Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவணத்துக்காக ஒரு தவம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: கோவணத்துக்காக ஒரு தவம்..!
Permalink  
 


இதே கருவில் இன்னொரு கதை...

எல்லாம் ஒரு கோவணத்துக்காக...

asirvatham.jpg

எல்லாவற்றையும் துறந்து விடு என்று ஒரு குரு சொல்லக் கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தான்.

அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது.

ஊரார் என்ன இது? இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க "எலி கடித்து விட்டது" என்று பதில் சொன்னான் அவன்.

ஊரார், "அந்த எலியிடமிருந்து பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பூனை வளர்க்கலாமே?" என்றார்கள்.

அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியைக் கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான்.

ஊரார், "ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே" என்று பசு மாட்டைத் தானமாக அளித்தார்கள்.

மாடு வந்தது. புல் தேவையாக இருந்தது. புல்லுக்காக தினம் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான். இதற்காகவா இங்கு வருகிறாய், ஒரு கால் ஏக்கரா நிலம் வைத்துக்கொண்டு புல் பயிரிடேன் என்று புறம்போக்காக இருந்த நிலத்தைக் கொடுத்தார்கள்.

நிலத்துக்கு வேலி, பால் கறக்க ஒரு இடையன், அவனுக்குச் சோறு, அதற்காகக் குடும்பம். என்று குரு  சிஷ்யனை வந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு பண்ணையே செழித்திருந்தது. இதைப் பார்த்த குரு, "மனைவி, மக்கள், சுற்றம், ஆட்கள், நிலம், மாடு, மனை என்று எல்லாம் சேர்ந்து விட்டாயே எப்படி?" என வினவினார்.

"சுவாமி எல்லாம் இந்த ஒரு கோவணத்துக்காக... " என்றான் அவன்.

-பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை.

 monke.jpg



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

துறவி ஒருவர் தன் சீடனிடம் நீ காட்டில் போய் தவம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார். கூடவே ஒரு கட்டுப்பாடும் கட்டளையிட்டார்: நீ தவம் பண்ணும் நாட்களிலெல்லாம் உன்னிடம் 2 கோமணம் இருக்கவேண்டும்; ஒன்றைத் துவைக்கும்போது, இன்னொன்றை அணிந்துகொள்ள வேண்டும் என்றார் துறவி. சீடன் அதை ஒத்துக்கொண்டு தவம் பண்ணக் காட்டுக்குப் போனான்.

 

தவம் தொடங்கி கொஞ்சநாளுக்கு அப்புறம், ஒரு நாள் அவன் தவம் பண்ணிக்கொண்டிருக்கயில் அவன் துவைத்து வெயிலிலே போட்டிருந்த இரண்டாம் கோமணத்தை எலி கிழிச்சுப்போட்டது. எனவே எலி கோமணத்தைக் கிழிச்சுப் போடாதபடிக்கு அவன் 2,3 நாள் கண் விழித்து காவலிருந்தான். ஆனால் காவலிருப்பது தான் தவம் பண்ணுவதைக் கெடுக்குகிறது என உணர்ந்துகொண்ட அவன், ஓர் உபாயத்தைக் கண்டுபிடித்தான். ஒரு பூனை இருந்தால் அந்தப் பூனை எலியை சாப்பிடும், அதினாலே தன் கோமணத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று எண்ணினான். எனவே ஒரு பூனையை வாங்கி தன் கோமணத்தைப் பாதுகாத்துக்கொண்டான்.

 

2,3 நாளுக்கப்புறம் அந்தப் பூனை மியாவ், மியாவ் என்று கத்திக்கொண்டு அவன் தவம் பண்ணுவதைக் கெடுத்தது. இதற்கு என்ன வழி என்று யோசிக்கும்போது பூனைக்குப் பால் வேணும், ஆனால் பக்கத்து ஊர்களில் வீட்டுக்குப் பால் கொண்டுபோய் கொடுப்பவர்கள் (home delivery) எல்லாம் பெண்களே, பெண்கள் தனது இடத்துக்கு வந்தால் தான் தவம் பண்ணுவதற்கு கெடுதல் உண்டாகும் என்பதால், பாலுக்காக ஒரு பசுவை வாங்கினான் அந்த சீடன். இன்னும் 2,3 நாள் போயிற்று.

