வறுமையான சூழல். இதன் காரணமாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எப்போதும் ஓயாத பூசல். பிள்ளைகளின் தவிப்பைக் காணமாட்டாத தாயின் உள்ளம் இயலாமையினால் துடிக்கும். அப்பா காலையில் வெளியே செல்லவே மணி பத்து ஆகும். அதன்பிறகு மெதுவாக அம்மா தெரிந்தவர்கள் வீட்டுக்குச் சென்று எதையாவது சேகரித்து வருவார்கள். ஆனால் அது அப்பாவுக்கு (பிடிக்காது...) தெரியக்கூடாது என்ற டென்ஷன். காரணம் அப்பா அந்த காலத்து ஆள் அல்லவா,அவரைப் பொறுத்தவரை பெண்கள் வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது.
இந்நிலையில் அம்மா தயக்கத்துடன் வெளியே செல்லும் சமயம் பிள்ளைகளான நாங்கள் அம்மா எங்கே போறீங்க என்று கேட்டாலும் சரி எப்போ வருவீங்க என்று கேட்டாலும் சரி அம்மாவுக்கு பயங்கர கோபம் வரும். ஏனெனில் போகும்போது எங்கே போறீங்க என்று கேட்டால் போகும் காரியம் ஆகாதாம். எப்போ வருவீங்க என்று கேட்டாலும் எரிச்சலாக சொல்லுவார்கள், ”ஏன் அதுக்குள்ள ஏதாகிலும் சேட்டை பண்ணணுமா, சாகவா போறேன்,வந்துருவேன்”, என்பார்கள்.
எங்களுக்கோ அம்மா எங்கே போறாங்க என்று தெரிந்தால் எவ்வளவு நேரத்திலே வருவாங்க’ன்னு தெரிஞ்சுக்கலாம், எப்போ வருவாங்க’ன்னு தெரிந்தாலாகிலும் எங்கே போறாங்க’ன்னு யூகிச்சுக்கலாம். இரண்டையுமே சொல்லாமல் அம்மா போவது ஏக்கமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கும்.
(நாளைக்கு எங்கே போறீங்க...என்று மனைவி கேட்டபோது இத்தனை கதையும் சொல்லி முடித்தேன். முன்பதாக எங்கே போறீங்க என்று கேட்டவளிடம் எங்கே போகணும் என்று கேட்டேன். “ இல்லே போன வாரம் போனீங்களே’ன்னு கேட்டேன் “, என்று தயக்கத்துடன் சொன்னவளிடம் ”அதுக்காக வாராவாரம் போகணுமா” என்றும் கேட்டேன். பிறகே இந்த அனுபவத்தைக் கூறி அவளை சமாதானப்படுத்தினேன்.)
நம்முடைய ஆண்டவரிடமும் அவருடைய சீடர்கள் எங்கே போறீங்க என்றும் எப்போ வருவீங்க என்று கேட்டார்களே,அது தான் அதிசயம்...
எங்கே போகிறீர்...
யோவான் 13:36 சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.
எப்போது வருவீர்...
மத்தேயு 24:36அந்தநாளையும்அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)