Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "பொய்யைப் பற்றிய் ஓர் உண்மை"


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
"பொய்யைப் பற்றிய் ஓர் உண்மை"
Permalink  
 


 

இந்த கட்டுரையின் தலைப்புக்காகவே இதை விரும்பி பகிருகிறோம். இதிலுள்ள விஷயங்களும் பயனுள்ளவை...
ண்டவர், தமது மக்களுக்கு கூறிய 9வது கட்டளையாக, "பிறனுக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக" என  யாத்திராகமம்20:16ம், புதிய ஏற்பாட்டில், எபேசியர் 4:25ல், "....பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்". எனவும் கூறியிருக்கிறார்.

டவுள் தாம் படைத்த எல்லாவற்றைக் காட்டிலும் விஷேசித்த ஒரு நன்கொடையாக மனித இனத்துக்கு பேசும் வரத்தைக் கொடுத்திருக்கிறார். இது  மிருக ஜாதிகளைக் காட்டிலும் மனிதனை மேன்மை படுத்திக் காட்டுகின்றது. திட்டமிட, அதன் மீது செயல் பட , விளையாட, சண்டையிட பேச்சாற்றல் பயன் படுகிறது. தங்கள் பயத்தை வெளிக்காட்ட மிருகங்களால் முடியும். ஆனால் இவைகளால் தங்களது யோசனையை பேச்சாற்றலால் வெளியிட முடியாது. பேசுகின்ற தன்மை மனித இனத்துக்குக் கடவுளால் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய, உபயோகமுள்ள நன்கொடையாகும். வார்த்தைகள் மூலமாக ஒருவரை ஒருவர் தேற்றவும், தைரியப் படுத்தவும் முடியும். ஆனால் பேச்சின் மூலமாக பிறரைக் காயப்படுத்தவும், நிர்மூலமாக்கவும், கொல்லவும், கூட முடியும்.

ந்த 9ம் கட்டளை, நாவைத் தவறாகப் பயன்படுத்துவதைக் குறித்தும், முக்கியமாக நாவைக் கொண்டு மக்கள் மனத்தைக் காயப்படுத்துவதைக் குறித்தும், உண்மையில்லாததை பேசுவதைக் குறித்தும், நடந்தவற்றை மாற்றிப் பேசுவதைக் குறித்தும் கூறுகின்றது. நாம் கள்ளத்தனமாக நடக்க முடியாது. அதாவது, உண்மை இல்லாதவைகளை பேசக்கூடாது. சுருக்கமாகக் கூறினால் 9ம் கட்டளை இப்படிக் கூறுகிறது: பிறனுக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்லாதிருப்பயாக.சரியாகச் சொன்னால் இக் கட்டளை நம்மை எப்பொழுதும் உண்மையையே பேச வேண்டும் எனக் கூறுகின்றது.

நாக்கிலே நரம்பில்லாமல் பேசக் கூடிய மக்கள் மத்தியில் நாம் வாழ்ந்து வருகிறோம். அவர்களுக்கு பொய் பேசுவது பெரிய காரியமல்ல.ஆனால் ஆண்டவர் பொய்யை அப்படிப் பார்ப்பதில்லை. ஆண்டவர் கூறியுள்ள 10கற்பனைகளில், அதிகமாய் மீறப்படுவது இந்த 9ம் கற்பனைதான்.

மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வின்படி, ஒருவர், வருடத்திற்கு1,10,00,000 வார்த்தைகளைப் பேசுகின்றார். அதாவது ஒரு நாளைக்கு 30,000வார்த்தைகள் பெரும்பாலானோர் கடைகளில் திருடுவது பற்றியோ, வருமான வரியை ஏய்ப்பது பற்றியோ, பிறர் மனைவியோடு விபச்சாரம் செய்வது பற்றியோ ஒரு முறைகூட யோசித்துப் பார்ப்பதில்லை. ஆனால், பிறரைப் பற்றி தவறான கருத்துக்களைக் கூறாமலோ, தேவையில்லாத பேச்சிக்களைப் பேசாமலோ ஒரு நாளையாவது கழிப்பதில்லை. எதிலும் உண்மை என்ற தன்மையை நாம் நம் வாழ்க்கையில் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பது அவசியம். நாம் மிகச்சரியாகப பேசும் தன்மையையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு வார்த்தைகளைக் கையாள வேண்டும்.  ஆண்டவர் கூறுகின்றார், நீதி.19:5ல், பொய்சாட்சிக்காரன்  தண்டனைக்கு உட்படுத்தப் படுவான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை(இது எனது மொழிபெயர்ப்பு)

1. நாம் நேர்மையறவர்களாய் இருக்கக் காரணங்கள்: ஒரு பொய்யின்  நோக்கமே ஏமாற்றுவதுதான். இது உன்மையில்லாதவைகளைப் பேசுவதைக் காட்டிலும் மோசமானது. ஒரு வார்த்தையின் மூலமாகவோ, ஒரு செயலின் மூலமாகவோ, அல்லது பேசாமல் மௌனம் சாதிப்பதின் மூலமாகவோ பொய் சொல்லலாம். ஆண்டவர் கூறுகிறார், சங்கீதம் 119:104ல் ,"......எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன்". ஏமாற்றுவது என்பது நம்மைச் சுற்றிலும் பொதுவாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

னித இனத்தின் குறுகிய மனப்பான்மையும், மனிதன் நேர்மையற்றவர்களாய் இருக்க ஒரு காரணமாகும். டாக்டர்.லெனார்ட் கீலர் (புகழ் பெற்ற கீலர் உண்மையறியும் சோதனையைக் கண்டு பிடித்தவர்) பல்லாயிரக்கணக்கான  மக்களைச் சோதித்த பின்னர் ஒரு முடிவுக்கு வந்தார். அது அடிப்படையிலேயே மனிதர்கள் நேர்மையற்றவர்கள் என்பதுதான். இதையே எரேமியா என்ற தீர்க்கத்தரிசியும் 5000 வருடங்களுக்கு முன்பே கூறியிருக்கிறார்.  "எல்லாவற்றைப் பார்க்கிலும் (மனித) இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. (எரேமியா 17:19) நமது இயற்கையான தன்மையே பாவம் நிறைந்ததாய் இருக்கிறபடியால் பிறரை எளிதாக ஏமாற்றுகிறோம். 

டுத்த காரணம், உண்மையிலலாதவர்களாய் இருப்பது எளிதானது.மனிதன் தான் செய்த செயலின் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்மையில்லாதவைகளைப் பேசுகிறான்.தன்னைக் கண்டு பிடித்து விடுவார்களோ என் பயந்து, உண்மை சொல்ல மறுக்கிறான்.அல்லது தவறான செயல்களைத் தொடர்ந்து செய்கிறான். 
பொய் சொல்ல அடுத்த காரணம், கவனமின்மை. தான் சொல்லுவது மிகச் சரியானது என்பதை அறிந்து கொள்ளாமலேயே ஒரு மனிதன் தொடர்ந்து தவறான அறிக்கைகளை செய்ய முடியும். பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கமில்லாமலேயே உன்மையில்லாதவைகளைப் பேச முடியும். கவனமில்லாமல் பேசும் பேச்சு எப்பொழுதுமே உறுதியில்லாததாக, இருக்கும். எனவே அந்த வார்த்தைகள் உண்மையில்லாததாகவும், பின்பு அது பொய்யாகவும் உருவெடுத்து விடுகிறது. 

