(கேலிச்சித்திரத்தில் பாராளுமன்றத்தை ஆமையுடன் ஒப்பிட்டு அதனை அம்பேத்கர் ஓட்ட முயற்சிப்பது போலவும் அவருக்கு நேருஜி உதவிசெய்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.)
சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில் அம்பேத்காரின் கேலிச்சித்திரம் இடம்பெற்றதற்காக வருந்துகிறேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்திலிருந்து அம்பேத்கர் கேலிச்சித்திரத்தை மாற்ற என்.சி.இ.ஆர்.டி.யிற்கு உத்தரவிட்டுள்ளதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் 11-ம் வகுப்புக்கான பொலிட்டிக்கல் சைன்ஸ் பாடப்பிரிவில் அம்பேத்கர் பற்றிய கேலிச்சித்திரம் இடம் பெற்றுள்ளது. இது பல இடங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அமளி ஏற்பட்டது. இந்த சித்திரத்தை வரைந்தவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் பதிலளித்ததாவது:
சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில் அம்பேத்காரின் கேலிச்சித்திரம் இடம்பெற்றதற்காக வருந்துகிறேன். இந்த பாடப்புத்தகங்கள் 2006-ம் ஆண்டே தயாரித்து பதிப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது நான் அமைச்சர் பதவியில் இல்லை. எனினும் இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரம் குறித்து ஏப்ரல் மாதமே எனது கவனத்துக்கு வந்தது. இதுகுறித்து என்.சி.இ.ஆர்.டி. அமைப்பிடம் பதிலளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
மனிதவளத்துறையினால் அமைக்கப்பட்ட கமிட்டியால் பாடப்புத்தகங்களில் வரும் ஆட்சேபத்திற்குரிய விஷயங்களை ஆய்வு செய்து வருகிறது. இதுபோன்ற விஷயங்கள் பாடப்புத்தகங்களில் இருந்து அடுத்த வருடம் நீக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இத்தகைய ஆட்சேபத்துக்குரிய விவகாரங்கள் வராமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.
இன்று சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் 122-வது பிறந்தநாளாம். அரசாங்கம் அதனைக் கொண்டாடுகிறதோ இல்லையோ பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்கள் தன்னார்வத்துடன் அதனை பேனர் அமைத்து கொண்டாடுகிறார்கள். யாரும் அவர்களுக்கு கட்டளையிடவுமில்லை. யாரும் அவர்களைத் தடுக்கவும் முடியாது. வடதேசத்தில் எங்கோ பிறந்த அவரை தமிழ் சமுதாயம் தூக்கிவைத்து கொண்டாட ஒரே காரணம் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடியவர் என்பதே.
அதேபோல யார் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர போராடுகிறார்களோ அவர்களைக் கொண்டாட நம்முடைய மக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆனாலும் இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சுயநலத்துடன் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள சில பொய்யர்களும் புல்லர்களும் கூட எழும்பியிருக்கிறார்கள்.
அம்பேத்கர் எப்படி யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டாடக்கூடிய பொதுவான தலைவராக இருக்கிறாரோ அதே போல இயேசு பெருமானையும் அவரவர் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். அம்பேத்கரோ அவருடைய குடும்பத்தாரோ யாரையும் தடுக்காதது போலவே இயேசுவானவரும் தம்மைக் கொண்டாடுவோர் யாரையும் தடுக்கிறதில்லை.
இதே போல சென்னையில் வைத்து ஒவ்வொரு மாதமும் அமாவாசை இரவில் இயேசுவின் பெயரால் ஒரு கூத்து நடக்கிறது. அவர்கள் யாரிடமும் கட்டளை பெறவுமில்லை, கட்டளையிடப்படவுமில்லை. ஆனாலும் முழுமையான அதிகாரம் பெற்றவர்களைப் போல இயேசுவின் பெயரால் எதையோ செய்து ’இதுவே கிறிஸ்தவம்’ என்பது போன்ற மாயைதனை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கிறிஸ்துவின் சுபாவம் எதுவும் இல்லை என்பது மற்ற ஊழியர்களின் அனுபவமாகும். பால் தினக்ரன் போன்ற பிரபல ஊழியர்களை மிரட்டி பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத காரியங்களையும் கிறிஸ்தவ ஊழியர்கள் என்ற போர்வையில் இதுபோன்ற சுயாதீன ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் நம்முடைய ஆண்டவருடைய பெயரைச் சொல்லி பிழைப்பதால் இவர்களும் நம்மில் ஒருவர் போல கருதப்படுகிறார்கள். எனவே இவர்களுக்காக நாம் பாரத்துடன் ஜெபிக்கவேண்டும்.
நமக்கு என்ன தேவை, திரள்கூட்ட மக்கள் சத்தியத்தை கேட்கவேண்டும், இரட்சிப்படையவேண்டும் என்பது தானே, அப்படியானால் இதையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது என்றும் சிலர் சொல்லலாம். ஆனால் பிரச்சினை அதுவல்ல, தவறான முறையில் சத்தியத்தைக் கேட்பதைவிட அதை அவர்கள் கேட்காமலே இருக்கலாம் என்பதே நம்முடைய அபிப்ராயம்.
இதோ அண்மையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பு.
இதில் கிறிஸ்தவத்துக்கும் பைபிள் போதிக்கும் அடிப்படை சத்தியத்துக்கும் அப்பாற்பட்ட விதத்தில் நடைபெறும் காரியங்கள் ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கிறது. அதில் ஒரு பாடல் பின்னணியில் ஒலிக்க கூடியிருக்கும் ஜனங்கள் குதித்து கூத்தாடும் காட்சிகள் இடம்பெறுகிறது. இவர்களை ஆட்டிவைக்கும் ஆவி எது, பிசாசின் ஆவியா, கர்த்தருடைய ஆவியா எனும் குழப்பம்... மேடைக்கு அழைக்கப்படும் சில சகோதரிகள் வலுக்கட்டாயமாகப் பிடித்து தள்ளப்படுகிறார்கள். காட்டுக் கத்தல் கத்தி பிசாசை விரட்டுகிறார், காரியத்தை முன்னின்று நடத்தும் திரு.மோகன் தாஸ். அவருக்கு உதவியாக அருகில் நிற்கும் இன்னொருவர் பரியாசத்துடன் சிரித்துக்கொண்டே ஒரு சகோதரியின் கழுத்தைப் பிடித்து முன்னும் பின்னும் தள்ளுவதைப் பார்க்கிறோம். அவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் வேடிக்கையான நிகழ்ச்சி போலும். ஏழை எளிய மக்களுக்கோ விடுதலையே நோக்கம்.தொடர்ந்து திரு.மோகன் தாஸ் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் செய்தி (?) இன்னும் கொடுமை. ஒரு வசனத்தையெடுத்து அதை வியாக்கியானம் செய்து கிறிஸ்துவானவரை மக்களுக்குக் கொடுக்காமல் தங்களையே விற்கிறார்கள். இடையிடையே தவளைக்கொப்பான சத்தம் வேறு..! இந்த காரியங்களைப் பார்க்கும்போது ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது...
சங்கீதம் 14:4 அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
இதுபோன்ற ஊழியங்களை பரிசுத்தாவியானவருடைய தெளிவான நடத்துத்தலின்படி முழுவதுமாக நிராகரிக்கிறோம். இவை முழுவதுமே பேகனிக் மெத்தட் ஆஃப் மினிஸ்டிரி அல்லது வொர்ஷிப் (Paganic method of ministry or worship) எனலாம். (பழங்குடி இனத்தவரின் ஆராதனை முறை...) அதாவது நம்முடைய இந்து பாரம்பரியத்தில் பெரிய தெய்வங்கள் சிறிய தெய்வங்கள் என்று இரு வகை உண்டு. உதாரணம் திருப்பதியும் மேல்மருத்துவத்தூரும். பெரிய தெய்வ வழிபாடு பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெறும். சிறிய தெய்வ வழிபாடோ கடா வெட்டுவதில் துவங்கி போதை(பே)யாட்டத்துடனும் கூத்துடனும் முழுக்க முழுக்க வெறித்தனமாகவும் ஆக்ரோஷத்துடனும் பார்ப்போரை அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும்.
ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம் என்ற பெயரில் பக்கவழியாகப் புறப்பட்ட இந்த கள்ள ஊழியர்களும் அவ்வாறே சர்வ வல்லவரை சிறிய தெய்வங்களில் ஒன்றைப் போலத் தாழ்த்தி அவருடைய பெயரைச் சொல்லி உணர்ச்சியைத் தூண்டுவது போன்ற ஆர்ப்பாட்ட இசை இரைச்சலுடன் கூச்சலிட்டு எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய பெண்களைக் காட்சிப் பொருளாக்கி கிறிஸ்துவின் மகிமையைக் கேலிகூத்தாக்குகிறார்கள்.
இந்த வரிசையில் ஏற்கனவே நாம் வெளிப்படுத்தியவர்கள் ஒரு சிறு உதாரணம் மாத்திரமே. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நமக்கு சமயம் வாய்க்குமானால் அதுபோன்ற நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் நேரடி நிகழ்ச்சியாகப் பதிவுசெய்து இணையத்தில் பகிரவும் ஆயத்தமாக இருக்கிறோம். இதுபோன்ற தவறான ஊழியத்துக்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவையும் குவியும் பணமூட்டையையும் பேர்புக்ழையும் பார்த்து இச்சைகொண்ட சில நல்ல ஊழியர்களும் சுயலாபத்துக்காக சத்தியத்தை விற்கிறார்கள்.ஆனால் வேதம் சொல்லுவது என்ன,
நீதிமொழிகள் 23:23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
வேதம் சொல்லுவதை செய்வார்களா என்ன, நம்மீதே கோபங் கொள்ளுவார்கள். எப்படி அம்பேத்கரை இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லையோ அதேபோல இயேசுவையும் மாற்றிவிட்டார்கள். மேலும் சமுதாயத்தில் அங்கீகாரம் பெறவும் முன்னேறவும் பிழைப்பை நடத்தவும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக முயற்சிக்கிறான். சிலர் நடிகர்களுக்கு ரசிகர் அமைக்கிறார்கள். என்ன இலாபம் ? (அந்த காலத்தில்... ) நடிகர் தன் பெயரில் பேனர் கட்டவும் தியேட்டரில் கோஷம் போடவும் ஏதாவது பணம் கொடுப்பார். பணம் கொடுப்பவரை வள்ளல் எனப் புகழுவார்கள். பணம் கொடுக்காதவனை கஞ்ச மகா பிரபு என்று இகழுவார்கள். (உதாரணம்: எம்ஜிஆர்,ரஜினிகாந்த் ஆகியோர் வள்ளல்களாகவும் சிவாஜி, கமல் ஆகியோர் கஞ்ச மகா பிரபுக்களாகவும்... ) இன்னும் தியேட்டர்காரனை மிரட்டி ரசிகர் மன்ற கோட்டாவில் டிக்கெட் வாங்கி ப்ளாக்’கில் விற்று பணம் பார்ப்பார்கள். இன்னும் சில தியேட்டர்களில் ரசிகர் மன்றத்துக்காகவே தனி ஷோ நடக்கும்.
இப்படியே அரசியல் கட்சிகள், பல்வேறு சமுதாய இயக்கங்கள், கலை பண்பாட்டு இயக்கங்கள், மனித உரிமைகள் இயக்கங்கள் என்று இந்த குழுக்களின் எல்லை கணக்கில்லாமல் விரிந்துகொண்டே போகிறது. அவர்களுக்கு தேவை லெட்டர் பேடு, அவ்வப்போது வைக்கப்படும் பேனரில் போட்டோவுடன் பெயர். அப்படிப்பட்ட இயக்கங்களில் ஒன்றாகவே இன்றைக்கு சுயாதீன சபைகளும் பெருகியிருக்கிறது என்கிறோம். ஒருபக்கம் சபையின் எல்லைகள் விரிவடைவது குறித்து சந்தோஷப்பட்டாலும் அது ஆரோக்கியமாக இருக்கிறதா சத்தியத்தின்படி நடைபெறுகிறதா என்று யோசிக்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது.
தங்கள் கேடுபாடான வாழ்க்கை முறையை ஒழித்துவிட்டு (பலரும் குடிகாரர்களாகவும் கஞ்சா விற்பவர்களாகவும் கொலைகாரர்களாகவும் திருடர்களாகவும் இருந்தவர்களாம்.. அதையே தங்கள் பிரபலத்துக்கான அடையாளமாகவும் எடுத்துக்கூற இவர்கள் தயங்குவதில்லை..! ஏதாவது பிரச்சினை வ்ந்தால் தங்கள் பழைய வாழ்க்கையைச் சொல்லி மிரட்டுவார்கள்..) கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஊழியம் செய்யும் தன்னார்வ ஊழியர்களுக்காக ஆண்டவருக்கு நன்றிசெலுத்தும் அதே நேரத்தில் தாங்கள் மேற்கொள்ளும் சத்தியத்துக்குப் புறம்பான வழிமுறைகளைக் குறித்து நீங்கள் பரிசீலித்து ஆண்டவருக்கு அஞ்சி சத்தியத்தை சத்தியமாக எடுத்துச்சொல்லி தரமுள்ள கிறிஸ்தவம் வேர்கொள்ள உதவிசெய்யவேண்டுமாய் வேண்டுகிறோம். கர்த்தர் எதை செய்தாலும் உங்கள் மூலமாகவே செய்யவேண்டும். நீங்கள் அவரிடமாகத் திரும்பி அவருடைய வழிகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நீங்கள் செய்யவேண்டிய பணியை யார் செய்வார்? ஒருவேளை நீங்கள் திரும்பாமலே போனால் ஒரு கூட்டம் மக்களை கர்த்தருடைய மந்தையில் சேர்க்காமல் திருடிக்கொண்டு போன மாபாவத்துக்கு ஆளாவீர்களே... யோசிப்பீர்களா,ஐயாமாரே..???
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)