”பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். (எபிரெயர்.1:1,2)
ஆண்டவர் தமது காலங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார். அந்தந்த காலத்துக்குரிய கிரியைகளை தமது தாசர்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் செய்து வந்தார். ஆனால் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்குப் பிறகு ஒரு புதிய சூழல் உருவானது.இந்த காலம் குமாரனின் காலம் எனப்படுகிறது.இது ஒரு யுகத்தின் முடிவு போலவும் மற்றொரு யுகத்தின் ஆரம்பம் போலவும் இருந்து சிருஷ்டிப்பின் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதை உணராத சிலர் அதாவது இந்த யுகத்தைப் பற்றிய அறிவில்லாதோர் இந்த காலத்தைக் குறித்த விதம்விதமான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் கொடுத்துக் கொண்டிருப்பதுடன் சத்தியத்துக்காக ஏக்கங் கொண்ட மக்களையும் குழப்பி சிதைத்து சீரழித்துவருகின்றனர்.
உதாரணமாக மேற்காணும் வேத வசனத்தின்படி தீர்க்கத்தரிசிகளின் யுகம் முடிந்துவிட்டது. ஆனாலும் தற்காலத்தில் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் சிலர் தீர்க்கதரிசிகள் என்றும் சாதுக்கள் என்றும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்யும் சக்தி படைத்தவர்களாகத் தங்களைத் தாங்களே அறிவித்துக்கொண்டு கிறிஸ்துவை நோக்கி மக்களை நடத்தாமல் தங்களை மையப்படுத்தி தங்களையே உபதேசித்து விளம்பரப்படுத்தி தேவ தூஷணம் செய்துவருகிறார்கள்.
குமாரனின் காலம் என்பது என்ன ?
ஆர்வமுள்ளோரின் பதி(வை)லைப் பொறுத்து...
(தொடரும்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)