மேலும், பொய் சொல்ல அடுத்த காரணம், முகஸ்துதி. நம்மில் வெகு சிலர் மட்டுமே, உண்மையில் நடந்த சம்பவங்களை மிகச் சரியாக, தன்னை உயர்த்தாதபடி பேசுகின்றார்கள். இப்போதைய வழக்கில் "பிட்டு" போடாமல் பேசுகின்றார்கள். பேசப் படுகின்றது. ப்படிப் பிட்டு போட்டு பேசுவதுதான் சரி என்ற நிலைமைக்கு நமது சமுதாயமும் சென்று கொண்டு இருக்கிறது. இயற்கையிலே நாம் எப்படி இருக்கிறோமோ அதைவிட சற்று அதிக கௌரவத்தைத் தேடுவதில் ஆர்வமுள்ளவர்களாய் இருக்கிறோம். முகஸ்துதியைக குறித்த ஒரு சிறிய கதை: "எறும்பும் யானையும்" யானையின் முதுகில் உட்கார்ந்து இருந்த ஒரு எறும்பு, ஒரு பாலத்தைக் கடந்த பின்,  இப்படிக் கூறியதாம் "நான் - இல்லையில்லை  - நாம் இந்தப்  பாலத்தையே அசைத்துவிட்டோம்" என்று. (அந்த பழைய மரப் பாலம் யானையின் எடை தாங்காமல் அசைந்தது. ஆனால் எறும்பு அதில் தனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பது போல பேசியது.)

நாம் ஒரு பொய்யைச் சொல்லி, மாட்டிக் கொண்டால் என்ன செய்வது? என்ற நினைப்பு  மனதை உறுத்திக்கொண்டே இருக்கும். தொடர்ந்து உன்ன்மையில்லாதவைகளைப் பேசினால் அது நம்மைக் குறற மனச்சாட்சிக் குள்ளாக கொண்டு சென்று விடும். உண்மையான மகிழச்சியை இழந்து விட நேரிடும். 

சில நேரங்களில் உன்ன்மையில்லாதவைகளைப் பேசுவது, தர்ம சங்கடமான  நிலைமைக்குள் நடத்திவிடும்.  சில வருடங்களுக்கு முன்பதாக, ஒரு கோழிக்கறிக் கடையில் நடந்த ஒரு சம்பவம்.இது. மார்க்கெட்டில் கடையை அடைக்க வேண்டிய நேரம், ஒரு கோழி மட்டும் விற்காமல் மீதி இருந்தது.(அது கடைக்கு வெளியில் இருந்து பார்த்தால் தெரியாத இடத்தில் இருந்தது) அப்பொழுது ஒரு வாடிக்கையாளர், கோழி இருக்கிறதா? என் கேட்டு வந்தார்.  பார்க்கிறேன் என சொல்லிவிட்டு உள்ளே சென்று அந்தக் கோழியை எடுத்து வந்து எடை போட்டார். "இது90ரூபாய் ஆகிறது" என்றார். அந்த வாடிக்கையாளர் இதைவிடப் பெரியது இருக்கிறதா?" என கேட்டார். "பார்க்கிறேன்" எனக் கூறிவிட்டு அந்தக் கோழியோடு உள்ளே சென்றார். வேறு கோழியை எடுப்பது போல சில வினாடிகள் கழித்து (அவரிடம் இருந்ததே ஒரே ஒரு கோழிதான்) அதே கோழியை எடுத்து வந்து எடை போட்டு,  "இது 108 ருபாய்" என்றார். அந்த வாடிக்கையாளர் என்ன சொன்னார் தெரியுமா? "நான் இரணடு கோழிகளையும் வங்கிக்கொல்லுகிறேன்" என. உண்மையில்லாதவை களைப் பேசுவது, தர்ம சங்கடமான  நிலைமைக்குள் நடத்திவிடும்உண்மைக்கு மாறானவைகளைப்  பேசுவது மிகக் கடினமானது. கண்டு பிடிக்கப் பட்டால் என்னாவது என்று மனது உறுத்திக் கொண்டே இருக்கும். பொய் சொல்லுகிறவர்கள் பரலோகத்தில்  பிறவேசிக்க முடியாது என வேதாகமம் கூறுகிறது. உண்மையில்லாதவர்களாய் இருக்க இயற்கையாக பொறாமை, பய உணர்ச்சி, முகஸ்துதி, கவனமின்மை இவைகளே காரணம் என  பார்த்தோம்.

