அண்மைய ஜாமக்காரன் இதழில் டாக்குட்டர் புஸ்பராஜ் அவர்கள்,
///வேதத்தில் பழைய ஏற்பாட்டில் குறிப்பாக உன்னத பாட்டு புத்தகத்தில் வாசிக்காத ஆபாசமா?இவைகளை நாம் படிப்பதில்லை? தியானிப்பதில்லை? ஆபாசம் என்று தள்ளிவிடுகிறதில்லையே! ///
என்பதாக எழுதியிருந்தார்;அதுகுறித்து நாம் ஒரு ஒப்பீட்டு கட்டுரையை,”அரவாணிகள் மீது ஜாமக்காரன் கொலவெறி தாக்குதல்..!” என்ற தலைப்பில் அமைத்திருந்தோம்.இந்நிலையில் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் நம்முடைய தளத்தின் நண்பர் திரு.சந்தோஷ் அவர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அதில் நாம் பதித்த கருத்துக்களைக் களமாகக் கொண்டு நாம் விவாதிப்போம்.
உன்னதப்பாட்டில் ஆபாசம் உண்டா? உண்டு என்று இஸ்லாமிய சகோதரர்கள் சொல்ல, இல்லை என்று சான் அமைப்பினரும், கிருஸ்துவர்களும் அவர்களோடு விவாதம் செய்திருக்கும் நிலையில், ஜாமக்காரன் புஸ்பராஜ் அவர்கள் உன்னதப்பாட்டில் ஆபாசம் உண்டு என சொல்லியிருக்கிறார். இவர் சொன்னது சரியா? என்பது குறித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்.
உன்னதப்பாட்டில் நிச்சயமாக ஆ....பாசம் இருக்கிறது. ஏனெனில் அது உன்னதப்பாட்டு அல்லவா ? ஆனால் அதில் மாம்ச இச்சையைத் தூண்டும் ஆபாசம் இல்லவே இல்லை..!
2SANDOSH Wrote on 19-04-2012 22:42:04:
சகோதரர் சில்சாம் அவர்களே, ஆபாசம் உண்டு என்று சொன்ன ஜாமக்காரன் கண்டிக்கத்தக்கவரா? என்பதும் என் இன்னொரு கேள்வி. இஸ்லாமிய அமைப்புகள் சொல்வது தவறு என விவாதித்தவர்கள் இவரை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது ஏன்? இது கிருஸ்துவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதை தெள்ள தெளிவாக காட்டுகிறதே.
கிறிஸ்தவர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இருப்பதாக யார் உங்களிடம் சொன்னது ? ஜாமக்காரன் கண்டனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று யார் சொன்னது ? இஸ்லாமியர் எழுப்பும் கேள்விகளுக்குரிய பதிலை நம்முடைய சகோதரர்கள் கொடுத்து வருகின்றனர். இப்போதைக்கு இது போதும். நாம் பதிலளிக்காவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிவிடாது. ஏனெனில் பரிசுத்த வேதாகமத்தைக் குறைகூறியவன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. நீங்கள் வீணாக சிண்டு முடிவதுபோலவும் எகத்தாளம் பண்ணுவது போலவும் கருத்து வெளியிடாமல் இருந்தாலே போதும். நீங்கள் யார் பக்கம் என்றும் எந்த விசுவாசத்தை பின்பற்றுகிறீர்கள் என்றும் தெரிவித்தால் நலமாக இருக்கும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)