Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம் சரியா ?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம் சரியா ?
Permalink  
 


sjchristopher wrote:

”என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்...” (ஏசாயா 58:13)

இதன் படி பார்த்தால் நாம் அந்த ஓய்வுநாளில் நமக்கு இஷ்டமான காரியங்கள் எதுவும் செய்ய கூடாது. (கறி சாப்பாடு கூட நமது இஷ்டமே).

ஆனால் அதில் சொல்லப்பட்ட பிரகாரம்

"கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்..." கண்டிப்பாக மகிமையாக எண்ணிக்கொள்ள வேண்டும்.

இது ஒரு நாள் என்று சொல்வதால், வெறுமனே ஆலயத்திற்கு போய் வரும் 2-4 மணி நேரம் மட்டுமே என்று எண்ணி கொள்ள கூடாது.

"மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்"- மத்தேயு 12:8

இதிலிருந்து அவர் எல்லா நாட்களுக்குமே ஆண்டவராக இருக்கிறார் என்று சொல்லி இருபது தெரிகிறது. அதனால் எல்லா நாட்களிலும் அவரை நினைத்து அதனை கர்த்தர் கொடுத்த நாள் என்று மகிமையாய் எண்ணி அவரை போற்றினால் போதும்.

நான் எந்த நாட்களில் முகூர்த்தம் வெய்தாலும் கண்டிப்பாக கலந்து கொள்வேன். ஆராதனையும் முக்கியம். எனவே காலை முடியவில்லை என்றால் மாலை ஆராதனையாவது கலந்துகொள்வேன்.

தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? - 1யோவான் 4:20

ஏதேனும் கருத்து பிழை இருந்ததால் மன்னிக்கவும்.


 நண்பரே,

கருத்து பிழையோ பிழையான கருத்தோ எதுவாக இருந்தாலும் உங்களைப் போன்ற நண்பர்கள் வெளிப்படையாக தத்தமது கருத்துக்களைப் பகிர்வதே ஆரோக்கியமான விஷயம் தான். ஆனாலும் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்தில் ஒரு தெளிவு கிடைக்காதது போலிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை அல்லது வாரத்தின் முதலாம் நாள் என்பது பழைய ஏற்பாட்டின் பிரமாணமான ஓய்வுநாள் அல்ல என்பதை முதலில் மனதில் தீர்மானித்துக்கொள்ளுங்கள். அடுத்தது ஒரு வாரத்தின் ஏழு நாளை உங்களுக்காகக் கொடுத்த ஆண்டவருக்காக ஒரு நாளை உங்களால் முழுவதுமாக செலவிட முடிகிறதா என்று பாருங்கள்.அந்த நாளில் சொந்த அலுவல்களைப் பார்ப்பது வேதத்தின்படி அதாவ்து நியாயப்பிரமாணத்தின்படியும் சுயாதீனப் பிரமாணத்தின்படியும் சரியாக இருக்குமா என்றும் பாருங்கள்.

ஏனெனில் உங்களுடைய கருத்தின்படி ஒரு நண்பன் அல்லது சகோதரனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதும் அவரை நேசித்து இறைவனை சந்தோஷப்படுத்துவதும் சரியே. ஆனாலும் அது முழுவதுமே ஆண்டவருக்கு ஏற்புடையதாக இருக்குமா என்பதே யோசிக்க வேண்டும். நண்பனோடு கடற்கரைக்கு செல்லுவது தவறல்ல, ஆனால் அங்கு சென்று என்ன செய்கிறோம் என்பதே. நண்பனோடு சினிமாவுக்கு செல்லுவது அதிலும் ஞாயிற்றுக்கிழமையன்று செல்லுவது சரியா ?

இப்படியே திருமணத்தின்போது இறைவனுடைய பிரசன்னத்திலேயே நாம் நிற்கிறோம் என்பதால் அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சிலர் வாதிடலாம். ஆனால் முன்னோர்கள் வகுத்த நெறியின்படியும் நம்முடைய விசுவாசத்தின்படியும் மனசாட்சி பிரமாணத்தின்படியும் அது சரியாக இருக்குமா என்று யோசியுங்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதை- அது அரசாங்கமே கொடுத்துள்ள ஓய்வுநாள் என்பதால் அந்த நாளை தியாகத்துடன் தேவகாரியங்களில் மட்டுமே செலவிடவும் குடும்பத்துடன் ஓய்வெடுக்கவும் மட்டுமே பயன்படுத்தினால் என்ன என்பதே நம்முடைய கேள்வி.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

”என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்...” (ஏசாயா 58:13)

இதன் படி பார்த்தால் நாம் அந்த ஓய்வுநாளில் நமக்கு இஷ்டமான காரியங்கள் எதுவும் செய்ய கூடாது. (கறி சாப்பாடு கூட நமது இஷ்டமே).