2 எவையெல்லாம்  பொய் சாட்சி இல்லை: 9ம்  கட்டளையின்படி எவையெல்லாம் பொய் சாடசி இல்லை என  பார்ப்போம்.

அ) எல்லாத் தவறுகளையும் நாம் பொய்கள் என எடுத்துக் கொள்ள முடியாது.தவறான வார்த்தை அல்லது செய்கையினால் ஒருவரை ஏமாற்ற நோக்கங் கொள்ளுவதுதான் பொய்யாகும். ஒரு சாதாரண நிகழ்ச்சி தவறாக அறிவிக்கப்பட்டிருந்து, நோக்கம் ஏமர்ற்றுவதாக இல்லாமலிருந்தால் அது பொய்யாகாது. உதாரணமாக, நான் ஒருவரிடம் என் மனைவி வங்கியில் வேலை செய்கிறார் என் கூறுகிறேன் என வைத்துக் கொள்ளுவோம். நான் சொன்ன அந்த நேரத்தில் வங்கிக்கு அருகில் உள்ள வீட்டில் உள்ள சுகவீனமான  ஒருவருக்கு ஜெபிக்கச் சென்றிருந்தால், நான் சொன்னது பொய்யாகாது. நான் தவறான தகவலைத்தான்  கொடுத்து இருக்கிறேனே தவிர, பொய் சொல்லவில்லை. கூறும்போது நேர்மையோடு, ஆனால் அவரை ஏமாற்றும் நோக்கத்தோடு கூறவில்லை. தவறான தகவலைத்தான் கூறியிருக்கிறேன்.

ஆ )  "உண்மை கசக்கும்" என்ற முதுமொழிக்கேற்ப உண்மைகள் சொல்லப்படுவதில்லை. அனேக நேரங்களில் மற்றவர்களைப் பற்றிய கசப்பான உண்மைகளை உரிய அதிகாரிகளிடம் சொல்ல நேரிடும். உண்மையான அன்பு உண்மைகளை பளபளக்கச் செய்ய முடியாது. கிறிஸ்தவர்களில் நேர்மையற்றவர்களை கடினமாக நடத்தவும், சரியாகவில்லையெனில் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவும் பரிசுத்த வேதாகமம் 1கொரி. 5:1-13ல் கூறுகிறது. 

3. பொய் சாட்சி கூறுவதற்க்கான வழிகள்: மார்க் டுவைன்  என்னும் அறிஞர், ஒரு நாள் உட்கார்ந்து பொய்சாட்சி சொல்ல 869 வழிகள் இருக்கிறது என கண்டு பிடித்தார். பெரும்பாலானோர் கடைப்பிடிக்கிற சில வழிகளைப் பார்ப்போம்.

அ ) நேரடிப் பொய்: 9வது, கட்டளையை மீறுகின்ற மிகச் சாதாரண வழி, நேரடியாகப் பொய் கூறுவதாகும். கர்த்தர், காயீனிடம் ஆபேல் எங்கே? என்று கேட்ட கேள்வி ஒரு உதாரணமாகும். கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே? என்றார். அதற்க்கு அவன்: நான் அறியேன். (அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது). பேதுருவின் நேரடிப் பொய்யை மாற்கு 14:67,68ல், பார்க்கிறோம். "குளிர் காய்ந்து கொண்டிருந்த பேதுருவைக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து நீயும் நசரேயனகிய இயசுவோடே இருந்தாய். என்றாள். அதற்கு அவன்: நான் அறியேன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து....." இது எவ்வளவு வேகமாகவும், எளிதாகவும் நமது இருதயம் பிரச்சனைக்குள்ளாக போகும் பொழுது, உண்மையிலிருந்து விழுந்து விடுகிறது எனக் கட்டுகிறது. 

10 கட்டளைகளில் பொய் சொல்லுவது தவிர்க்கப்பட வேண்டியது என்று மட்டுமல்ல, கர்த்தருடைய குரல் திரும்பத் திரும்ப இப்பாவத்திற்க்கு விரோதமாக ஒலிக்கிறது. சங்கீதம் 31:18ல், "பொய் உதடுகள் கட்டப்பட்டுப் போவதாக". கர்த்தர் வெறுக்கின்ற 7 காரியங்களில் பொய் உதடும் ஒன்று. எபேசியர் 4:25ல்,  "பொய்களைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்" என்று கர்த்தர் அறிவுறுத்துகிறார்.ஒரு செவிலியர், புற்று நோயாளியைப் பார்த்து, "இப்பொழுது சுகமாகிக் கொண்டு வருகின்றீர்கள்" என் கூறுகிறார். நாமனைவரும் அறிவோம், ஒரு அற்புதம் நிகழ்ந்த்தாலொழிய சுகம் கிடைக்காது என்று. ஓனர் உள்ளே இருந்துகொண்டே தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் அவர் இல்லை எனக் கூறும்படி தன் உதவியாளரை வற்புறுத்துகின்றார்.கிருஸ்துமஸ் நாட்களிலே கிருஸ்துமஸ் தாத்தா தோன்றி இந்த அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு மறைந்து விட்டார். என் தன பிள்ளைகளிடம் கூறும் பெற்றோரும் உண்டு. இவையனைத்த்தும் ஏமாற்றுகின்ற பொய்கள். பேசுகின்ற அனைத்தும் தவறான படத்தைக் காட்டுகின்றன. சரியான வார்த்தைகளைப் பயன் படுத்தி உன்மையில்லாதவைகளைப் பேச முடியும். வேறு அர்த்தத்தோடு .

ஆ) அவமதித்தல்: அடுத்தவர்களின் கௌரவத்தை உடைக்கும்படியான தவறாகப் பேசுதல். இது பொதுவாக ஒருவரது வார்த்தைகளைப் பினைத்து அவர் சொன்னதைத் தவறான அர்த்தத்திலே எடுத்துக் கொண்டு, திரும்பத் திரும்ப அவரைப் பற்றிய கதைகளை - உண்மையை அறிந்து கொள்ளாமல் பேசுவது. எரேமியா 18:18ல், ".......இவன் வார்த்தைகளைக் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப் போடுவோம் வாருங்கள் என்றார்கள்."கட்டுப் படுத்த முடியாத நாவினால் மக்கள் பல வருடங்களாக பிறரின் கௌரவத்தைப் பாதிக்கும்படி அவமானப்படுத்துகின்றனர். கர்த்தருடைய முழு அனுமதியுடன் நடந்தாலும், இயேசு சிலுவையில் அடிக்கப்படக் காரணம், அவருடைய வார்த்தைகளைத் திரித்துக் கூறியதாலும், தவறாகப் பேசியதாலேயுந்தான். 

மது சொந்த தோல்விகளை மறைக்கவும், அடுத்தவர் கண்களிலே நம்மைப் பற்றி பெரிதாக நினைக்கவும், நாமே பிறரிடம் வளைந்து,  குழைந்து நடந்து கொள்ளுகிறோம். அடுத்தவரது கிரீடத்தை தேய்த்து, தேய்த்து சுத்தப்படுத்துவது, நமது பார்வைக்குச் சரியாகத் தோன்றுகின்றது. அவருடைய நல்ல பெயரும் அவருடைய சொத்துக்களைப் போலவே புனிதமானது. அடுத்தவர் வீட்டுக்குள்ளே பிரவேசித்து அவரது வீட்டிலுள்ள சாமான்களை எல்லாம் உடைத்து வெளியே எரிவதைப் போலத்தான் அவருடைய பெயருக்கு களங்கம் விளைவிப்பதும். 

இ) அமைத்தியாய் இருத்தல்: பொய்சாட்சியின் அடுத்த பகுதி, குற்றஞசாட்டப்பட்ட நபரைப் பற்றிய சரியான தகவலை அறிந்திருந்தும் சொல்லாமல் அமைதி காப்பது. வார்த்தையின் மிகுதியினால் எப்படி பாவமில்லாமல் போகாதோ, அதைப் போல பேசவேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும். 

ன் பக்கத்திலுள்ளவர் தவறு செய்தவராக் குற்றம் சாட்டப்படும் பொழுது - அவர் குற்றமில்லாதவர் என்று உங்களுக்கு தெரிந்து - நீங்கள் பேசாமலிருந்தால் அது அவருக்கு விரோதமாக பொய்சாட்சி சொல்லுவதைப் போன்றது.ஒருவரைப் பற்றி ஒருவர் பேசுகின்ற காரியம் தவறு என்று தெரிந்தும் நீங்கள் அதை சரி செய்யாமல் அமைதியாய் இருந்தால் அது பொய் சாட்சியாகும். அமைதியாய் இருப்பது நல்லதுதான், சில சமயங்களில் அதுவும் பாவமாகி விடுகின்றது.

ஈ) மிகைப்படுத்துதல்: ஒரு காரியத்தை, உண்மை என்ற எல்லைக் கோட்டையும் தாண்டி பெரிதாகக் காட்டுவது.  இது ஒரு வகையில் பொய்யாகும். இப்படித் தொடர்ந்து பேசும்பொழுது, எப்பொழுது எதைப் பேசினாலும் மிகைப்படுத்துதல் கலந்து விடும். ஒரு சிறுவன் தான் மிருககாட்சி சாலையில் பார்த்த ஒட்டகசிவிங்கியைப் பற்றி தன் அம்மாவிடம் கூறும் பொழுது, "அம்மா அந்த சிவிங்கிக்கு கழுத்து ஒரு மைல் நீளமிருந்தது" என்றான். அதற்க்கு அவன் அம்மா அவனைப் பார்த்து, "எத்தனை முறை சொல்லுவது? மிகைப்படுத்தி பேசாதே " என்று கூறினார்கள். இப்பொழுது தினசரிப் பத்திரிக்கைகளை வாசித்தொமானால் ஏறக்குறைய எல்லா செய்திப் பத்திரிக்கைகளிலும் மிகைப்படுத்துதல் இருக்கும். உண்மை எப்பொழுதுமே சுவராஸ்யமாக இருக்காது. 

உ) வதந்தி: பிறரைப் பற்றிப் பேசும் உரையாடலில் தேவையற்ற பகுதிதான் வதந்தி. ஒருவரது தனிப்பட்ட, நெருங்கிபபழ்குகிறவர்களைப பற்றி தேவையறவைகளைப் பேசுவதே வதந்தியாகும். வதந்தியைப் பரப்புபவர், பிறரது வேலையைப் பற்றிய செய்திகளை சூடாக வைத்திருப்பார்.  அவர் பிறரது கௌரவத்தைப் பாதிக்கின்ற காரியங்களைப் பேசமாட்டார் என்ற போதிலும், அவரைப் பார்க்கும் போதெல்லாம் பிறரைப் பற்றிய புதிய செய்திகளை எப்பொழுதும் வைத்திருப்பார். அவர் எப்பொழுதும் பிற குடும்பங்களில் என்ன நடக்கின்றது? பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? புதிய வீட்டை என்ன விலைக்கு வாங்கினார்? என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பார். சமுதாயத்தில் என்ன நடக்கின்றது? என்பதைத் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் வதந்தி என்பது அடுத்தவரது தனிப்பட்ட விஷயங்களைத் தெரிந்து கொள்வது. இது ஆபத்தை விழைவிக்கும். ஒரு உதரணமாக, ஒருவர், இந்தப் பொருளை  செலவின், ஜெயக்குமாரிடம் வாங்கியிருக்கிறார் என் கூறினார். அவர் அடுத்தவரிடம் இந்த பொருளை செலவின், ஜெயக்குமாரிடமிருந்து பெற்றுக் கொண்டார் என் கூறினார். அவர் அடுத்தவரிடம், இந்தப் பொருளை செலவின் ஜெயகுமாரிடம் இருந்து எடுத்துக் கொண்டார் என் கூறினார்.  அவர் அடுத்தவரிடம், இந்தப் பொருளை செலவின், ஜெயக்குமாரிடமிருந்து திருடிவிட்டார் எனக் கூறினார். அடுத்தவரைப் பற்றிய தகவல்களைப பரிமாறும் பொழுது, அதிகப்படியான  தகவல்களை,  அதிகப்படியான தகவல்களை, அதிகப்படியான  தகவல்களை, கொடுத்துக் கொடுத்து கடைசியாக வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பாக பொய்யாக வந்து சேருகிறது. இப்படி வதந்தி ஆரம்பித்து, பேசப்படுகிற நபருக்கு ஆபத்தாகப் போய் முடிகிறது. வேதம் சொல்லுகிறது, 1தீமோத்தேயு 5:13ல், "...மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும், தகாத காரியங்களைப் பேசுகிறவ்ர்களாயுமிருப்பர்கள்".

ஊ) தேனொழுகப் பேசுதல் இது ஒழுக்கமில்லாமல் புகழுதல், இப்படிப் பேசுகின்றவர், முகத்திற்கெதிரே புகழ்ந்து பேசுவர்.முதுகிற்குப் பின்பும் அதேபோல பேசுவர் என  எதிர் பார்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் தேனொழுகப் பேசுவர். என்ன பேசுகிறோம்? என்பதைக் குறித்து அவர்களுக்கு கவலையில்லை.இப்படிப் பேசுவதும் பொய்யின் ஒரு பகுதியே. வேதாகமம் சொல்லுகிறது, "இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப பேசுகின்ற நாவையும் கர்த்தர் அறுத்துப் போடுவார்".சங்கீதம் 12:3. நம்பிக்கை - உறுதி - தெளிவு இல்லாமல் அநேக காரியங்களுக்கு கவனமில்லாமல் அதிகமான மதிப்பு கொடுக்கப்படுகிறது. பேசுபவர், தமது உண்மையான வழி - நம்பிக்கை-மதிப்பீடு - பார்வை எது? என் அறியாமலேயே அதிகமான வார்த்தைகளைப் பேசுகின்றனர். எங்கே தகுதி இருக்கிறதோ அங்கே புகழ்ந்து கூறப்படுதலும் இருக்கிறது. ஆனால்  அது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருவதாக இருக்க வேண்டும்.

நேரடிப் பொய், அவமதித்தல், அமைதியாய் இருத்தல், வதந்தி, தேனொழுக பேசுதல் இவை எல்லாம் தவறான சாட்சிகளுக்கு சில பொதுவான வழிகளாய் இருக்கிறது. ஆண்டவர் அருளிய 9ம்  கட்டளையை மீற இன்னும் அனேக வழிகள் இருக்கின்றது. உதாரணமாக மாய்மாலம். வேதம் சொல்லுகிறது. ஒருவன் தன்னைக் கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொண்டு,  அதன் வழிகளில் நடக்காவிட்டால் அவன் பொய்யன். நாம், நம்மை கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றவன் என் அழைத்துக்கொண்டு, ஆண்டவரோடு ஐக்கியம் கொண்டிருக்கிறேன் என் உரிமை பாராட்டிக் கொண்டிருந்து, இருளான காரியங்களையும் (அரசாங்கத்தை ஏமாற்றிக் கொண்டு இன்னும் பல) பாவத்தை விடாமலும் இருந்தால், "சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாய் இருப்போம்." (1யோவான் 1:6) என வேதம் கூறுகின்றது. 

