அந்த காலத்தில் புழுதியிலும் சாம்பலிலுமிருந்து அரற்றி தேவகோபத்துக்கு தப்ப மன்றாடினார்கள். இன்றோ கறுப்பு பணமுதலைகளின் பேராதரவுடனும் சினிமா நட்சத்திரங்களின் மினுக்கு வஸ்திரங்களுடனும் திறப்பின் வாயிலில் நிற்கிறார்களாம். வாயில் திறக்கும் நாளில் அனைத்தும் தெரியவரும் என்பது நிச்சயம். அரசியல் மாநாட்டு மேடைகளுக்கும் முகப்புத் தோரணங்களுக்கும் சவால் விடுக்கும் வண்ணமாக செய்யப்படும் ஏற்பாடுகளால் பரலோக வாசல் திறக்கிறதோ இல்லையோ அரசியல்வாதிகளின் பெட்டிகள் திறக்கும் என்பது உறுதி.
”திறப்பின் வாசல்” என்றால் என்னவென்றே தெரியாமல் அதுகுறித்து பெரியதாகப் பேசும் இவர்களைக் குறித்து தீர்க்கதரிசி சொல்லுவது என்ன ?
ஏசாயா 56:10 அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்.
ஏசாயா 56:11 திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும் அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சென்னையில் வைத்து ஜெப மாநாடு நடப்பது அதிக சந்தோஷம். ஆனால்... அதனை கள்ளத் தீர்க்கதரிசிகளுடன் கூட்டணியமைத்து செய்வது வருந்தத்தக்கது. இந்த ஜெபமாநாட்டில் பங்கேற்கும் ஐவரில் இதனை நடத்தக்கூடிய தகுதியுடையவர் ஒருவர் மாத்திரமே. அவர் ஐயா பேட்ரிக் ஜோசுவா அவர்களே. மற்றவர் மீடியா வியாபாரிகள் ஆவர். மேலும் திறப்பின் வாசல் எனும் வார்த்தையும் கூட அதன் பொருள் மற்றும் அதன் ஆழம் அறியாமலே பலகாலமாக புழக்கத்தில் இருக்கிறது. அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் மலையை ஆக்கிரமித்து, கட்டடங்கள் கட்டிவரும் மலைமாதா கிறிஸ்தவ ஆலய நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மலை அமைந்து உள்ளது. வஜ்ரகிரி மலை எனப்படும் இதன் உச்சியில், பசுபதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நீண்ட காலமாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கீழிருந்து கோவிலுக்கு செல்ல, அரசு மேனிலைப் பள்ளி அருகில் படியும், எலப்பாக்கம் சாலையில் இருந்து மலை பாதையும் உள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு செல்ல, வனத் துறை அனுமதிக்கிறது. மலையில் நீண்டகால வழிபாட்டுத் தலமாக இக்கோவில் மட்டுமே உள்ளது.
கெடுபிடியும், அலட்சியமும்: சிறிய கோவிலான இதை, பெரிதாக கட்ட பக்தர்கள் முயன்றபோது, வனத் துறை தடைவிதித்தது. தற்போது, படியை மட்டும் செப்பனிட்டு அகலப்படுத்த, பக்தர்கள் முயன்றபோதும் வனத் துறை தடை விதித்தது. வனத் துறையின் கட்டுப்பாட்டில், காப்புக்காடாக அமைந்துள்ள இந்த பகுதி மட்டுமே, இயற்கை வளம் பாதிக்கப் படாமல் முறையாக பாதுகாக்கப் படுகிறது. ஆனால், இந்த மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குன்று, வருவாய்த் துறை கட்டுப்பாட்டில், புறம்போக்கு பகுதியாக உள்ளதால் (சர்வே எண் 45/4), கிறிஸ்தவ வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்பால், சீரழிந்து வருகிறது. இது அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி எல்லையை ஒட்டிய, பள்ளிப்பேட்டை ஊராட்சியில் அமைந்து உள்ளது. இங்கு, ஒரு கிறிஸ்தவ அமைப்பு, 30 ஆண்டுகளுக்கு முன், மழை மலைமாதா ஆலயம் என்ற வழிப்பாட்டு தலத்தை துவக்கியது. துவக்கத்தில், ஊராட்சி அனுமதியுடன் மட்டும், இந்த ஆலயம் கட்டப் பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை.
பிரமிப்பூட்டும் விரிவாக்கம்: முதலில், ஒரு சிலுவை மற்றும் சர்ச் ஆகியவற்றுடன், இத்தலம் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு, நாளடைவில், வெளிநாட்டு நிதியுதவி குவிந்ததால், 2000ம் ஆண்டு முதல், வழிபாட்டுத் தலம் தொடர்ந்து விரிவுபடுத்தப் பட்டது. தற்போது, 9 ஏக்கர் குன்று புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப் பட்டு சர்ச், தியான மண்டபம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பிரமாண்டமான கட்டடங்கள் கட்டப் பட்டு உள்ளன. மலையிலும் ஏராளமான சிலுவைகளை அமைத்து, மேலே செல்ல படிகளும் கட்டப் பட்டு உள்ளன. தற்போது சாய்வு கோபுரம் என்ற மிகப்பெரிய கட்டடமும் கட்டப் படுகிறது.
பாதை ஆக்கிரமிப்பு: இந்த ஆலயத்திற்கு எலப்பாக்கம் சாலையில் வழி அமைந்து உள்ளது. அதை ஒட்டியே பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கும் மலைப்பாதை உள்ளது. கிறிஸ்தவ அமைப்பு, அடிக்கடி, பசுபதி ஈஸ்வரர் கோவில் பாதையையும் ஆக்கிரமித்ததால் சர்ச்சை ஏற்பட்டு, இந்து அமைப்புகள் எதிர்த்தன. இதனால், மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. அப்போது வருவாய்த் துறை நடத்திய சமாதான கூட்டத்தில், மலையில் மேலும் கட்டடங்கள் கட்டக் கூடாது என, முடிவெடுக்கப் பட்டது. ஆனாலும், தற்போது, கிறிஸ்தவ அமைப்பு தொடர்ந்து கட்டடங்களை கட்டிவருகிறது. கட்டடம் கட்ட, மலையின் இயற்கை வளத்தை அழிக்கிறது. ஏராளமான மரங்கள், அபூர்வமான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் அழிக்கப் படுகிறன. வருவாய்த் துறை இடமாக அமைந்திருந்தும், அதை ஆக்கிரமித்துள்ள கிறிஸ்தவ அமைப்பு மீது, அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு அமைப்பு, மலையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கோலோச்சுவதால், தொடர்ந்து இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
இந்து அடிப்படைவாத ஊடகங்கள் தொடர்ந்து சிறுபான்மையினரை நசுக்கும்வண்ணமாக செய்தி வெளியிட்டு வருவது கண்டிக்கத்தக்கது. பெரியவங்க சொல்லுவாங்க, அவனவன் முதுகிலிருக்கும் அழுக்கு ஒருவனுக்கும் தெரியாதாம். எல்லா சட்டங்களும் இந்தியர் அனைவருக்கும் பொதுவானது என்றால் சிறுபான்மையினரையே குறிவைத்து தாக்கும் மர்மமான உள்நோக்கம் என்னவோ ? எனவே வேதம் சொல்லுகிறது,
சங்கீதம் 7:11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
சங்கீதம் 9:4 நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்.
இந்த இக்கட்டான சூழலில் சில கிறிஸ்தவ தலைவர்களில் சிலரே இந்த நடவடிக்கைகள் குறித்து மகிழ்ந்திருப்பதாகத் தெரிகிறது. அண்மையில் இதுகுறித்து என்னுடன் பேசிய ஒருவர் ஏஜி சபையின் வளர்ச்சியான அந்த வட்டாரத்திலுள்ள சிறு சபைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகவும் அந்த சபைகள் அழியாமலிருக்க ஏஜி சபையின் வளர்ச்சி தடுக்கப்படவேண்டும் எனவும் கூறியது வியப்பாக இருந்தது. மேலும் இதனை அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதற்கு எதிராகப் போராடும் நடவடிக்கையுடனும் ஒப்பிட்டது தமாஷாக இருந்தது. ஏஜி சபைக்கு யார் யாருடைய மனைவி என்று தெரியாத நிலையில் பல்வேறு குடும்பங்கள் வந்துபோவதாகவும் அந்த சபையின் ஐக்கியத்தைக் குறித்து இழிவாகக் குறிப்பிட்டார்.அதுபோன்ற கூற்றுகளே காழ்ப்புணர்ச்சியுடன் கூறப்படுவதாகும்.ஆனால் நம்முடைய நிலையோ எப்போதும் போல நடுநிலையுடனே சிந்தித்தே எழுதுகிறேன். எனது நோக்கம் என்னவென்றால் முதலில் செய்திகள் விரைவில் சென்று சேர வேண்டும்.சென்று சேரவேண்டிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படக்கூடாது. மேலும் செய்தியின் விளைவாக விழிப்புணர்வு உண்டாகவேண்டும் என்பது மாத்திரமே என்பதை நம்மையெல்லாம் பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக அழைத்தவர் முன்பாக சாட்சியாக சொல்லுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஜனவரி 5-ல் சென்னையில் வைத்து திறப்பின் வாசல் ஜெப முகாம் என்ற பெயரில் ”மீடியா மிருகங்கள்” செய்ய இருந்த அலம்பல் அரசாஙகத்தினால் தடுக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில் இந்த கூட்டம் சென்னை சின்னமலை ஏஜி சபையார் வாங்கிப்போட்டிருக்கும் கொண்டாட்ட மையத்தில் நடக்க இருந்தது. அதற்கு பிரதிபலனாக இந்த கொண்டாட்ட மையத்தை பல லட்ச ரூபாய் செலவில் மண்ணைக் கொட்டி மேம்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு மண்ணடிக்கும் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது அதிகாரிகளின் கவனத்துக்குச் செல்லவும் உடனடியாக நிலத்தை கையகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியும் மத அடிப்படைவாதமும் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தாலும் நம்முடைய தரப்பில் தவறு நிகழ்ந்திருப்பதாகவே தெரிகிறது. எனவே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்கமுடியாத நிலையில் இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக கள்ளத்தீர்க்கதரிசிகளான மீடியா மிருகங்களுக்கு எதிரான நம்முடைய போராட்டங்கள் தேவசமூகத்தை எட்டியிருப்பதாகவும் உணருகிறோம். ஏஞ்சல் டிவியுடனான ஏஜி சபையாரின் ”பொருந்தா கூட்டணி” ஆவியானவராலேயே கண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த எச்சரிக்கையை சீர்திருத்த சபையாரும் ஆவிக்குரிய சபையாரும் அலட்சியம் செய்யாமல் ஏஞ்சல் டிவியின் மாயமான உபதேசங்களைவிட்டும் அவர்களுடைய ஏஜெண்டுகளைவிட்டும் உடனடியாக விலகவேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அதன்பிறகே ஏஜி ச்பைக்கான நிலத்தை அரசாங்கத்தின் சூழ்ச்சியிலிருந்து மீட்க ஜெபிக்கவேண்டும். சபையைக் கெடுக்கும் கோட்டான்களை உள்ளே விட ஏஜி சபையின் தலைவரான மோகன் ஐயா தீர்மானித்ததன் எதிர்விளைவாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம். திருச்சபைக்கெதிராகவும் ஆரோக்கிய உபதேசத்துக்கு விரோதமாகவும் மீடியா மிருகங்கள் செய்துவரும் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்படும்வரைக்கும் தொடர்ந்து போராடுவோம். ஆனாலும் எதிரிகளிடம் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்கவும் மாட்டோம்.
சென்னை:பல்லாவரம் - துரைப்பாக்கம் வட்ட சாலையில், 800 கோடி ரூபாய் மதிப்புள்ள, அரசுக்கு சொந்தமான நிலம், மண் கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி, அந்த நிலம் நேற்று அதிரடி யாக மீட்கப்பட்டது.பல்லாவரம் - துரைப்பாக்கம் வட்ட சாலையில், கீழ்க்கட்டளை பெரிய ஏரி அருகில், "தென் இந்திய அசெம்ப்ளி ஆப் காட்' என்ற அமைப்பின் கீழ், "புதுவாழ்வு கொண்டாட்ட மையம்' என்ற ஆலயம் இயங்கி வருகிறது.நிலம் மீட்புபல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை, ஆலய நிர்வாகம் ஆக்கிரமித்து உள்ளதாக, பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சித்திரசேனன் உத்தரவின்படி, தாம்பரம் வருவாய் கோட்ட அதிகாரி எட்டியப்பன் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று காலை, "பொக்லைனர்' உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்தி அறிவிப்பு பலகைவைத்தனர்.மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுகுறித்து, தாம்பரம் வருவாய் கோட்ட அதிகாரி எட்டியப்பன் கூறியதாவது:ஆலந்தூர் வட்டம், கீழ்க்கட்டளை ஏரிக்கு அருகில், சர்வே எண், 100, 101ல் 40 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன.இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சித்திர சேனன் உத்தரவின்படி, ஆய்வு மேற்கொண்டோம்.
800 கோடி ரூபாய் மதிப்பு
இதில், ஏரிக்கு அருகில் உள்ள சர்வே எண், 13, 77, 78, 22, 73 மற்றும் 75 ஆகியவற்றில் உள்ள, 1.48 ஏக்கர் நிலம் உட்பட ஆறு ஏக்கர் நிலமும், தனியாருக்கு சொந்தமான பட்டா இடம், 12 ஏக்கரும் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது.ஆலயம் உள்ள, 15 ஏக்கர் நிலத்திற்கும் பட்டா உள்ளதாக கூறினர். ஆனால், இதுவரை எந்த ஆவணமும் சமர்பிக்கப்படவில்லை.அந்த நிலமும் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம். மொத்தமாக, 40 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு, 800 கோடி ரூபாய்.மீட்கப்பட்ட இடம், அதன் உரிமையாளர்களிடமும், பல்லாவரம் நகராட்சி வசமும் ஒப்படைக்கப்பட உள்ளது.ஆவணம் உண்டா?ஆலயத்திற்கு சொந்தமானதாக கூறப்படும், 15 ஏக்கர் நிலத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால், ஆய்வு நடத்தபட்டு, அந்த ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, எட்டியப்பன் தெரிவித்தார்.ஆலய வழக்கறிஞர் ஜான்பீட்டர் கூறுகையில், ""2002ம் ஆண்டு முதல், நன்கொடையாளர்கள் மூலம் அவ்வப்போது நிலம் வாங்கினோம். இதுவரை, 38 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளன. இந்த பிரச்னையை சட்டப்படி சந்திப் போம்,'' என்றார்.
பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்
நிலம் மீட்கப்படும் தகவல் கிடைத்ததும். பத்திரிகையாளர்கள் அங்கு சென்றனர். அதிகாரிகளால் மீட்கப்பட்ட நிலத்தை, புகைப்படம் எடுத்தனர். அப்போது, ஆலயத்தை சேர்ந்த சிலர், புகைப்படம் எடுப்போர் மற்றும் பத்திரிகையாளர்களை தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து கேள்வி கேட்ட சிலரை, அவர்கள் மிரட்டினர். இதை பார்த்த மற்ற பத்திரிகையாளர்கள் அங்கு கூடியதால், மிரட்டியவர்கள், அங்கிருந்து விலகினர்.