ஆனால் அதில் சொல்லப்பட்ட பிரகாரம்

"கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்..." கண்டிப்பாக மகிமையாக எண்ணிக்கொள்ள வேண்டும்.

இது ஒரு நாள் என்று சொல்வதால், வெறுமனே ஆலயத்திற்கு போய் வரும் 2-4 மணி நேரம் மட்டுமே என்று எண்ணி கொள்ள கூடாது.

"மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்"- மத்தேயு 12:8

இதிலிருந்து அவர் எல்லா நாட்களுக்குமே ஆண்டவராக இருக்கிறார் என்று சொல்லி இருபது தெரிகிறது. அதனால் எல்லா நாட்களிலும் அவரை நினைத்து அதனை கர்த்தர் கொடுத்த நாள் என்று மகிமையாய் எண்ணி அவரை போற்றினால் போதும்.

நான் எந்த நாட்களில் முகூர்த்தம் வெய்தாலும் கண்டிப்பாக கலந்து கொள்வேன். ஆராதனையும் முக்கியம். எனவே காலை முடியவில்லை என்றால் மாலை ஆராதனையாவது கலந்துகொள்வேன்.

தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? - 1யோவான் 4:20

ஏதேனும் கருத்து பிழை இருந்ததால் மன்னிக்கவும்.

 



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Sathish Sathishkumar ///  saturday and sunday which day is the rest day or 7th day or holy day ??????????????? ///

சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை இதில் எந்த நாள் ஓய்வுநாள் அல்லது ஏழாவது நாள் அல்லது பரிசுத்த நாள் என்று நண்பர் கேட்டிருக்கிறார். ஆவிக்குரிய கிறிஸ்தவனுக்கு ஆண்டவருக்குள் எல்லா நாளும் பரிசுத்தமானதே.ஏனெனில் வேதம் சொல்லுகிறது,

  • எபிரெயர் 4:9 ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது.


நாம் இஸ்ரவேலராக இருந்தால் இயல்பாகவே நமக்குரிய (சனிக்கிழமை ?) ஓய்வுநாள் கிடைத்துவிடும். ஆனால் நாம் வேற்று அரசாங்கத்தின் கீழிருக்கும் காரணத்தினால் அரசாங்கம் எந்தநாளை விடுமுறை தினமாக அறிவிக்கிறதோ அந்த நாளை ஆண்டவருக்காக செலவிடுகிறோம். எனவே நான் ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணமாக ஆண்டவர் நம்முடைய நோக்கத்துக்கும் செயலுக்கும் உரிய பங்கையும் பலனையும் தருகிறார். இது ஒரு குறிப்பிட்ட நாள் தொடர்பான பிரச்சினை அல்ல,நாம் கர்த்தருக்காக ஒரு நாளை விசேஷித்துக்கொள்ளுகிறோமா என்பதே. சனிக்கிழமை சிறப்பான நாள் எனில் அது உலகின் இன்னொரு பாகத்தில் வெள்ளிக்கிழமையாகவும் மற்றொரு பாகத்தில் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும்.ஆண்டவர் ஒரு நாளுக்காக நம்மை படைக்கவில்லை.நமக்காகவே நாட்களைப் படைத்திருக்கிறார் என்றறிக.

https://www.facebook.com/yauwanaj/posts/195567127227266?notif_t=feed_comment



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

திருச்சபையார் உணர்வடைந்து தங்கள் சபையின் மதில்களைக் குறித்து அக்கறை கொள்ளவேண்டியே தேவனால் அக்கிரமங்கள் அனுமதிக்கப்படுகிறது. இல்லாவிட்டால் அனனியா சப்பீராள் கதையாக அன்றாடம் கொத்துகொத்தாக சவ அடக்கங்களே நடக்கும்.

கடவுள் கிருபையாக நாம் உணர்வடையும் சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறார்.எனவே நம்முடைய வேல்யூஸ் என்னவென்று ஆராய்ந்து அதிலிருந்தே சீர்திருத்தத்தை துவக்கவேண்டும் என்கிறேன்.

கர்த்தருடைய நாள் / அவருடைய நாமம் / அவருடைய மகிமை தங்கும் ஆலயம்...ஆகியவையே ஒரு விசுவாசியானவன் அவரிடமாகத் திரும்ப அடையவேண்டிய முக்கிய கட்டங்கள் என்று அண்மையில் தியானித்தேன்.

https://www.facebook.com/questions/195224490594863/



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இந்த திரியினை இதுவரை 20 நண்பர்கள் பார்வையிட்டிருக்கின்றனர்;ஆனால் ஓட்டளித்திருப்பதோ வெறும் 3 பேர் மாத்திரமே... ஓட்டளிக்க சுணங்குவது இதிலுமா..? biggrin



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Devamanohar Michael · Answered தவறு

முகூர்த்த நாள் பார்த்து, நேரம் பார்த்து நடத்தப்படும் திருமணங்களுக்கு முடிந்தவரை தவிர்துவிடுகிறேன். குறிப்பாக அப்படி நாள் பார்த்து நடத்தும் ஊழியகரர்கர்கள் திருமணத்திற்கு அல்லது வீடு பிரிதிஷ்டைக்கு செல்வது இல்லை. மேலும் அதே நாளில் இந்து நண்பர்களின் வீட்டு வைபவங்கள் இருந்தால் அங்கே போய்விடுவேன். போகாமல் இருந்த கிருஸ்துவ திருமணங்களுக்கு ஜெபிப்பேன். நாள் பார்க்காமல் நடத்தப்படும் திருமணத்திற்கு முடிந்தவரை திருமண ஆராதனையில் பங்குகொள்வேன். வெகு நாட்களாக நான் கடைபிடிக்கும் முறை. பள்ளியில் என் சக ஊழியர்களுக்கும் இது தெரியும்.

Yauwana Janam
கேள்விக்கு பதிலளிக்காமல் தேவைக்கும் அதிகமாக பதிலளித்தால் கொஞ்சம் மார்க் கூட போடுவீங்களா சார்..???

கேள்வி: ஆராதனை நாளான ஞாயிறு அன்று திருமணம் நடத்துவது சரியா என்பதே. (திருமணம் உட்பட கிரஹப்ரவேசம் ஆகிய சுபநிகழ்ச்சிகளையும் மனதிற் கொள்ளவும். விதிவிலக்கு: அரசாங்க தேர்வுகள்.)
Immanuel Isaac /// ஞாயிற்றுக்கிழமை கர்த்தரை ஆராதிக்கும் நாள் என்று எப்படி சொல்கிறிர்கள் ///

சரியான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்,நண்பரே... பாராட்டுக்க்கள். உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறதே, யோசித்தீர்களா ?

ஞாயிற்றுக்கிழமை ஏன் ஆராதனை நாள் அல்ல என்று சொல்லுங்களேன். நமக்காக ஏழு நாளைக் கொடுத்த ஆண்டவருக்காக ஒரு நாளை ஆசரிக்கக்கூடாதா, அவ்வாறு ஆசரிக்கிறோமா ?

6:1 என்று வாழ்க்கையை யோசித்தால் தேவனுடைய அன்பு தான் வெளிப்படும்.கற்பனையின் பொருளும் அன்பே. வேறுவிதமாகவும் யோசிப்போம்,நம்முடைய நெருங்கிய நண்பரின் திருமண நாள் அன்று சொந்த வேலையாக எங்காவது செல்லுவோமா ? தேவனும் கூட எனவே நம்முடைய நோக்கங்களுக்கும் செயலுக்குமுரிய பலன்களைக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறார்.

  • சங்கீதம் 137:6 நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
  • சங்கீதம் 137:5 எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.

பரிசுத்தவான்கள் எத்தனை கடினமான பொருத்தனைகளுக்குள் தங்களை உட்படுத்திக்கொள்ளுகிறார்கள் பாருங்கள்.

Yauwana Janam @ Bruce Ropson /// அது அவரவர்களின் விசுவவாசத்தின் அளவை பொறுத்தது என்பது என்னுடைய கருத்து. தேவ நாம மகிமைகென்று செய்யப்பட்டால் எதுவும் பாவம் அல்ல. ஆனால் தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை, மகிமையை கொடாமல் எதை செய்தாலும் அது பாவமே. ///
 
அப்படியானால் ,
  • ”என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்...” (ஏசாயா 58:13)
எனும் வசனம் காலாவதியாகிவிட்டதா நண்பரே..? சரி ஒரு உபகேள்வி,பெரும்பாலான நாடுகளில் வாரத்துக்கு இரண்டு விடுமுறை நாட்கள் இருக்கிறதே, அது ஏன் ? ஓய்வுநாளில் யாராவது ஆடுகுழியில் விழுந்தால் தூக்கிவிடக்கூடாதா என்று ஆண்டவர் கேட்டதை வைத்து தமாஷ் பண்ணிடாதீங்க... ஆடுகுழியில் விழுந்தால் தூக்கிவிடலாமே தவிர ஒரு அப்பாவி ஆட்டை ஓய்வுநாளில் குழியில் தள்ளலாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.. :) jus kiddng

