( அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா...இத பாருங்க இப்ப நான் எழுதப் போறத பார்த்தவுடனே எல்லாரும் அதிர்ச்சியாயிடுவாங்க...ஆதரவாளர்களெல்லாம் லைக் போடுவாங்க..........)
அன்பான நண்பரே, உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. ஆனாலும் பாருங்க...வேதம் என்ன சொல்லுது ?
ஏசாயா 29:11 ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப் போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்,
அதனால தான் நாங்க 21 நாள் 40 நாள் இப்படியெல்லாம் உபவாசம் பண்ணி அற்புத சக்திபெற்று வெளிப்பாடு கொண்டு வர்றோம். வெளிப்பாடு எல்லாவற்றையும் அப்படியே சொல்லவும் முடியாது.சொன்னாலும் இந்த ஜனங்களுக்கு புரியாது. அதனால கொஞ்சம் ந்யூஸ் சானல் கொஞ்சம் டிவி சீரியல் கொஞ்சம் நாசா ரிப்போர்ட் கொஞ்சம் பைபிள் அல்லாத்தையும் போட்டு மிக்ஸ் பண்ணி கரம் மசாலா போட்டு தயாரிச்சு கொடுக்கிறோம். எனவே எங்க மார்க்கெட் ஸ்டடியா போகுது.இத பார்த்து உங்களுக்கு ஏன் போறாம...வேணுமின்னா நீங்களும் ட்ரை பண்ணுங்க...அதுக்கு சாமர்த்தியம் இல்லாமல் பொழைக்கறவன் பொழப்பையும் கெடுக்கக்கூடாதுல்ல...
அரிசி கடைக்கு போறீங்க...அரிசி வாங்கறீங்க...பாஸ்மதி ரைஸ் என்றே வைத்துக்கொள்ளுவோம்...உடனே அது பிரியாணி ஆயிடுமா..? பிரியாணி செய்ய பிரியாணி மாஸ்டர் வேணுமில்லே... அதான்...அதான் சொல்ல வர்றேன்...எப்படி பிரியாணி மாஸ்டர் இல்லாம பிரியாணி வராதோ அப்படியே பைபில் மட்டுமே இருந்தால் போதாதுப்பா...வெறும் வசனம் அரிசி கடையில இருக்கற அரிசி மூட்டை மாதிரி...அதை சமைக்கணும்பா... சமைக்கணும்...அதே மாதிரி துணிகடைக்கு போறீங்க மீட்டர் மீட்டரா நீங்க துணிவாங்கினாலும் அதை தைச்சு கொடுக்க ஒருத்தன் வேணுமில்லே...அதான்...அதான் சொல்ல வர்றேன்...நாங்க டிப்ளமா ஹோல்டரான மாஸ்டர் டைலர் மாதிரி...ஓகே கிளம்புங்க...எனக்கு ஷூட்டிங் நேரமாகுது...அப்புறம் இன்னொரு விஷயம் இதுபோல தொழில் ரகசியத்தையெல்லாம் போட்டு உடைச்சு இன்னொருத்தன் பொழப்பை கெடுக்காதீங்க...அது நல்லதுக்கில்ல...ஆமா..!