Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரண்டு சாட்சிகள் யார்...ஸ்ஸ்ஸ் & விஸ்க் ???


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இரண்டு சாட்சிகள் யார்...ஸ்ஸ்ஸ் & விஸ்க் ???
Permalink  
 


வேதாகம இரண்டு சாட்சிகளுக்காக மில்லியன் டாலர் வீடு ரெடி

வெளிப்படுத்தின விசேசம் 11-ம் அதிகாரத்தில் வரும் இரண்டு சாட்சிகளை பற்றி நாம் முன்பே இங்கு பலமுறை பேசியிருக்கிறோம். உபத்திரவகாலத்தின் ஆரம்ப கட்டமான முதல் மூன்றரை வருட காலங்களில் இவர்கள் இருவரும் தேவ ஊழியத்தை எருசலேமை மையமாக கொண்டு செய்வார்கள். அநேக அற்புத அடையாளங்களை செய்யும் இவர்கள் அந்திகிறிஸ்துவுக்கும் உலகத்துக்கும் சிம்மசொப்பனமாக திகழ்வார்கள். இறுதியில் அவனாலேயே இவர்கள் இருவரும் இரத்தசாட்சியாக கொல்லப்படுவார்கள். தெருவில் இவர்கள் உடல்கள் கிடக்க உலகம் அதைப் பார்த்து கொண்டாடும்.

Jesus%2BMinistries%2BJerusalem%2Bhome.jpg

                   இப்போது அந்த இரண்டு சாட்சிகளுக்காக வீடு வாங்கும் / கட்டும் பணியில் நம் ஊர் ஊழியக்காரர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்காக ஆகும் செலவு 1.3 மில்லியன் டாலர்கள் எனவும் அதில் ஏற்கனவே 900,000 டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டது என்ற மகிழ்சியான செய்தியையும் ஏஞ்சல் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்து தான் அந்த இரண்டு இரத்த சாட்சிகளும் வெற்றிகரமாக இயங்குவார்களாம். வானலோக சேனைகள் இங்கே தான் முகாமிட்டு பரத்துக்கு ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார்கள் என்கிறது அந்த செய்தி குறிப்பு.”This will be their Command Center to coordinate their worldwide prophetic ministry. This House will also function as a gateway to the heavenly realm, a supernatural portal not opened to mortals but used by heavenly beings who will be ascending and descending through it with scrolls from the Council of the Prophets in heaven.” இன்னும் 400,000 டாலர்கள் தேவையிருக்க நாமும் நம் பணங்களை இந்த வீடு வாங்க கொடுத்து அதன் மூலம் கடவுளின் சுதந்திரவாளியாக மாற இது ஒரு அபூர்வமான வாய்ப்பு என்கிறது ஏஞ்சல் டிவி.

                 இந்த இரண்டு இரத்த சாட்சிகளும் குழந்தைகளாக பிறந்து வளர்ந்து இயேசு நாதரைப் போலவே வேதத்தை கற்று ஞானத்திலும் புத்தியிலும் தேவ கிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகம் அதிகமாக விருத்தியாகி வளர்ந்து வந்தால் அவர்களே அவர்கள் தேவைகளை தேவனிடமிருந்து கேட்டு பெற்றுக்கொள்வார்களாக இருக்கலாம். அதன் மூலமாக வெளிப்படுத்தின விசேச தேவ வாக்கியங்கள் நிறைவேறும். ஒருவேளை வானத்திலிருந்து திடீரென இளைஞர்களாகவே இவர்கள் குதித்து வந்தால் இந்த வீடு கண்டிப்பாக தேவைப்படும். ஆனால் துரதிஷ்ட வசமாக இந்த வீடு பற்றிய செய்தி நமது பைபிளில் இல்லை. ஒரு வேளை தள்ளுபடியாகமங்களில் இருக்கலாம் அல்லது இது ”அவர்கள் தேவனின்“ ஒரு திடீர் திட்டமாக இருக்கலாம்.

               இயேசு கிறிஸ்துவானவர் பூமிக்கு வருமுன் வழியை ஆயத்தம் பண்ண வந்த தீர்க்கதரிசியான யோவான் ஸ்நாபகனும் இதே அட்டகாசமான பணியை செய்திருந்தால் மாட்டுக்கொட்டிலில் இயேசு பிறந்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பிறகும் இயங்கும் ஒரே கிறிஸ்தவ டிவி சேனல் ஏஞ்சல் டிவியாக இருப்பதால் இவர்கள் இருவரின் உடல்கள் தெருவில் கிடக்கும் போது அதை உலகமெல்லாம் ஒளிபரப்ப வசதியாக ஏஞ்சல் டிவியானது எருசலேமில் சேட்டலைட் வசதிகளை கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகிறது. ”இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள் இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோம்: தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்” அப்போஸ்தலர் 5:38,39

ஏஞ்சல் டிவியின் House Of The Prophets(Two Witnesses),Jerusalem திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.jesusministries.org/Newsletter%202012%20English%20(web).pdf

மத்தேயு 24:4 ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

 

நன்றி:

இரட்சிப்பின் வழி



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard