இன்று காலையில், சற்று முன்பு, சகோ.ஸ்டீபன் சேனாபதி எனும் ஊழியரின் நிகழ்ச்சி தமிழன் டிவியில்...
(07:45) இவ்வாறாக ஜெபத்தை முடிக்கிறார், ”இயேசுகிறிஸ்துவாகிய உம்முடைய நாமத்தில் ஜெபிக்கிறோம், பிதாவே..” ஆம், இவரும் ஒரு கள்ள உபதேசக்காரர்தான். இவரிடமும் ஒரு கூட்டம் ஓடுகிறது. ஏஞ்சல் டிவியின் முதலாளிகளைப் போலவே இவருக்கும் மற்ற சபைகளுடன் தொடர்பு கிடையாது. அவர்களும் ஆரம்பத்தில் அப்படியே தனித்து இயங்கினார்கள். இன்றைக்கும் அவர்கள் டிவியில் வித்தியாசமான பலபுதுமுகங்களைப் பார்க்கமுடியும். இவர்கள் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட உபதேசத்தை இரகசிய திட்டமாகக் கொண்டு சபையாருக்குள் இரண்டற கலந்து சபைகளை உடைத்து அல்லது மக்களைத் திசைதிருப்பி திருடி தங்களிடமாய் சேர்த்துக்கொள்ளுகிறார்கள். இவர்களில் யாருமே ஆத்தும ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டு உபதேசிக்கமாட்டார்கள். ஏனெனில் ஏற்கனவே சத்தியத்தைக் கேட்டு முதிர்ச்சியடைந்த விசுவாசிகளே இவர்களுடைய இலக்கு. இவர்களுடைய ஒரே கோஷம் ”ஸ்தாபனத்தைவிட்டு வெளியே வா ..”என்பதே. இவர்களிடம் செல்லத் துவங்கும் விசுவாசி ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் மறுபடியும் ஞானஸ்நானம் பெறவேண்டும், ஏனெனில் இவர்களுடைய உபதேசத்தின்படி பிதா,குமாரன்,பரிசுத்தாவியின் நாமத்தினால் எடுத்த ஞான்ஸ்நானம் செல்லாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் எடுத்தாலே செல்லும். ஏனெனில் வெளிப்பாட்டைப் பெற்றபிறகு அப்போஸ்தலர்களும் அப்படியே ஞானஸ்நானம் கொடுத்தார்களாம். இவர்களும் வெளிப்பாட்டைப் பிரதானப்படுத்துவதால் அவ்வாறு கட்டளையிடுகிறார்கள். இவையெல்லாம் இந்த வலைப்பின்னல்களின் பின்னணியாகும்.
யெகோவா சாட்சிகள், லேட்டர் டே செயிண்ட்ஸ் எனப்படும் பிற்கால பரிசுத்தவான்களின் சபையார்,ஏழாம் நாள்காரர்கள், முக்கியமாக யெகோவா சாட்சிகளின் பல்வேறு உட்குழுக்களான வேதமாணாக்கர், பைபிள் பிலிவர்ஸ், பைபிள் லவ்வரஸ்... இப்படி புற்றீசல்களைப் போல பல்வேறு குழப்பவாதிகள் திருச்சபை மக்களைச் சுற்றி வருகிறார்கள். சென்னை ஏஜி சபைக்கு எதிரே கட்டப்படும் சபையை பலரும் சாத்தானின் சபை என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது மார்மன்ஸ் எனப்படும் லேட்டர் டே செயிண்ட்ஸ் (பிற்கால பரிசுத்தவான்கள்) வேற்று உபதேசக் கூட்டத்தினரின் சபையாகும். யெகோவா சாட்சிகள் பிதாவை மையப்படுத்தி இயேசுவானவரைத் தாழ்த்துவது போலவே அதன் எதிர் குழுவினரான இவர்கள் இயேசுவையே பிதா என்று கூறி பிதாவை தள்ளிவிடுகிறார்கள். ஆக இருதரப்புமே ஒன்றுக்கொன்று நேரெதிர் திசையில் ரப்பர் பேண்ட் போல சபையாரை இழுத்து குழப்புகிறார்கள். இதன் நடுவில் ஆரோக்கிய உபதேசமானது அமைதியான நதியைப் போலவும் அதில் செல்லும் அழகான ஓடத்தைப் போல சபையும் இருக்கிறது.
சென்னையை மையமாகக் கொண்டு ஊழியம் செய்யும் இந்த கள்ளப் போதகர் முகப்பேர் பகுதியிலும் தொடர்ந்து வேப்பேரி பகுதியிலும் இருவேறு பள்ளிகளில் ஞாயிறு காலை ஆராதனை நடத்துகிறார். இவருடைய டிவி நிகழ்ச்சியில் ஜெபம் முடிந்ததும் வெளியிடப்பட்ட விளம்பரம் தான் அதிர்ச்சிரகம். இவர் இரு புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதில் ஒரு புத்தகம் ”நீங்கள் இன்னும் அறியாதிருக்கிறீர்களா ? ” இரு புத்தகங்களையும் ஆண்டவரே இவரின் கையைப் பிடித்து எழுதியதாம். இயேசுவே பிதா என்று நிரூபிப்பதுடன் பிதாவாகிய இயேசு ஏன் பிதாவை நோக்கி பிதாவே..” என்று அழைத்தார் என்பதற்கான காரணத்தையும் (வெளிப்பாடு ?) அந்த புத்தகத்தில் (இயேசுவே ?) எழுதியிருக்கிறாராம். ஏன் இத்தனை பில்டப் கொடுக்கிறார்கள் ? தங்களை உயர்த்திக்கொள்ளவும் ஜனங்களை மிரட்டி ஆளவுமே. இவர் செய்யும் ஜெபத்தில் இடையிடையே வித்தியாசமான சில வார்த்தைகளைப் பேசுவார்.அது அந்நிய பாஷை என்று நாம் நினைத்துக்கொள்ளவேண்டும். ச்சும்மா சொல்லக்கூடாது, ப்ரெஞ்சு அல்லது ஏதோ ஒரு ஜெர்மானிய பாஷை போல ஸ்டைலாக இருக்கும்.
இப்படிப்பட்ட கள்ள ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க சபையாரை அவசரப்படுத்தவேண்டும். அவருடைய புகைப்படமோ வேறு எந்த தகவலோ இணையத்தில் இல்லாததால் வெளியிட முடியவில்லை. அவரைக் குறித்து அறிந்த (சென்னை) நண்பர்கள் இது தொடர்பான தகவல்களைப் பகிரவும். சமயம் வாய்க்குமானால் நேரில் சென்று தகவல்களை சேகரித்து வாசக நண்பர்களுக்குக் கொடுக்க முயற்சிக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)