Peter Samuel S /// எனக்குத் தெரிந்த சபைகளில் இவர்களைப்பற்றி எச்சரிக்க கூறியுள்ளேன். ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் இவர்களைக் குறித்து கிறிஸ்தவர்களை எச்சரிப்பது பலரை வஞ்சக வலையிலிருந்து தப்புவிக்கும்... எச்சரிப்பது, மிஷனரி ஊழியம் செய்வதைப்போல அத்தனை பலனுள்ளது...! //
Peter Samuel S //Bro. Peter Samuel: If you can contact all the Churches, and ask them to make an official announcement from pulpit? //
/// என்னால் இயன்றவரை முயல்கிறேன் சகோதரரே... இந்த பதிவை காண்கிற அனைத்து சபை மூப்பர்களும், பொறுப்பில் உள்ளவர்களும் இதை தங்கள் மிக முக்கிய ஆத்தும ஆதாயப்பணியாக கருதி அதை செய்ய கேட்டுக்கொள்கிறேன்....! ///
Peter Samuel S /// GP, IE, எனக்கு எரிச்சல் மூட்டுவதையே நோக்கமாகக் கொண்டு ஏதாவது comment எழுதவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். தங்களை block செய்ய எனக்கு அதிக நேரம் செல்லாது என்பதை தாங்கள் அறியவும். விவாதிக்க விரும்பினால் தன்மான உணர்வுகளை தூண்டாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தவும். ///
Peter Samuel S /// சுவிசேஷம் அறிவித்து ஒருவரை ஆண்டவருக்குள் வழிநடத்துவது போல, தவறான போதனைகளில் ஒருவர் விழுந்துவிடாமல் எச்சரிப்பதும் ஆண்டவருக்குள் வந்த ஒருவரை திரும்ப விலகவிடாமல் பாதுகாப்பதும் மிக மிக முக்கியமான ஊழியம்...///
மேற்காணும் வரிகளில் நண்பர் பீட்டர் சாமுவேல் அவர்கள் பல்வேறு இடங்களில் அடியேனுடைய உணர்வுகளை வரிக்கு வரி பிரதிபலிப்பதும் எனது எழுத்துக்களே மறுபதிப்பு செய்யப்பட்டது போல எழுதியிருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இது வதனநூலில் பதிக்கப்பட்டு நண்பர்களின் பேராதரவு பெற்ற கட்டுரையாகும். இதனைப் பகிர்ந்துகொண்ட நண்பர் பீட்டர் சாமுவேல் அவர்கள் பல்வேறு இடங்களில் அடியேனுடைய உணர்வுகளை வரிக்கு வரி பிரதிபலிப்பதும் மறுபதிப்பு செய்யப்பட்டது போலவும் எழுதியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்னருமை நண்பர் Peter Samuel S அவர்கள் இந்த நாளின் விஐபி-யாகி இருப்பதில் பெருமகிழ்ச்சி.மிக அண்மையில் தமிழ் கிறிஸ்தவ இணைய வட்டாரத்தில் ஒரு கட்டுரைக்கு இத்தனை பெரிய ஆதரவு கிட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. நண்பரின் இயல்பானதும் எளிமையானதுமான கட்டுரையை 13 பேர் பகிர்ந்திருப்பதும் 35 பேர் லைக் பண்ணியிருப்பதும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. இதேபோல ஓரிருவர் எழும்பினாலும் போதும், அது ஆயிரக்கணக்கானோரை சந்திக்கும் இயக்கமாக மாறும் என்பது நிச்சயம். அடியேனின் கடந்த மூன்று வருட போராட்டத்துக்கு பலன் கிட்டும் என்ற நம்பிக்கை பெருகுகிறது.
நண்பருக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப்...!!!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
18/03/012 ஞாயிற்றுக்கிழமை சர்ச் முடிந்து வெளிவரும்போது, சர்ச் வாசலில் ஒருவர் தன் கையில் வைத்து நோட்டீஸ் வினியோகித்துக்கொண்டிருந்தார். வாகனத்தில் வரும் அவசரத்தில் நீட்டப்பட்ட ஒன்றை கையில் வாங்கிவிட்டு அவசரமாக வீடு வந்துவிட்டேன். நோட்டீஸை வாசித்துப்பார்த்தேன்,மார்த்தாண்டம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஹாலில் ஒவ்வொரு ஞாயிறும் குறிப்பிட்ட நேரத்தில் இலவச வேதாகம வகுப்புகள் நடக்க இருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வேத பாடங்கள் என்ற தலைப்பில் (நரகம், தேவன் தீமையை அனுமதிப்பது ஏன், ஸ்திரீயின் வித்து, திரித்துவம், தசமபாகம், காணிக்கை போன்ற) சுமார் 50 விதமான பாடங்கள் பார்த்ததும் பதைபதைத்து திரும்ப ஓடிச்சென்று அவரை தேடினேன். நான்கு பேராக இரு பைக்கில் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று நீங்கள் எதை போதிக்கப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு மிகவும் மரியாதையாக வந்து கேட்கச் சொன்னார்கள். அப்படி என்னதான் கூறப்போகிறீர்கள், பொதுவான கிறிஸ்தவ விசுவாசத்திற்கு விரோதமாக ஏதாவது கூறப்போகிறீர்களா என கேட்டதற்கு, இது மனுஷரால் உண்டானதானால் அழிந்துபோகும், தேவனால் உண்டானதானால் இதை தடுக்க உங்களால் முடியாது என கூறினார்கள். அவர்களுக்கு 2000 வருடமாக எங்கள் நம்பிக்கையை அழிக்க யாராலும் முடியவில்லை என்பதிலிருந்தே எங்கள் விசுவாசம் தேவனால் உண்டானதென்று விளங்குகிறது இதில் இன்று நீங்கள் கொண்டுவரும் நூதங்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்திவிடப்போகிறது என மட்டுமே என்னால் கேட்க முடிந்தது.