 

தன் கவனமெல்லாம் பசுவின் மேல் இருப்பதால், தன் தவத்திற்குக் கெடுதல் உண்டாகிறது என்பதை உணர்ந்துகொண்ட அவன், ஒரு வேலைக்காரனை நியமித்தான். எல்லாம் நல்லது, இனி நிம்மதியாக தவத்தைத் தொடரலாம் என நினைத்தான். ஆனால் பாவம் அந்த வேலைக்காரனுக்கு வேலை குறைவாக இருந்ததால், அவன் சினிமாப் பாட்டுகளைப் பாடினான்; அது அந்த சீடனுக்குத் தொந்தரவாயிற்று. எனவே வேலைக்காரனுக்கு அதிக வேலை கொடுக்கவேண்டும் என்று எண்ணி இன்னும் 4,5 பசுக்களை வாங்கினான்.

 

இப்படியாக எல்லா பிரச்சனையும் ஓய்ந்தது என அவன் நினைத்திருக்கும்போது, ஒரு சில பசுக்களின் பால்மடி வீங்கியிருப்பதைப் பார்த்தான். வேலைக்காரன் சொன்னான்: இவ்வளவு பசுக்களின் பால் நமக்குத் தேவை இல்லாததால், எல்லா பசுக்களின் பாலையும் நான் கறப்பதில்லை, அதினாலே இப்படியாயிற்று என்பதாக.

 

அந்த சீடனுக்கு இன்னும் ஓர் உபாயம் தோன்றிற்று. பாலைப் பக்கத்து ஊர்களில் விற்றிடலாம் என எண்ணி மேலும் 1,2 வேலைக்காரர்களை நியமித்து, பாலை விற்கத் தொடங்கினான்.

 

போகப்போக, தண்ணி சேர்க்காத அவனது பாலுக்கு தேவை (demand increased) பெருகிற்று. எனவே மென்மேலும் பசுக்களை வாங்கி, நிறைய பாலை விற்று, அவன் ஒரு முழுநேர பால் பண்ணை வணிகர் ஆகிவிட்டான் என்பதைச் சொல்லத் தேவையில்லை .

 

கொஞ்ச காலத்துக்கப்புறம் அந்த சீடனை தவம் பண்ண அனுப்பின துறவி சீடனுடைய முன்னேற்றத்தைப் (progress) பார்கக வந்தார். அவர் வரும்போது சீடன் சுழல் இருக்கையில் (rolling chair) அமர்ந்து, தனது வாடிக்கையாளர்களிடம் கைத் தொலைபேசியில் (அலைப்பேசி cellphone) பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார் துறவி.

 

அவர் சீடனிடம்: "நான் உன்னை தவம் பண்ண அனுப்பினது இதற்குத்தானா?" என்று கேட்டதற்கு,

 

சீடன்: "எல்லாம் ஒரு கோமணத்தைக் காப்பாற்றும்படிக்குத்தான் சாமீ", என மறுமொழி சொன்னான்.

 

கதையின் கருத்து

 

இயேசு சீடர்களிடம் (தற்பொழுது கிறித்தவர்கள்) சொன்னது: நீங்கள் போய் உலகமெங்கும் சுவிசேஷம் பரம்பவேண்டும் என்பதே.

 

Mat 10:9 உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது,

Mat 10:10 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

 

ஆனால் கிறித்தவர்கள் பள்ளிகள், கோவில்கள், மருத்துவமனைகள், டி. வி சேனல் போன்ற எல்லாவற்றையும் கட்டுவதில் முழுகி இருக்கிறார்கள், சுவிசேஷம் பரப்புகிறது மட்டும் மிகவும் குறைவுபட்டுள்ளது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard