நம் பொது மொழிபெயர்ப்பில் சில நூல்கள் விடுபட்டுள்ளன.இவைகள் சேர்க்கபடாததற்கு அனேக காரணங்கள்/கதைகள் சொல்லபடுகின்றன..
இவைகளை போல சேர்க்கபடாத ஒரு முக்கியமான புத்தகம் தான் ஏனோக்கின் புத்தகம்.இது நமது தற்போதய வேதாகமங்களில் இல்லை (கத்தோலிக்க வேதாகமத்தில் கூட இல்லை!!) .
The Book of Enoch tr. by R.H. Charles என google இல் தேடி தகவிறக்கம் செய்து படியுங்கள்.
இப்புத்தகத்தில் நம் வேதத்தில் இல்லாத தேவபுத்திரர் உருவான விதங்களும்,ஆதி தூதர்களின் விழுகைக்கு முன்னான காரியங்களும், பிரதான தூதர்களை பற்றிய காரியங்களும்,ஏனோக்கின் தீர்க்க தரிசனங்களும் உள்ளன!!
14. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
15. தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்
நமது வேதாகமத்தில் ஏனோக்கு எந்த இடத்தில் இப்படி சொல்லி இருக்கிறார்?
நான் தள்ளுபடி ஆகமத்தில் இருக்கும் என்றே எண்ணி இருந்தேன். ஆனால் சென்ற வாரம் ஆலயத்திற்கு வந்திருந்த ஒரு தீர்கதரிசி நமது வேதாகமத்தில் இது இருக்கிறது என்று சொல்லிவிட்டு எங்களை கண்டு பிடிக்க சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்..
தெரிந்தவர்கள் உங்கள் பதில்களை தரலாம்........
__________________
கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்