இவர்கள் கடந்த இரு வாரங்களாக ஒவ்வொரு கிறிஸ்தவ சபைகளின் வாசல்களில் நின்று நோட்டீஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். வேறு எங்கும் நோட்டீஸ் வினியோகித்ததை பார்க்க முடியவில்லை. காரணம் சபைகளுக்கு செல்கிற கிறிஸ்தவர்கள் மட்டுமே இவர்கள் இலக்கு.
இவர்கள் கொள்கை என்னவென்றால், எந்த மனிதரும் நரகம் செல்லப்போவதில்லை, எல்லோருக்கும் மீட்பு உண்டு, அது ஹிட்லர் ஆனாலும் சரி, யூதாஸ் ஆனாலும் சரி, சாத்தானுக்கு மட்டுமே அழிவு (அதுவும் நரக ஆக்கினை என்பது நித்தியமானது அல்ல என்பது), இயேசுவின் ஈடுபலி (ஈடுபலி..???) எல்லோரையும் அழிவிலிருந்து விடுவிக்கும் (விசுவாசிப்போரையும், விசுவாசிக்காதோரையும்), உலகில் உள்ள கிறிஸ்தவ சபைகள் மாத்திரம் பாபிலோனிய வேசி சபை, சரீர மரணமே இறுதியானது, ஆத்துமா என்பது இல்லை, (ஆனால் உயிர்தெழுதல் மட்டும் உண்டு: ஆத்துமா இல்லாமல் எப்படி உயிர்த்தெழுதலோ) இயேசு மிகாவேல் தூதனின் அவதாரம், அதனால் இயேசுவை தெய்வமாக ஆராதிக்கக்கூடாது இப்படி சில கொள்கைகள்.
சரி, இவர்கள் சொல்வதுபடி பார்த்தால் எல்லோரும் இரட்சிக்கப்படுவர்களே, உலகில் உள்ள துன்மார்கர் அனைவரும் இரட்சிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறபோது, கிறிஸ்தவ சபைகளுக்கு செல்பவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமே. எந்த வேதமும் வாசிக்காவிட்டாலும், ஜெபிக்காவிட்டாலும், ஆண்டவரை மறுதலித்தாலும், மற்றும் என்னதான் செய்தாலும் மரித்தபின் இரட்சிப்பு உறுதியாகிவிடுகிறதே, பின் எதற்காக இவர்கள் மட்டும் வேத ஆராய்ச்சி செய்கிறார்கள், மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். இலவசமாய் கற்றுக்கொடுக்க இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது...?? எதற்காக இவர்கள் தங்கள் நேரத்தை செலவு செய்யவேண்டும், எதற்காக ஒவ்வொரு சபை வாசலாக அலையவேண்டும், எதுவுமே தேவையில்லையே...!
இவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு செல்பவர்களை மாத்திரம் குறிவைத்து பிடிக்க முயல்வதின் நோக்கம் என்ன...? ஆண்டவருக்கு பயந்து சபைகளுக்கு செல்பவர்களை, நரக ஆக்கினைக்கு பயந்து ஒழுங்காக வாழ முயல்பவர்களை அந்த தெய்வ பயத்திலிருந்து விலகவைப்பதனால் இவர்களுக்கு இலாபம் என்ன...?
இவர்கள் கொள்கைப்படி எப்படி வாழ்ந்தாலும் தண்டனையில்லையே, அப்படியானால் கிறிஸ்தவர்கள் அவர்கள் இருக்கிற பிரகாரம் இருந்துவிட்டு போகட்டுமே, இவர்களுக்கு என்ன வந்தது...? இவர்கள் கொள்கைகள் சரியாக இருந்தாலும் எந்த பாதிப்பும் இல்லையே...!!
ஒருவேளை இவர்கள் சொல்வது தவறாக இருந்து முடிவில் நரகம், ஆக்கினை என்பதெல்லாம் உண்மையாகவே இருந்துவிட்டால் என்ன செய்வது, இவர்கள், பயத்துடன் கர்த்தரை சேவிக்கச் சென்றவர்களையும் வழிதவறவைத்து அவர்களையும் இவர்களோடு நரக ஆக்கினைக்கல்லவா பங்காளிகளாக்குகிறார்கள்...! எப்படியாயினும் இவர்கள் செய்வது சரியல்ல...! இவர்களை இனம் கண்டு ஒவ்வொரு கிறிஸ்தவரும் இவர்களிடமிருந்து விலகியிருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.