இன்று மாலை என்னுடைய தாயாருடன் பேசிக்கொண்டிருந்தபோது....அம்மா உங்களுக்கு என்ன குறை, 72 வயது என்பது எத்தனை நிறைவான வயது.ஆண்டவர் உங்களை அதிகமாக நேசிக்கிறாரே,என்று சொன்னபோது 68 என்று நினைத்தேன் என்றார்கள். இல்லையே 1942 என்றால் இதோ 71 முடிந்து 72 ரன்னிங் என்றதும் ஒருவித உருக்கத்துடன் இப்படி சொன்னார்கள், ஆமா நான் போய்க்கொண்டே இருக்கிறேன்,என்றார்கள். அவர்களை ஆறுதல் படுத்தும்வண்ணமாக நான் சொன்னது, ஏற்கனவே ப்ரேமையா எனும் குருவானவர் ஒருவர் கல்லறை மண்ணில் வைத்து சொல்லக்கேட்ட செய்தி துணுக்கு:
உலகம் மரணத்தை ஒரு முற்றுப்புள்ளியாக பார்க்கிறது.
ஆனால் நம்முடைய ஆண்டவர் அதை ”கமா” எனும் அரைப்புள்ளியாக மாற்றினார். ஆம்,மரணம் என்பது நமக்கெல்லாம் ஒரு முடிவல்ல,அது அடுத்த வாக்கியத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் ”கமா”வாகும்.
அப்படியே உலகம் மரணத்தை கேள்விக்குறியாக பார்க்கிறது.
ஆனால் கர்த்தருடைய உயிர்த்தெழுந்த வல்லமையானது நமக்குள் வெளிப்படுவதால் அதுவே ஆச்சர்யகுறி - யாகிவிட்டது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)