Congratulation: Your mobile number have won $1Million in 2012 Olympics Mobile Promo held in USA, to claim send your full details email: olympicclaims@live.co
CONGRATS YOUR MOBILE NO HAVE WON 500,000.00 POUNDS IN 2012 NOKIA INT'L MOBILE AWARDS UK TO CLAIM UR PRICE SEND YOUR NAME ADDRESS PHONE NO TO nokiaawd@live.co.uk
மேற்காணும் குறுஞ்செய்தி அடிக்கடி நம்முடைய மொபைல் எண்ணுக்கு வருகிறது.அண்மையில் ஒலிம்பிக் சீஸன் என்பதால் அது தொடர்பாக ஒரு குலுக்கல் நடைபெற்றதாகவும் அதில் நம்முடைய எண்ணுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளதாகவும் அதை உடனடியாக உரிமை கொண்டாட வேண்டுமானால் நம்முடைய தனி தகவல்களை அவர்கள் கொடுத்துள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்பவேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல நூற்றுக்கணக்கான குறுஞ்செய்திகளையும் மின்னஞ்சல்களையும் நாம் பொருட்படுத்தாமல் நீக்கிக்கொண்டுதானிருக்கிறோம். ஆனாலும் இன்று இதுகுறித்து ஒருவித பாரமுண்டானதால் நமது நெட்வொர்க் சேவையாளரை தொடர்புகொண்டு யோசனை கேட்டோம். அவர்கள் புகாரைப் பதிவுசெய்ய மறுத்ததுடன் அதுகுறித்து அந்த எண்ணுக்கே தொடர்புகொண்டு கேட்கவும் தங்களால் ஏதும் செய்யமுடியாது என்றும் கூறிவிட்டனர்.அது எப்படி அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டால் நம்முடைய மொபைல் போனிலுள்ள விவரங்களை எடுத்துவிடுகிறார்களாமே என்று கேட்டபோதே தொடர்பு துண்டிக்கப்பட்டது. சிலசமயம் சம்பந்தப்பட்ட (ஏர்டெல்,ஏர்செல்,வோடஃபோன் போன்ற) நிறுவனங்களின் வெளிநாட்டு கிளை பெயரிலும் குறுஞ்செய்திகள் வந்து குழப்பமடைய செய்யும்.
எல்லாவற்றுக்கும் அடிப்படை நோக்கம் இச்சையும் அதை நிறைவேற்றிக்கொள்ளத் துடிக்கும் மனமுமே காரணம் என்பது தெரிந்ததே. இதில் பெரும்பாலும் அப்பாவி பெண்களே விழுகிறார்கள்.அண்மையிலும் ஒரு சகோதரி இதேபோன்றதொரு குறுஞ்செய்தியை நம்பி யாரிடம் சொல்லாமல் தனது நகையை அடகு வைத்து இந்த மோசடியாளர்களால் சொல்லப்பட்ட வங்கி எண்ணுக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி ஏமாந்திருக்கிறார்.இன்னொரு நண்பர் கிட்டதட்ட 4.5 லட்சம் ரூபாய் வரை இழந்து வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு நிற்கிறார்.
இதேபோல ஒருநாளில் எத்தனைபேர் ஏமாறுகிறார்களோ என்று நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. இதுகுறித்து புகார் செய்ய சைபர் க்ரைம் செல்லின் தொடர்பு எண்ணை கீழ்க்காணும் லிங்கிலிருந்து எடுத்து நீண்ட முயற்சிக்குப்பிறகு பேசினால் தொடர்புகொண்ட பணியாளர் சொன்னது, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகாரை எழுதிக்கொடுக்கவேண்டுமாம். இதில் நாம் ஏமாறாவிட்டாலும் பொதுநலன் கருதி புகார் செய்கிறோம் என்று சொன்னாலும் அதேபொதுநலனில் அக்கறை அதிகாரிகளுக்கு இருக்கவேண்டுமே..!
இதுபோன்ற புகார்களை இணையத்தில் பதிவுசெய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாமே என்பது நம்முடைய எண்ணம்.இதுகுறித்து அக்கறையுள்ள நண்பர்கள் இந்த செய்தியை அனைவருக்கும் ஷேர் பண்ணி உதவலாமே..!
மிக அண்மையில் இந்த குறுஞ்செய்தி பெறப்பட்ட மொபைல் எண்களும் நேரமும் பின்வருமாறு:
# +917503211238 On 22.07.2012@02:51am # +919716075847 On 13.08.2012@05:36am