இதில் வருத்தப்படவேண்டியது "இழிவான ஆதாயத்திற்காக" ஆவியானவரை கால்பந்தாக விளையாடுபவர்கள் தான்.
ரசிக்கும்படியான , பலரை இடிக்கும் கற்பனை :)
ஆவியானவர் நிமித்தமாக மிகவும் அச்சத்துடனே எழுதினேன். ஆனால் அதையும் ரசித்து வரவேற்ற நண்பருக்கு நன்றிகள் பல. இது முழுவதும் கற்பனையல்ல, நான் பெட்ரோல் போட்டது உண்மையே. நள்ளிரவு செய்தியில் பெட்ரோல் விலை உயர்வு செய்தியை அறிந்து என்னை நானே பாராட்டிக்கொண்டேன். ஆனால் அதையொட்டிய மற்றவை எனது சொந்த கற்பனை. 1999 ஜனவரி 25-ல் நான் முதன்முதலாக (M80) இரு சக்கர வாகனம் பயன்படுத்த துவங்கியபோது 27 ரூபாய் பெட்ரோல் விலை இருந்தது. இப்போதோ மிகவும் கஷ்டமாகவே இருக்கிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நேற்றிரவு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று வீடுதிரும்பிக்கொண்டிருந்தேன். இரவு மணி 10 இருக்கும்.திடீரென ஆவியானவர் என்னை வல்லமையாக ஆட்கொண்டு உன்னதத்துக்குக் கொண்டு சென்றார். நான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பதே எனக்கு மறந்துபோனது. சுற்றிலும் தேவ தூதர்களும் தேவ பிரசன்னமும் என்னை சூழ்ந்துகொண்டது. திடீரென சிங்காசனத்திலிருந்து ஒரு குரல்...”அங்கே பார்...அதோ தெரிகிறதே, அந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடு...” என்று என்னை நோக்கி சொன்னது. உடனே நான் கீழ்ப்படிந்து வண்டியை அந்த பெட்ரோல் பங்க் உள்ளே கொண்டு சென்று நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டேன். எல்லோரும் 150 ரூபாய்க்கு போட்டபோதும் நான் வழக்கம்போல நூறு ரூபாய்க்கு தான் போட்டேன். ஆனால் நான் அந்த சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து பெட்ரோல் போட்டதன் பலனை வீட்டுக்கு வ்ந்த பிறகே அறிந்துகொண்டேன். இரவு வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு நள்ளிரவு சுமார் 12:30 மணிக்கு டிவி செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். ஆஹா...பெட்ரோல் 72 பைசா உயர்த்தியிருக்கிறார்கள்.அது நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அங்கே ஆவியானவர் என்னை உன்னதத்துக்குக் கொண்டு சென்று வல்லமையாக அபிஷேகித்து என்னை பெட்ரோல் போடச்சொல்லாவிட்டால் எனக்கு இன்று 72 பைசா ந்ஷ்டமாகியிருக்குமே... இதோ நான் ஆவியானவருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து பெட்ரோல் போட்டதால் எனக்கு 72 பைசா லாபம் தானே ?! எனவே நானும் ஒரு தீர்க்கதரிசி தான் என்பது இன்று நிரூபணமாகியிருக்கிறது. ஏன் சார் யார் யாரோ தீர்க்கதரிசியாகும்போது நான் தீர்க்கதரிசியாகக் கூடாதா... உங்களுக்கு என்ன பொறாமை... அரிசி விற்கிற விலையில தீர்க்கதரிசியாகாவிட்டால் பிழைப்பை நடத்த முடியாதுங்க...!!!
(தற்கால கிறிஸ்தவத்தின் மோசமான நிலையை இடித்துக்காட்டவே மேற்கண்ட அனுபவத்தை நையாண்டியாக எழுதியிருக்கிறேன். இதில் தேவையில்லாமல் ஆவியானவரைக் குறித்து எழுதப்பட்ட கற்பனையான வார்த்தைகளுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனாலும் எனக்கு இதைவிட வேறு வழி தெரியவில்லை.தற்கால ஊழியர்களில் பெரும்பாலானோர் இப்படியே மிகைப்படுத்தப்பட்டவைகளை ஆவியானவர் பெயரால் பொய்யுரைக்கிறார்கள் என்பதை மட்டும் அறிவேன். கர்த்தர் அடியேனை மன்னிப்பாராக.)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)