Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அக்கரைக்கு யாதர செய்யும் சீயோன் சஞ்சாரி..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
அக்கரைக்கு யாதர செய்யும் சீயோன் சஞ்சாரி..!
Permalink  
 


திட்டமிட்ட பயணங்களும் உண்டு; திட்டமிடப்படாத பயணங்களும் உண்டு; திட்டமிட்ட சந்திப்புகளும் உண்டு; திட்டமிடாத சந்திப்புகளும் உண்டு. அவ்வாறே சிலருடைய வாழ்க்கையின் இறுதிப் பயணமும் அமைகிறது.சிலருக்கு திடீர் அழைப்பு வரவும் அவர்கள் புறப்பட்டுச்சென்று எதிர்பாராத சந்திப்புகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. எல்லோரும் மரிக்கிறார்கள்; ஆனாலும் எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்களா ? ஒரே இடத்துக்கு செல்லும் எல்லோரும் ஒரேவிதமானவர்களா ? சிலர் விசுவாசிகளாகவும் சில விசுவாசத் தலைவர்களாகவும் இருக்கிறார்கள்.

நேற்று ஒரு விசுவாச தாயார் (சகோ.ஸ்டீபன் அவர்களின் தாயார்) மரித்தார்கள்; இன்று (6.7.2012) ஒரு பாஸ்டர் பால் மோசஸ் தானியேல் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்; இருவரும் ஒருவேளை ஒருவரையொருவர் சந்திக்க நேர்ந்தால் எத்தனை ஆனந்தமாக இருக்கும் ? நாம் இங்கே பூமியில் அவர்களுடைய மரண சரீரத்தை வைத்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருக்க அங்கே அவர்கள் புத்தம்புது இடத்தில் ஆச்சர்யத்துடன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பார்களோ ? எல்லோருமே தங்கள் பயணத்தையும் இலக்கையும் தீர்மானிக்கிறதில்லை. சிலர் பயணத்தை திட்டமிட்டாலும் அந்த குறிப்பிட்ட நாளுக்காகக் காத்திருப்பார்கள். சிலருக்கோ திட்டமிடாத திடீர் பயணங்கள் வாய்க்கிறது.அந்த பயணமானது அவர்களுடைய இறுதி பயணமாகவும் அமைந்துவிடுகிறது.

389145_336606019754903_805595390_n.jpg


இராணுவத்தில் அப்படியே எப்போது போர்க்களத்துக்கு அழைப்பு வரும் என்பது தெரியாத காரணத்தினால் ஒரு வீரன் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். ஆம் பயணத்தையும் இலக்கையும் விட அதற்கான ஆயத்தமே முக்கியமாகும். சிலர் சரியான ஆயத்தமில்லாத காரணத்தினால் தங்கள் பயணத்தைக் கடினமானதாகவும் நம்பிக்கையற்றதாகவும் ஆக்கிக்கொள்ளுகிறார்கள். இரயில் பயணங்களில் ஆரேசியும் (RAC) வெயிட்டிங் (WL) லிஸ்டும் மிகவும் ஆபத்தானதாகும். வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர் குறைந்தபட்சம் ஆரேஸிக்கு முன்னேற தவிப்பார். ஆரேஸி கிடைத்தாலும் பெர்த்தில் சௌகரியமாக பயணிப்பவரைப் பார்த்து பெருமூச்சு விடுவார். அப்படியே வாழ்க்கை பயணத்திலும் நாம் இகத்துக்காகவும் அகத்துக்காகவும் மட்டுமல்ல பரத்துக்காகவும் திட்டமிடவேண்டியது அவசியமாகிறது.

251874_337304956351676_214349691_n.jpg

முக்கியமாக பரத்துக்கான பயணத்தைக் குறித்து திட்டமிடாத வாழ்க்கையை வாழும் ஒருவருடைய நிலைமை மிகவும் பரிதாபமானதாகும். ஆம், பரலோக பயணத்தில் தத்கல் முறை நடைமுறையில் இல்லை. அந்த பாக்கியம் உலகத்திலேயே இயேசுவானவருடன் சிலுவையிலறையப்பட்ட கள்ளன் ஒருவனுக்கு மாத்திரமே கிட்டியது. பவுலடிகளும் கூட தான் இயேசுவானவருடன் சிலுவையிலறையப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால் அவர் பட்ட பாடுகள் ஏராளம் அல்லவா ?

