இன்று மாலையில் சென்னையில் வைத்து சுவிசேஷகர் ஆல்பர்ட் சாலமோனுடைய ஊழியத்தின் 25 வது வருட வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. மீடியா பார்ட்னரான ஏஞ்சல் டிவி நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்தது.
மைதானத்தில் பெரிதாக கூட்டம் இல்லாவிட்டாலும் மீடியா அமளிதுமளிபட்டது. இதுபோன்ற விழாக்கள் தேவைதானா என்ற கேள்வி ஒருபுறம் எழும்பினாலும் அதையும் கூட இவர்கள் தேவனுக்கேற்ற ஒழுங்கில் நடத்தினார்களா என்பதே கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.
விசுவாசிகள் பொதுவாக தலைவர்களுக்குக் கீழ்ப்ட்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் எழும்பி தலைவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டிக்கமுடியாது.கண்டிக்கக்கூடிய தலைவர்களை இந்த மீடியா மிருகங்கள் அருகில் வைத்துக்கொள்ளுவதில்லை. எல்லாம் ரெகோபெயாம் ஆட்சிகாலம் போலவே இருக்கிறது.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ராஜன் ஜாண் செய்த கோமாளித்தனங்களே இத்தனை வருத்தத்துக்கும் காரணமாக இருக்கிறது. விழா நாயகரான ஆல்பர்ட்டின் வழுக்கைத் த்லையை கிண்டலடிப்பதும் தனிநபர் புகழ்ச்சியுமாக அவருடைய நாக்கு அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பது அவர் அடித்த ஒரு காமெண்டில் விளங்கியது.
எப்படியெனில் ஆல்பர்ட்டை ஆசீர்வதித்து ஜெபிக்க சிறப்பு அழைப்பாளர்களாக வந்து அமர்ந்திருந்த மூத்த ஊழியர்களை மேடைக்கு அழைக்கிறார்,ராஜன் ஜாண். ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு காமெண்ட் பண்ணியவர் அண்ணாச்சி உங்களுக்கு என்னாச்சி மேடைக்கு வாங்க என்று அலப்பியவர் மேடையில் வைத்து அவரை அறிமுகப்படுத்தி ஜெபிக்க சொல்லும் முன்பதாக, ”அண்ணாச்சி குறுகிய காலத்தில் வேத விகற்பன்னராக விளங்குகிறார் ”, என்று உளறினார்.
இதை யார் கவனித்தார்களோ அல்லவோ இதில் ஒரு ஊழியனுடைய ஆவியை நிதானிக்கமுடிகிறது. அண்ணாச்சி போன்ற்வர்களும் இதுபோன்ற புகழ்ச்சியையே விரும்புகிறார்கள்.இதையெல்லாம் பார்த்து ஆண்டவர் என்ன நினைப்பார் என்ற அச்சமோ மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற வெட்கமோ யாருக்கும் இல்லை.
”அண்ணாச்சி குறுகிய காலத்தில் வேத விகற்பன்னராக விளங்குகிறார் ”, என்ற வார்த்தையில் என்ன தவறு என்று சிலர் யோசிக்கலாம். விற்பன்னராக என்று சொல்லவேண்டியதையே விகற்பன்னராக என்று ராஜன் ஜாண் சொல்லியிருக்கிறார். வாயில் ஏழெட்டு தவளைகளை வைத்திருப்பதைப் போன்ற ஒரு உச்சரிப்பு.இதையே தனது பாணியாக வைத்துக்கொண்டார், போகட்டும். அவரது ஆவியானது ஆவியான்வருடைய கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இதுபோன்ற குழப்பங்களும் மனித புகழ்ச்சியையும் அரங்கேற்றும் தரகர் வேலையைப் பார்க்கமாட்டார் என்று நம்புகிறோம்.
தேசம் அழிகிறது,அழியப்போகிறது என்று ஒருபக்கம் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்,இன்னொரு புறம் இதுபோல வேண்டாத விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். இவர்களுடைய லாஜிக் புரியவில்லை.இங்கு கூடியிருந்த சில ஆயிரம் மக்களுக்காக நகரமெங்கும் எத்தனை ஆயிரம் போஸ்டர்கள் வினைல் ஹோர்டிங்ஸ் ...எல்லாம் யாருடைய பணம் ... ? யாருக்கு புகழ் சேர்க்க ? யாருடைய மார்க்கெட்டை லிஃப்ட் பண்ண ? சபையார் இதனைத் தீவிரமாக யோசிக்கவேண்டும்.
இதில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சோகராகம் பாடும் முன்னாள் அப்போஸ்தலர் பால் தங்கையா வருகை புரிந்திருக்கிறார். அவர் தற்போது தனது சொட்டைத் தலைக்கு விக்கெல்லாம் போட்டு ப்ளே பாய் போல புது தோற்றம் காட்டுவதாலேயே முன்னாள் அப்போஸ்தலர் என்கிறோம்.மேலும் அவருடைய மனைவி ஓடிப்போனவுடனே அவர் ஊழியத்தைவிட்டு விலகியிருக்கவேண்டும்.ஆனால் அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாது புது மலர்ச்சியுடனும் மறுமலர்ச்சியுடனும் வாழ்க்கையைத் தொடருவதாகக் கேள்வி.
இவர்களெல்லாரும் சேர்ந்து எதை எழுப்புவதற்காக எழுப்புதல் பெருவிழா கொண்டாடுகிறார்களோ தெரியவில்லை .
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)