ப்பொழுதும் மிகச் சரியாக உண்மையே பேசுவது எளிதான செயல் அல்ல. எப்பொழுதுமே பிறரை எமர்ற்றுகின்ற இந்த சோதனையில் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளுவது அவசியம். பைபிள் சொல்லுகிறது: "பொய் சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை". (நீதி.19:5) தொடர்ந்து தவறான சாட்சியோடு நாம் இருப்போமானால் விளைவு, கர்த்தரிடமிருந்து வரும் கடுமையான் தண்டனையாக இருக்கும். கர்த்தர் பரலோகத்தைப் பற்றிப பேசும் பொழுது, (வெளி.21:8ல்) "பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்". என்கிறார். 

அடுத்த முறை பிறரைப் பற்றி இழிவாகப் பேச சோதிக்கப்படும்போது, வதந்தியைப் பரப்ப வாய்ப்புக் கிடைக்கும்பொழுது, உண்மையின் அளவுக்கு மீறி பேச வாய்ப்பு வரும் பொழுது  - கர்த்தர் பொய் சாட்சியைப பற்றிக் கூறிய தண்டனையை நினைத்துப் பார்ப்போம். ஆண்டவர், சத்தியத்தைப் (உண்மையை) பேசக் கவனமாய் இருப்போரை கனப்படுத்தி ஆசீர்வதிக்கின்றார். மட்டுமல்ல, பொய்யான சாட்சி கூறுவோரைக் கடிந்து கொள்ளுகிறார். ஒரு பிரபலமான செய்யுளின் சில  குழந்தைத்தனமான வரிகள்இப்படிக் கூறுகிறது,

இங்கே ஒரு சிறிய கதவு 
எல்லாரும் அதைப் பூட்டலாம்:
அந்தச் சிறிய கதவு,
சற்று உங்கள் மூக்குக்கு கீழே.

மக்கு விடுதலையளிக்கும்படியாய் 10 கட்டளைகளும் நமக்குக் கொடுக்கப்படவில்லை. நம் இரட்சகராகிய இயேசுவிடம் அவை நம்மை துரத்துகின்றன. புதிய ஏற்பாடு நமக்கு, ஆண்டவருடைய பிரமாணங்கள் (10கட்டளைகள்) அனைத்தும் நம்மை இயசுவிடம் வழிநடத்தும் பள்ளிக்கூட வாத்தியார்  போல செயல்படுகின்றது. "நாவை அடக்க ஒரு மனிதனானாலும் கூடாது." (யாக்கோபு 3:8) ஆனால்  இயேசுகிறிஸ்துவால் மட்டுமே முடியும். (தேவனால் எல்லாம் கூடும்) நீங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், இயேசுவிடம் வந்தால், அவர் உங்களது கசப்பான நாவை, இனிமையானவைகளைப் பேசுகின்ற நாவாக மாற்றித் தருவார். 

ஜெபிப்போம்!

எங்களை நேசிக்கின்ற அன்பான தகப்பனே! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம். நீர் எங்கள் மனித ஜாதிக்கு மா பெரும் கொடையாகக் கொடுத்திருக்கிற பேசும் வரத்திற்காக நன்றி செலுத்துகின்றோம். எங்கள் நாவை மிகச் சரியாக பயன்படுத்தி உம்முடைய நாமத்தை மகிமைப் படுத்த உதவி செய்யும். வாயின் வார்த்தைகளில் நங்கள் கவனமாய் இருக்க உதவி செய்யும். கிருபையுள்ள வார்த்தைகளைப் பேசி பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். இயசுவின் நாமத்தில் ஜெபங்களும், எங்கள் பிதாவே. ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard