மோகன் சி லாசரஸ் நடத்தும் கூட்டத்துக்கு அதிகக் கூட்டம் வரக்காரணம், அவர் அல்ல, இயேசுவைக் குறித்த மக்களின் தாகம். ஆனால் இயேசுவின் பெயரைச் சொல்லி கூட்டத்தைச் சேர்த்துவிட்டு இவர்கள் செய்வதோ வியாபாரம். இவர்களைப் போல ஊரை அடித்து உலையில் போடுவோரைக் கூட்டணி சேர்த்துக்கொண்டு விளம்பரம் செய்தால் ஒரு கழுதைக்குக் கூட கூட்டம் வரும். விளம்பரப் பொறுப்பை ஏற்றுள்ள ஏஜென்சிகளைக் கேட்டால் அனைத்து ரகசியங்களும் தெரியும். தற்காலங்களில் கூட்டத்தைச் சேர்ப்பது ஆவியானவரோ அபிஷேகமோ அல்ல, விளம்பர ஏஜென்சிகளே. எனவே அவர்கள் ரேட் ஏறிக்கொண்டே போகிறது. விளம்பரங்கள் அதிகமாக அதிகமாக எதிரிக்கு வெறியூட்டப்பட்டு ஏழை ஊழியர்கள் நெருக்கப்படுகிறார்கள் என்பதே உண்மையாகும். போலியாகக் கூட்டப்படும் கூட்டத்தைப் பார்த்து பிரமிக்கும் எதிரிகள் பெரிய அளவில் மதமாற்றம் நடைபெறுவதாக நினைத்துக்கொண்டு கிறிஸ்தவர்களுக்கெதிரான சூழ்ச்சி வலைகளைப் பின்னுகிறார்கள். ( இவர்களுக்கு என்ன வந்தது அதையும் விளம்பரப்படுத்தி அனுதாபம் தேடி காசு பார்ப்பார்கள். ) ஆனால் நம்முடைய ஆட்கள் அரைத்த மாவையே அரைப்பது யாருக்கு தெரியும் ?!
நடிகர் வடிவேலுவுக்குக் கூடிய கூட்டம் அனைத்தும் ஓட்டுபோட்டிருந்தால் அவர் கட்சி தோற்றிருக்குமா ? கூட்டத்தைப் பார்த்து பிரமிக்கும் ஊழியன் ஒரு குருடன். கூட்டம் சேர்க்க ஆலாய் பறப்பவன் மடையன். கூட்டத்திடம் இயேசுவை சேர்க்காமல் இயேசுவிடம் கூட்டத்தைச் சேர்க்காமல் தன்னையும் தன்னுடையதையும் விற்பவன் விபச்சாரி. அப்படிப்பட்டவர்கள் வண்டு பூவைச் சுற்றும் கதையை சொல்லுவது வழக்கமே. தன்னை வண்டாக நினைத்துக்கொண்டு தானே அப்பாவிகளைக் கசக்குகிறார்கள் ?!
ஏசாயா 56:10 அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)