பாஸ்டர் பால் மோசஸ் தானியேல் அவர்களின் பயணம் நிச்சயமாகவே திடீர் பயணம் தான்; இலக்கும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதே.ஆனால் அவர் சரியான ஆயத்தத்தில் இருந்ததால் அவருடைய பயணம் இன்பமாக அமைந்திருக்கும். ஏன் இது நடந்தது என அநேகர் கேள்வி எழுப்பலாம். இன்னொரு மூத்த ஊழியர் கேட்கிறார், ஆண்டவர் இவரை அதிசயமாக உயிரோடு எழுப்பினால் எத்தனை பெரிய சாட்சியாக இருக்கும், இந்த பகுதியில் இவருடைய ஊழியம் வேகமாக வளர்ந்தது, அதனால் அசுத்த ஆவிகளின் கிரியையினால் இது நிகழ்ந்திருக்கும்... இப்படியெல்லாம் பேதமையான உள்ளங்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாலும் ஒரு பயணத்தை திட்டமிட்டு, ஆயத்தமாக இருப்பவரை, அழைப்பு வந்தவுடன் வழியனுப்பி வைப்பதே சரியாக இருக்கும். மனிதர்களாகிய நமக்கு அதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு நல்ல ஊழியரை ஆண்டவர் இந்த அளவுக்கு ஊழியத்தில் பயன்படுத்திய கிருபைக்காக நன்றி சொல்லுவதுடன் அக்கிரமமான இந்த உலகின் போக்குகள் குறித்து அச்சத்துடன் கர்த்தரிடம் புலம்பவேண்டும்.

அவரே நியமித்த நல்ல ஊழியர்களை அவரே எடுத்துக்கொண்டால் சபைகளை யார் கவனிக்கமுடியும் ? ஊழியங்கள் எப்படி திடப்படும் ? பாஸ்டர் பால் மோசஸ் தானியேல் அவர்கள் தனது ஊழியத்தை தன்னை சுற்றி அமைக்காமல் உதவி போதகர்களை ஏற்படுத்தி அதை அப்போஸ்தல ஊழியமாக வளர்த்தெடுத்திருக்கிறார். அப்படியானால் அவர் இன்னும் இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ சபைகளை ஸ்தாபித்து எவ்வளவோ ஊழியர்களை ஏற்படுத்தியிருப்பார். ஆனாலும் அவருடைய அன்பான அணுகுமுறை யாருக்கும் அமையாது. அவருடைய இடத்தை யாராலும் நிரப்பமுடியாது என்றே விசுவாசிகள் ஆதங்கத்துடன் சொல்லுகிறார்கள்.

அப்படியானால் ஏன் ஆண்டவர் இதுபோன்ற அவசர அழைப்பையும் பயணத்தையும் தீர்மானிக்கவேண்டும் ? அதைக் குறித்து கேள்வி கேட்க நமக்கு உரிமையில்லாவிட்டாலும் குறைந்தபட்ச காரணங்களை வகைப்படுத்தலாம். முதலாவது தங்கள் தலைவர்களுக்காக ஜெபிக்காத மக்கள். அடுத்து சாத்தானின் சூழ்ச்சியை அறியாத உடன் ஊழியர்கள். கடைசியாக தன் மீது அக்கறையில்லாத தலைவர். இம்மூன்றும் ஒருவருடைய பயணத்தை துரிதப்படுத்திவிடுகிறது. அழைப்பை ஏற்பதும் பயணத்தை மேற்கொள்ளுவதும் தனிப்ப்ட்ட முறையில் அவருக்கு லாபமானாலும் திருச்சபைக்கு நஷ்டமாச்சுதே. அதிலும் இளம்வயது மரணங்கள் தாங்கொண்ணா துயரத்தையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான் என்று வேதம் சொல்லுகிறது. அதன்படி நாமும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்திருக்கலாமோ என்று யோசிக்கவேண்டும். ஏனெனில் எப்போதெல்லாம் நாம், ’எல்லாம் சௌகரியமாக போய்க்கொண்டிருக்கிறது..’ என்று அமர்ந்திருக்கிறோமோ அப்போதெல்லாம் பிசாசு ஒரு பயங்கரத்தை நிகழ்த்துகிறான். எனவே அவனுடைய சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் அறிந்துள்ள விசுவாசிகளும் அவர்தம் தலைவர்களும் எப்போதும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். அதுமாத்திரமல்ல, மேய்ப்பனை வெட்டுவதும் மந்தையை சிதறடிப்பதும் மீண்டும் அவற்றை கூட்டிசேர்ப்பதும் திருச்சபை தாறுமாறாக செல்லும்போதெல்லாம் ஆண்டவர் மேற்கொள்ளும் வழிமுறையாக இருக்கிறது. எனவே சபையாரும் உடன் ஊழியரும் ஒரு சௌகரியமான சூழல் (குளிரூட்டப்பட்ட நல்ல கட்டிடம், நவீன ஒலிபெருக்கி சாதனங்கள், இசைக் கருவிகள்...) அமைந்தவுடனே அமர்ந்துவிடாமல் மேய்ப்பருடைய தரிசனத்துடன் ஒத்துழைக்கவேண்டும். பாஸ்டர் பால் மோசஸ் டேனியல் அவர்களைப் பொறுத்தவரையிலும் அவருடைய இறுதிகாலம் வரைக்கும் அவருக்குள் சுவிசேஷகனுடைய உள்ளத்தின் தகிப்பு குறையாமலே இருந்திருக்கிறது. அவர் சௌகரியமான சூழலுக்கு மயங்கி அதில் திருப்தியாகிவிடாமல் தனது உடன் ஊழியர்களுடன் தமது தரிசனங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் அவர்களும் அதே உணர்வையடைய போராடியிருக்கிறார். விசுவாசிகளையும் கூட எல்லாவற்றுக்கும் போதகரை சார்ந்திராமல் சுயமாக நிற்கவே பயிற்றுவித்திருக்கிறார். ஆனால் பெரும்பாலான சபைகளில் மேய்ப்பருடைய தரிசனத்துடன் விசுவாசிகளும் உடன் ஊழியர்களும் இசைந்து செல்லாத சூழ்நிலையே இருக்கிறது. இதனால் மேய்ப்பர்கள் சலித்துப்போய் மக்களுடைய மனதுகேற்பவே தங்களை மாற்றிக்கொள்ளுகின்றனர். ஆனால் சிலரோ அவர்களுடைய தரிசனத்துக்கும் சபை மக்களுக்கும் இடையே போராடுகின்றனர். அப்போதுதான் சத்துரு தனது திட்டங்களை அரங்கேற்ற துவங்குகிறான். மேய்ப்பனாகிய தலைவருக்கு நேரும் மன உளைச்சல்களும் ஊழிய பாரங்களும் பல்வேறு சரீர பெலவீனத்துக்குக் காரணமாகிறது. அவர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் ஓடுவதால் அவர்களுடைய சரீரம் இன்னும் மோசமடைகிறது. இதன்காரணமாகவே இதுபோன்ற விரும்பத்தகாத மரணங்கள் நிகழுகிறதோ என்று யோசிக்கவேண்டியதாக இருக்கிறது.

ஒரு ஊழியர் மரணமடைவது என்பது திருச்சபைக்கு மட்டுமல்ல,பரலோகத்துக்கும் பெரும் இழப்பு தானே.அப்படியானால் சபையார் என்ன செய்யவேண்டும் ? அவர்கள் ஊழியரை மனவேதனைப்படுத்தாமல் அவர்களுக்கு ஊழியத்தில் உதவிசெய்யவேண்டும்.அவ்வாறே உடன் ஊழியர்களும் தங்களுக்குள் எவன் பெரியவன் - யார் பாஸ்டருக்கு நெருக்கமானவன் என்ற போட்டி மனப்பான்மையைத் தவிர்த்து இணக்கமாக நின்று ஊழியம் செய்து மேய்ப்பருடைய கரத்தை வலுப்படுத்தவேண்டும்.

  • ” உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.” (எபிரெயர் 13:17)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard