ஆபிராம் என்பவர் ஒரு சாதாரண குடும்பத் தலைவராம். அவருடைய பெயருக்கான பொருளும் அதுவே. ஒரு குடும்பத்தில் மூத்தவர் என்பதே அதன் அர்த்தம். அவர் பிரபலமான ராஜ வம்சத்தைச் சார்ந்தவரோ பண்ணையாரோ பராக்கிரமசாலியோ அல்ல. அந்த ஆபிராம் என்பவரை ஆபிரகாம் என்பதாக இறைவன் மாற்றுகிறார். ஆபிரகாம் எனும் பெயருக்கு தேசங்களின் தந்தை என்று பொருளாம்.
எப்படி நெல்சன் மண்டேலா என்றதும் தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்காகப் பாடுபட்டார் எனவும் யாசர் அராஃபத் என்றதும் பாலஸ்தீனத்துக்காக விடுதலைக்காகப் பாடுபட்டார் எனவும் ஆப்ரஹாம் லிங்கன் என்றதும் கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டார் எனவும் நினைவுகூறப்படுகிறதோ அப்படியே ஆபிரகாம் என்பவர் யுகங்களைக் கடந்தும் தேசங்களைக் கடந்தும் இனங்களைக் கடந்தும் பேசப்படுகிறார். இதிலிருந்து நாம் அறிவது என்ன, இறைவன் ஆபிரகாம் எனும் தனி மனிதனுக்கு கொடுத்த வாக்குறுதியில் உண்மையுள்ளவராக இருந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்ன ?
ஆதியாகமம் 12:2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
இது எப்படி நிறைவேறியது ? இதன் உச்சக்கட்டத்தை எங்கே காண்கிறோம் ? ஆம்,அது பின்வரும் வசனத்தில் வெளிப்படுகிறது. அதை எத்தனை பேர் யோசித்தோமோ தெரியாது,ஆனால் அந்த ஒரே ஒரு வசனத்தில் முழு வேதாமகத்தின் கூறுகளும் அடங்கியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.அந்த வசனமாவது,
நம்முடைய வேதாகமத்தின் சிறப்பே வம்சவரலாறுகள் தான். மிகவும் குறைவாக வாசிக்கப்படுவதும் அதுவே. வேதத்தில் எத்தனையோ பேருடைய வம்சவரலாறுகள் இருப்பினும் இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு என்று துவங்கும் புதிய ஏற்பாட்டின் முதற் சொல்லாக - முதற் பெயராக ஆபிரகாம் என்பவருடைய பெயர் இருக்குமானால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்கவேண்டும், ஆனால் அவர் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை. ஆனால் அவரை அழைத்தவர், ”பெரியவர்” ஆனதால் இந்த பாக்கியத்தை அவர் பெறுகிறார்.
”ஆதியிலே” என்று துவங்கும் பரிசுத்த வேதாகமம் புதிய ஏற்பாட்டில் ”ஆபிரகாமின்” என்று துவங்கி இறுதியில் ”ஆமென்” என்று முடிகிறது. இதில் விசேஷித்த செய்தி ஒன்று மறைந்திருக்கிறது. அது,
II கொரிந்தியர் 1:20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.