Yauwana Janam @ Bruce Ropson
 /// அன்பு அண்ணன் அவர்களுக்கு, எனக்கும் ஏசாயா 58:13 இன் படி மற்று கருத்து இல்லை, நான் மறுபடியும் பிறந்த புதிதில் தேவன் என்னோடு பேசிய வார்த்தைகளில் இதுவும் ஒன்று (நான் கைகொள்ளும்படி). ஆகையால் தான் தேவனுக்கு "மகிமையை கொடாமல் எதை செய்தாலும் அது பாவமே". என்று எழுதினேன். மற்றும் நம் தேசம் பல தேசேங்கள் தவிர அனேக தேசங்களில் நம் வழக்கத்தின்படி ஞாயிறு ஓய்வுநாள் அல்ல, ஓவ்வொரு தேசத்திலும் ஓவ்வொரு நாள் இருக்கிறது, எனவே நாள் என்பது முக்கியம் அல்ல. எல்லா நேரமும் நாம் நம் தேவனை பற்றிய சிந்தனை நம்முள் இர்ருக்கிறதா என்பதை சோதித்து பார்ப்பது தான் முக்கியம், அதேபோல் சபை கூடிவருதல் நாள் என்பதை நாம் விடாதிருக்க வேண்டும். சபைக்கு போகும்போது பக்திமானை நடந்துகொண்டு பின்பு வேறுவிதமாய் வாழ்வதினால் கிறிஸ்தவ ஜீவியத்தின் அர்த்தமில்லை, (நான் அப்படிபட்டவனாய் இருந்தவன், துரோகியான என்னை மீட்ட என் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்) நான் விவாதம் செய்ய விரும்பவில்லை அண்ணன். இவைகள் என்னுடைய கருத்துகளே, தேவன் ஓவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் சந்திக்கிறார், எல்லாருடைய விசுவாசமும் ஒரே போல் இருப்பதில்லை, ஆக எல்லாம் தேவனுடைய கரத்தில் இருக்கிறது.///

சமதளத்திலிருந்து அருமையானதொரு பதிலை எழுதியிருக்கிறீர்கள்,நண்பரே. ஆனாலும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அதாவது நம்முடைய உரிமைகளுக்கு தடையில்லா சூழலில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் இரண்டு பங்கான தேசங்களில் ஞாயிறு என்பது விடுமுறை தினமாக இருக்க,அது ஏன் விடுமுறை தினமாக இருக்கிறது எனும் சரித்திரப்பூர்வமான ஆதாரமும் நம்மிடம் இருக்க அந்த நாளின் விசேஷித்த தன்மையை அசட்டை பண்ணிவிட்டு சொந்த அலுவல்களைப் பார்ப்பதில் கிறிஸ்துவினால் நாம் பெற்றிருக்ககூடிய சுயாதீனத்தை பயன்படுத்தலாமா என்பதே எனது கேள்வி.இதனை விவாதம் என்று எடுத்துக்கொள்ளாமல் சிந்தனைக்காகவே எடுத்துக்கொள்ளுங்கள். இளைஞர்களே இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ஒரு தலைமுறையே நிர்விசாரத்தை நோக்கி போய்விடுமே ???

நாம் சில விளையாட்டுகளில் பார்த்திருக்கிறோம்,க்ரேஸ் சான்ஸ்” என்பதாக.அதாவது ஒரு தவறு செய்துவிட்டால் அதனை புதுப்பித்துக்கொள்ள மூன்று வாய்ப்புகளை கருணையாக தருவார்கள்.கிருபை என்பது இவ்வாறு க்விஸ் மற்றும் விளையாட்டுகளில் கூட மிக ஜாக்கிரதையாகப் பயன்படுகிறது.ஆனால் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலோ கிருபையை மிக சாதாரணமாக எண்ணிவிட்டோமோ என்று யோசிக்கிறேன். ஆண்டவர் நம்முடைய சிறுசிறு தவறுகளைப் பொருட்படுத்துவதில்லை என்பது கிருபை தானே தவிர தவ்று செய்வதற்கான அனுமதி அல்லவே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் விடுமுறை தினத்தை காரணம் காட்டி கர்த்தருடைய நாளில் - அதாவது கர்த்தரை ஆராதிக்கும் நாளில் - அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்துகிறார்களே, இது சரியா ? அது சரியல்லவெனில் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளுவதும் விருந்துண்பதும் சரியா ?

இந்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பும் நண்பர்கள்,இங்கே தங்கள் கருத்தைப் பதிக்கவும்;ஓட்டளிக்க விரும்புவோர் தொடுப்பைத் தொடரவும்.

https://www.facebook.com/questions/195224490594863/



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard