தீயைவிட வேகமாகப் பரவக்கூடியது வதந்தீ என்பார்கள். நற்செய்தி பரவியதோ இல்லையோ டிசமபர் 21-ந்தேதி உலகம் அழியுமா என்ற துர்ச்செய்தியைக் குறித்த கேள்வியும் அபிப்ராயஙக்ளும் பட்டிதொட்டியெங்கும் றெக்கை கட்டி பறக்கிறது. இதனிடையே சற்று முன்பதாக ஒரு கல்லூரி மாணவனிடமிருந்து ஒரு செய்தி வந்தது. அதன்படி வரும் 24,25 ஆகிய தேதிகளில் அதாவது கிறிஸ்மஸ் தினத்துக்கு முந்தைய நாளும் கிறிஸ்மஸ் அன்றும் உலக முழுவதும் இருண்டுவிடும்.அன்று உலகம் முழுவத்மே பவர்-கட் ஆகிவிடும்.ஆகிலும் இது நல்ல விஷயமே. ஏனெனில் பூமியின் தற்போதைய நிலை அதன் நான்காவது பரிமாணத்துக்கு மாறப்போகிறது.இதனால் உலகம் முழுவதும் செழிப்பாகிவிடும். பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வினால் பேரழிவு ஒன்று ஏற்படாது. மாறாக புத்தம்புது உலகமாக பூமி மாறப்போகிறது. அதுவரை பலவிதமான யூகமான செய்திகளால் பாதிக்கப்பட்டு செத்துப்போகவும் வாய்ப்புண்டு.எனவே டிசம்பர் 21 வரை எதற்கும் கவலைப்படாமல் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துவோம்...ஜெபம் பண்றவங்க அந்த மூணு நாளும் நல்லா ஜெபம் பண்ணுங்க...தூங்கறவங்க மூணு நாளும் நல்லா தூங்குங்க...அதுவரை தாக்குப்பிடித்துவிட்டால் நாம் புதிய் உலகத்தில் சந்திப்போம்.
முக்கிய குறிப்பு: இந்த செய்தியை நாசா விண்வெளி மையமும் உறுதி செய்துள்ளதாம்.
இந்த செய்தியைக் கேட்டதும் நான் சொன்னேன்,அப்படியானால் 24 - ந்தேதி நாம் எல்லோரும் ஒரே இடத்தில் இருப்போம்...என்பதாக. மதிநுட்பம் மிகுந்த எனது மனைவி சொன்னார், அப்படி சேரும் போது எல்லோரும் ஒண்ணா சேர்த்து ஒரு கயிற்றினால் கட்டிவிடவேண்டும்...என்பதாக. ஏன், ஒருத்தரும் தப்பிக்ககூடாது என்று பார்க்கிறாயா... என்று நான் கேட்டதற்கு, அவர்கள் குடும்பத் தலைவியாயிற்றே, எனவே பொறுப்புடன் சொன்னார்கள்... அப்படியல்ல, யாராவது விடுபட்டாலும் இன்னொருத்தர் புண்ணியத்தினால மேலே போறவங்களோட சேந்துக்கலாமே...என்பதாக. தற்கால சமுதாயம் மிகவும் அறிவார்ந்த சமுதாயமாக இருக்கிறது. ஏதோ ஒரு பெரிய நிகழ்வுக்காக ஆயத்தமாகவேண்டும் என்ற உள்ளுணர்வு அவர்களுக்கு இருக்கிறது.ஆனாலும் நடக்கப்போகிற அந்த பெரிய சம்பவம் எப்போது நடக்கப்போகிறது, எங்கிருந்து துவங்கும், முடிவு என்னவாக இருக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.ஏனெனில் கண்கள் குருடாக்கப்பட்ட நிலைமை.
லூக்கா 21:26 வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
US scientists predict Universe change, total blackout of planet for 3 days from Dec 23 2012. It is not the end of the world, it is an alignment of the Universe, where the Sun and the earth will align for the first time. The earth will shift from the current third dimension to zero dimension, then shift to the forth dimension.
During this transition, the entire Universe will face a big change, and we will see a entire brand new world. The 3 days blackout is predicted to happen on Dec 23, 24, 25.... during this time, staying calm is most important, hug each other, pray pray pray, sleep for 3 nights... and those who survive will face a brand new world.... for those not prepared, many will die because of fear. Be happy..., enjoy every moment now. Don't worry, pray to God everyday.
There is a lot of talk about what will happen in 2012, but many people don't believe it, and don't want to talk about it for fear of creating fear and panic. We don't know what will happen, but it is worth listening to USA's NASA talk about preparation.
Whether it's true or not, better be prepared. No panic, stay calm, just pray. Remember to smile more, love more, forgive more...everyday. Better avoid traveling during December.