இந்த செய்தியை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து பகிருமாறு அன்போடு வேண்டுகிறேன். ஏனெனில் காணாமற்போன நபர் ஒருவேளை மும்பை பட்டணத்துக்குச் சென்றிருக்கலாம் என்று அவருடைய தாயார் கூறுகிறார்கள். 30 வருடமானாலும் என்ன, தனது மகனை நிச்சயமாக காண்பேன் என்ற நம்பிக்கையுடன் தனது 77 வயதிலும் காத்திருக்கும் அவருடைய தாயார் பத்மாஸினி அவர்களுடைய உள்ளம் மகிழுவதாக.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
படத்தில் காணப்படும் நபரின் பெயர் N.G.குமார். இவர் கடந்த 1981-ல் காணாமற் போனபிறகு அவரைக் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர் காணாமற் போனபோது அவருக்கு சுமார் 19 வயது இருக்கலாம்.பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் தனது தாய்க்கு மிக தாமதமாகப் பிறந்த காரணத்தால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார். இவரை தன் வாழ்நாளில் எப்படியாவது சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் இவரது தாயார் தனது 77 வயதிலும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். தாயார் பெயர் பத்மாஸினி. திரு.குமார் அவர்களுக்கு ஒரு தம்பியும் தங்கையும் உண்டு. அவரது தகப்பனார் திரு.கணேச அய்யர் கடந்த 1982-ல் காலமாகிவிட்டார். அவர் இரயில்வே துறையில் அரக்கோணம் பகுதியிலிருந்து பணிபுரிந்தார்.
திரு.குமார் அவர்களைக் குறித்த தகவல் அறிந்த நண்பர்கள் தயவுசெய்து உடனே தொடர்புகொள்ளுமாறு அன்போடு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் இந்த செய்தியை அவரவர் வட்டாரத்தில் கடத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நன்றி.
திரு,குமார் அவர்கள் எங்கிருந்தாலும் உடனே தனது தாயாரைத் தொடர்புகொள்ளவும் தனது தாயாரின் உள்ளத்தை சந்தோஷப்படுத்தவும் நாம் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுதல் செய்வோமாக.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)