Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாமுவேலின் ஆவி உண்மையாகவே பேசியதா ?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: சாமுவேலின் ஆவி உண்மையாகவே பேசியதா ?
Permalink  
 


தங்கள் புரிதலுக்கு நன்றி, சகோதரா.. கர்த்தர் நல்லவர். smile



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

கிறிஸ்துவுக்குள் பிரியமான நண்பர்களே,

 

பின்வரும் வசனத்தை படியுங்கள்...

I சாமுவேல் 15:35 சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலைராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.

முதலில் மறித்தது சாமுவேலா அல்லது சவுலா ? நமக்கு தெரியும் சாமுவேல் என்று...

ஏதோ சவுல் முன்பு மரணமடைந்து பின் சாமுவேல் மரித்த நடையில் மேற்கண்ட வசனம் இருப்பதன் காரியம் தான் இத்திரிக்கு பதில் என கடந்த மாதத்தில் தான் கர்த்தர் என் கண்திறந்து புரியவைத்தார்.

சாமுவேல் முன்பே மரித்திருந்தாலும், சவுல் பின்பு மரிப்பவனானாலும் கூட சாமுவேல் எவ்வழியிலும் (குறிசொல்லும் இப்பெண்ணையும் சேர்த்து ) சவுலை சந்திக்கவில்லை.. 

ஆகவே,நான் சில ஆண்டுகளுக்கு முன் பதிந்த முழுமையற்ற கருத்துக்களை இந்த வசனபுரிதலைக்கொண்டு இப்போது முற்றிலும் மறுக்கிறேன் (ஆம்.அது தான் சரியானது!!). 

சாமுவேல் மரித்தபின் சவுலை சந்திக்கவில்லை!! சவுலின் ஆவி பேசவில்லை என்பது திண்ணம். 

தேவனுக்கு மகிமை உண்டாகுக !!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இது வதனநூல் தளத்தில் பதிக்கப்பட்டுள்ள கருத்து...

Benny Cephas Balaji /// Samuel avi enpadu unmai illai. Andha saguna kari thanakul samuel vandhadu pole nadaga madinal. Saul ai iraivan kaivitarena unmaye sonnal. Anal saul irakum natkalai tavarai kurithal. Nalaku ennudan irupai enru samuel sonnadaga sonnal. Samuel odu saul serale. Sila natkaluku pinnal than marithan saul. Idu sagunakarini tavarana dirga darisanam.///


//// சாமுவேல் ஆவி என்பது உண்மை இல்லை;அந்த சகுனக்காரி தனக்குள் சாமுவேல் வந்தது போல நாடகமாடினாள்; சவுலை இறைவன் கைவிட்டாரென உண்மையை சொன்னாள். ஆனால் சவுல் இறக்கும் நாட்களைத் தவறாய் குறித்தாள்; நாளைக்கு என்னுடன் இருப்பாய் என்று சாமுவேல் சொன்னதாக சொன்னாள்; சாமுவேலோடு சவுல் சேரலை; சில நாட்களுக்குப் பின்னால் தான் மரித்தான் சவுல்; இது சகுனக்காரியின் தவறான தீர்க்கதரிசனம் ...////


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

பேசினது சாமுவேல் லின் ஆவி தான் வேதம் தெளிவாக சொல்லுகிறது ... பின் ஏன் சந்தேகம் bro chillsam


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

jesus_my_love wrote:
பேசினது சாமுவேல் லின் ஆவி தான் வேதம் தெளிவாக சொல்லுகிறது ... பின் ஏன் சந்தேகம் bro chillsam

  •  ஏசாயா 34:16 கர்த்தருடைய புஸ்தகத்திலேதேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.
  • I பேதுரு 4:11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்;
  • ரோமர் 12:6 நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.

மேற்காணும் வேத வாக்கியங்களின்படி சாமுவேலின் ஆவி பேசியதற்கு வேத வசனத்தில் ஜோடில்லாத காரணத்தினாலும் தேவ ஆவியைத் தவிர தேவ காரியங்களைக் குறித்து திருவுளம் பற்றும் அதிகாரத்தை தேவன் ஒருவருக்கும் கொடுத்திராத காரணத்தினாலும் சாமுவேலின் ஆவியைப் போல வேறொரு தேவ மனிதனின் ஆவி பூலோகத்திலிருக்கும் ஒருவனுடன் இடைபட்ட நிகழ்ச்சி குறிப்பிடப்படாத காரணத்தினாலும் சவுலோடு பேசியது சாமுவேலின் ஆவி அல்ல என்று தீர்மானிக்கிறோம்.இதற்கு மேலும் விதண்டாவாதத்துக்காகவேனும் கழுதையின் மூலம் பேசிய தேவ ஆவியானவர் குறிசொல்லும் ஆவியையுடைய பெண்ணின்மூலம் பேசமாட்டாரா என்று வழக்காடுவார்களானால் அவர்களோடு போராட நாம் தயாராக இல்லை. ஒரு ஊழியரை நாம் தனிப்பட்ட முறையில் நாம் நேசிப்பதற்கும் அவருடைய உபதேசத்தை ஏற்றுக்கொள்ளுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டு.


  • மத்தேயு 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
  • I யோவான் 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

இங்கே பகிரப்பட்டிருக்கும் காணொளியில் சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் சொல்லுவதுபோல பரலோகத்தில் நாக்கு இருக்கும் விரல் இருக்கும் சொந்தக்காரனைக் குறித்த் நினைவு இருக்கும் என்றால் பரலோகத்திலும் உறவு நிலைகள் தொடரும் என்றாகிறது. அப்படியானால் போய் சேர்ந்தாலாவது நிம்மதியாக இருப்பேன் என்று புலம்பலோடு பல ஆத்துமாக்களின் எதிர்பார்ப்பில் மண்விழும்போலிருக்கிறது. ஆனால் ஆண்டவர் என்ன சொன்னார்,

  • ”உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள். “ (மத்தேயு.19:30)
  • II கொரிந்தியர் 5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

ஒரு கொள்கையை அல்லது உபதேசத்தை நிறுவும்போது அது வேத வசனத்தின் அடிப்படையிலும் வேதத்தின் இன்னொரு வசனத்தை மீறாமலும் இருக்கவேண்டும் என்பது பொதுவான விதியாகும். சகோதரர்கள் யோசிப்பார்களாக.

 

  • ”அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.” (லேவியராகமம் . 20:27)

இவ்வாறு கட்டளைகொடுத்த தேவனே குறிசொல்லும் ஆவியையுடைய பெண்ணின் கட்டுப்பாட்டுக்கு தமது தாசனின் ஆவியை அனுப்பித்தருவாரா, அல்லது அவள் மூலம் பேசவைப்பாரா, அல்லது மரித்த ஒருவனின் ஆவி அவன் பரிசுத்தவானே ஆனாலும் பேசுமா என்றெல்லாம் யோசிக்கவேண்டும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

அருமை நண்பர்.சில்சாம் அவர்களே!!

நான் நாம் விவாதிக்கும் சாமுவேலின் காரியத்தை எனக்குள் திருஸ்டாந்தபடுத்தி கொண்ட பிறகு என்னை போன்ற அதே புரிதலை கொண்ட ஆரோக்கிய உபதேசத்தை உடைய ஊழியர்.அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் vedio-வையும் காண நேர்ந்தது..
பாருங்கள்!!

நண்பரே,

கர்த்தர் தேவ ஜனங்களுக்கு தெளிவாய்,நேரடியாய் தெரிவித்துள்ள காரியத்தை
நாம் மனுஷீகமாய்; ஆரோக்கிய உபதேசதிற்காக விட்டுவிடலாம் என்பது சரியல்ல..
இம்மாதிரியான முடிவு வேதத்தின் ஆழங்களின் நம்மை செல்லவிடாமல் நியாய தீர்ப்பின்
போதுவெட்கத்தை உடுத்துவிக்கும்.தாங்கள் அறியாதது அல்ல இது..

அனேக தேவமனிதர்களும்,வேத பண்டிதர்களும் கூட நான் கூறுகிற காரியத்தை முன்வைக்கிறார்கள்.பகிர இயலும். ஆனால் நான் வேதத்தின் மூலமாகவே காரியத்தை உணர்ந்துகொண்டேன்..

நான் கூறியதை தேவ ஊழியர்.அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களும் முன்வைக்கிறார். அவர் ஆரோக்கிய உபதேசத்தில் நிலைநிற்கவில்லை என நாம் அபத்தமாய் கூறிவிட இயலுமா.

மத்தேயு 5:37 உள்ளதை உள்ளதென்றும்,
இல்லதைஇல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
என வேதமும் கூறுகிறதே..

வேதத்தில் இருப்பதை எந்த உலக ஆதாயதிற்குமல்லாது, இருப்பதை இருப்பதாக உரைப்பது தேவனுக்கு மகிமை உண்டாக்கும்.

அந்த அடிப்படையின்  இந்த காரியத்தை குறித்த என்னுடைய எழுத்துகளும் நம் தேவனுக்கு மகிமையை உண்டாக்கி இருக்கிறன என்பதை நான் மேலும் தெளிவுபடுத்த அவசியமில்லை என எண்ணுகிறேன்..

1 சாமுவேல்- 28 :15. சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.

சாமுவேலுடன் பேசியதாக தான் உள்ளதே தவிர,அசுத்த ஆவி பேசினதாக இல்லை! வசனம் "என்றான்" என முடிகிறது  பாருங்கள்.

1 சாமுவேல்- 28 :17. கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.

மேற்கண்டவசனத்தை சாமுவேல் அல்லாமல் அசுத்தாவி பேசியதாக காண்பித்து எப்படி ஆரோக்கிய உபதேசத்தை காப்பாற்றிவிடமுடியும்.

chilsam//சாமுவேல் போன்ற பரிசுத்தவான்களைக் குறித்து இதுபோல கருத்துகூறி காணாதவைகளில் துணிகரமாக நுழையும் பயங்கரத்துக்காகவா பரி.ஆவியைப் பெற்றிருக்கிறோம் ..???//

பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் வேதத்தை அவர் துணையுடன் ஆராய்கிறவர்கள்..சவுலுடன் பேசியது சாமுவேல் என்று வேதத்தில் இருக்க.அசுத்த ஆவி சாமுவேல் போல் மிமிக்ரி செய்தது,ஏமாற்றியது என இல்லாதவைகளை வேதத்திற்கு மீறி யோசிப்பதே  வேதத்திற்கு மாறான எந்த தவறான புரிதலும், நீங்கள் குறிப்பிட்ட காணதவைகளில் துணிகரமாய் நுழையும் துணிகரமும் ஆகும். பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் வேதத்தை அவர் துணையுடன் ஆராய்கிறவர்கள்.

GLORY TO GOD!!!

---------------------------------------------------------------------------------

எபிரெயர் 2:14,15 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,  ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

JOHN12 wrote:

சகோதரரே.. தாங்கள் இணைத்துள்ள லின்க்கை சொடுக்கும்  பொது  "THIS VEDIO HAS BEEN REMOVED BY THE USER"  என வருகிறது.. 


ஆம் நண்ப்ர் ஜாண்12 அவர்களே,

விகடன் இணையம் அதனை நீக்கியிருக்கிறது.அவர்கள் பொதுவில் வைக்காத காணொளியை நாம் பகிர இயலாது.அது காப்பிரைட் சட்டச் சிக்கல் சம்பந்தமானதாகும்.

JOHN12 wrote:

வேதத்தில் சாமுவேல் சவுலோடு பேசியதாக சொல்லியிருக்க., இதில் சாதிக்க,வாதிக்க ஒன்றும் ஒன்றுமில்லை.. ஆனாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான புரிதல் இல்லை இன்றாலும் வேதம் ஒன்றே.. 


 நண்ப்ர் ஜாண்12 அவர்களே, அது பொய்யின் ஆவி என்பதே பெரும்பாலான வேத அறிஞர்களின் கருத்தாகும். மரித்த ஆவிகளுடன் தொடர்புகொள்ளமுடியும் என்பது பழங்குடி இனததவரின் மூடநம்பிக்கையாகும்.அதை வேதம் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. அவ்வாறு சாமுவேலின் ஆவியை வரவழைத்து விசாரிக்க ஆவிகளின் பிதாவாகிய தேவன் விசேஷித்த அனுமதியை குறிசொல்லும் ஆவியையுடைய ஒரு பெண்ணுக்கு கொடுக்கிறார் என்று நாம் ஏற்றுக்கொள்ளுவோமானால் அதனால் பல்வேறு உபதேசக் குழப்பங்கள் உண்டாகும். முழு வேதத்திலும் இந்த ஒரு சம்பவம் மற்ற பொதுவான விசுவாசத்துக்கு மாறாக தனித்து இருக்கிறது. மேலும் வேதப் பிரமாணத்தின்படி ஜோடில்லாததாகவும் இருக்கிறது.எனவே குறிசொல்லும் ஆவியையுடைய பெண்ணுக்குக் கட்டுப்பட்டு பரிசுத்தவானாகிய சாமுவேல் எழுந்து வந்தார் என்பது உண்மைக்கு மாறானது என்பதே சத்தியமாகும்.அதற்கு மேல் இதனால் நாம் பக்திவிருத்தியடைய ஏதுவானது ஒன்றும் இல்லை.

JOHN12 wrote:

இயேசு பரலோகம் மற்றும் பாதாளத்தின் திறவுகோலை எடுத்தபின் பிசாசுகளை கொண்டு எந்த ஒரு ஆளையும் பாதாளத்தில் இருந்து கலைத்து பேசுவது ஆகாதா காரியம் என்று நான் முன்பு எழுதியதையும் சகோ.சில்சாம் கவனத்தில் கொள்வாராக..

தேவனாகிய கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!! 


 நண்ப்ர் ஜாண்12 அவர்களே, கொஞ்சம் கவனமாக எழுதுங்கள்.இயேசுவானவர் ஒருபோதும் பரலோக ராஜ்யத்தின் (அ) பாதாளத்தின் திறவுகோல்களை எடுத்துக்கொள்ள்வில்லை. அவர் அவற்றை ஏற்கனவே உடையவரான சர்வ வல்லவர் அல்லவா ?

வசனத்தை மீண்டும் கவனியுங்கள்....

  • மத்தேயு 16:19 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

    வெளி 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்

மேற்காணும் இரு வசனத்திலும் இயேசுவானவர் திறவுகோல்களையுடையவராகவே காண்ப்படுகிறார். இல்லாமலிருந்தால் தானே பெற்றுக்கொள்ளுவதற்கு. தன்னிடமிருப்பதைத் தானே ஒருவர் இன்னொருவருக்குக் கொடுக்கமுடியும் ? எனவே தம்முடைய நம்பிக்கைக்குரிய தம் பிள்ளைகளுக்கு அவர் பேதுருவின் மூலமாக வாக்குபண்ணுகிறார். ப்ரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களைத் தருவேன்,என்பதாக. ஆனாலும் அவர் ஒருபோதும் ஒருவருக்கும் மரணத்துக்கான திறவுகோல்களையோ பாதாளத்துக்கான திறவுகோல்களையோ கொடுப்பதாகவோ அல்லது அதை தாம் உடையவராக இராதிருந்து பெற்றுக்கொள்ள முய்ற்சித்து பெற்றுக்கொண்டதாகவோ சொல்லவில்லை. மேலும் திறவுகோல்கள் என்று பன்மையில் சொல்லப்பட்டிருப்பதும் கவனத்துக்குரியது.

JOHN12 wrote:

தேவனாகிய கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!! 


எப்படி நண்பரே, எப்படி ??? இதனால் தேவனாகிய கர்த்தருக்கு என்னவிதமான மகிமை உண்டாகும் என்று நினைக்கிறீர்கள் ? சர்வ வல்லவர் தம்மிடத்தில் சேர்த்துக்கொண்ட பரிசுத்தவான்களின் ஆவியை ஒரு குறிசொல்லும் ஆவியையுடைய பெண்ணின் கோரிக்கையை ஏற்று அனுப்புகிறார் என்பதில் என்னவிதமான மகிமையுண்டாகும்..??? சாமுவேல் போன்ற பரிசுத்தவான்களைக் குறித்து இதுபோல கருத்துகூறி காணாதவைகளில் துணிகரமாக நுழையும் பயங்கரத்துக்காகவா பரி.ஆவியைப் பெற்றிருக்கிறோம் ..???



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

எங்க ஆளு அந்த காலத்துலேயே செத்துப்போன சாமுவேலின் ஆவியோடு பேசியதாமே..? கிறிஸ்தவர்களே... சாமுவேலின் ஆவியோடு ஒரு குறிசொல்லும் பெண் பேசியது உண்மையே என்று சாதிப்போர் இந்த காணொளியை கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

சகோதரரே..

தாங்கள் இணைத்துள்ள லின்க்கை சொடுக்கும்  "THIS VEDIO HAS BEEN REMOVED BY THE USER"  பொது என வருகிறது..
 
வேதத்தில் சாமுவேல் சவுலோடு பேசியதாக சொல்லியிருக்க., இதில் சாதிக்க,வாதிக்க ஒன்றும் ஒன்றுமில்லை.. ஆனாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான புரிதல் இல்லை இன்றாலும் வேதம் ஒன்றே..

இயேசு பரலோகம் மற்றும் பாதாளத்தின் திறவுகோலை எடுத்தபின் பிசாசுகளை கொண்டு எந்த ஒரு ஆளையும் பாதாளத்தில் இருந்து கலைத்து பேசுவது ஆகாதா காரியம் என்று நான் முன்பு எழுதியதையும் சகோ.சில்சாம் கவனத்தில் கொள்வாராக..

தேவனாகிய கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!! 



-- Edited by JOHN12 on Saturday 14th of April 2012 04:49:09 PM

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

 சகோதரர்களே,

 

1 சாமுவேல் 28 :12. அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.

 

வேதம் தெளிவாய் சொல்லுகிறது, அப்பெண் சாமுவேலை எழும்பிவர கண்ட மாத்திரத்தில் தான் மாறுவேடமிட்டிருந்த சவுலை அறிந்தாள் என்று!! ஆக அப்பெண்ணின் அடையாளம் அறிகிற அறிவில் குறை இருப்பதாக வேதத்தில் சொல்லப்படவில்லை.. இவ்வசனத்தில் இருந்து அப்பெண் சாமுவேலை கண்டது எவ்வளவு உண்மையோ,மாறுவேடமிட்டிருந்த சவுலை அறிந்து கொண்டதும் அவ்வளவு உண்மையே என்பதை அறிய முடிகிறது.

 

15 -19 முடிய வரும் வசனங்களில் சாமுவேலே சவுலிடம் பேசினதாக இருக்க,சாமுவேலை போன்று அசுத்த ஆவி பேசினதாக நாம் கருதுவது சரியாகாது..



-- Edited by JOHN12 on Tuesday 20th of March 2012 01:29:46 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இது விவாதத்துக்குரிய பொருள் என்பதால் இதனை பொதுவான கட்டுரைகள் பகுதியிலிருந்து விவாதங்கள் பகுதிக்கு மாற்றியிருக்கிறேன்.

<நிர்வாகி>



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 12
Date:
Permalink  
 

இங்கு  குறிப்பிட்ட  கேள்வியாகிய  //சாமுவேலின் ஆவி உண்மையிலேயே அங்க்ஜனம் பார்க்கும் ஸ்திரீ உடன் பேசியதா  ?//  இது உண்மையிலே ஆரம்ப காலத்தில் வேதத்தை வாசிக்கும்போது  எனக்குள் இருந்த ஒரு கேள்விகளில் ஒன்று.........  திர்க்கதரிசி சாமுவேலின் மரணத்துக்குப்பின்  அரசன் சவுல் சாமுவேளோடு தொடர்பு கொண்டான்னென  பைப்லை மேலோட்டமாக வாசிக்கும் போது  காட்டுகிறது அல்லவா ?  உண்மையில் கொஞ்சம் விவரமாகப் பார்த்தல் .......
                      
இந்த விவரம் 1 சாமுவேல்  28 .3 - 20 - இல் காணப்படுகிறது. சவுல்தானே சாமுவேலைக் காணவில்லை,  அந்த ஆவயுலக மத்தியாஸ்தம் செய்பவள் கொடுத்த விவரிப்பில் இருந்து அவள் சாமுவேலைக் கண்டாலென அவன் கருதிக்கொண்டான் என்று 13 -ம் , 14 - ம் வசனங்கள் காட்டுகின்றன.

14. அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்:
அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.


15. சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.

அது  சாமுவேலே என்று  நம்ப விரும்பும் கடும் மனமுறிவுற்ற நிலையில் சவுல் இருந்தான், ஆகவே ஏமாற்றப்பட தன்னை அனுமதித்தான்.   சாமுவேல் மரித்து  அடக்கம் செய்யப்படிருந்தான்னென  3 - ம்  வசனத்தில் சொல்லிருக்கின்றது.  சவுளுடன் தொடர்புகொள்ளக்கூடும்படி சாமுவேலின் எந்தப் பாகமும் மற்றொரு மண்டலத்தில் உயிருடன் இருக்கவில்லையென   முந்தின  வேதப் பதிவுகள் நமக்கு போதுமான ஆதாரமே.....சாமுவேலைப்போல்  பாசாங்கு செய்த அந்தக் குரல் ஒரு வஞ்சக மோசக்காரனே ......நன்றி  (ரோஹான்)



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
Permalink  
 

சாமுவேலின் ஆவி சவுலிடம் பேசினது உண்மையே!!!!


1  சாமுவேல் 28 :19. கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

வேதம் சாமுவேல் சவுலிடம் நாளை நடப்பதை தீர்க்கதரிசனமாக கூறி இருக்க ஐயப்பாடு  தேவை இல்லை..

மரணத்தையும்,பாதாளத்தையும் தம் மகிமையின் உயர்தேளுதளினால் ஜெயம் கொண்ட கிறிஸ்து, அவைகளுக்கான திறவுகோல்களை இப்போது பெற்றிருக்கிறார். தமக்கு சித்தமானவர்களுக்கு பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை கொடுத்ததாக வேதமும் சொல்கிறது.
வெளி 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய  சாவிகளை உடையவராயிருக்கிறேன்.

அவர் பிசாசிடம் இருந்து பாதாளத்தின் திறவுகோல்களை பறித்தார் என என்னால் கூறமுடியும்.
ஏனெனில் மரித்த காவலில்  இருந்த ஆவிகளுக்கு, பூமியில் இதயத்தில் மூன்று நாள் இருக்கும் போது போதித்தார் என பேதுரு கூறுகிறார்.

I பேதுரு 3:19 அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
மேலும் .,
காவலில் வைக்கும் பிசாசின் சுவாபதையும் வேதம் நமக்கு காட்டுகிறது..சிறைபடுத்தினவிடத்தில் தானே அப்போது திறவுகோல்கள் இருக்கும்.
நம் தேவனாகிய இயேசு சிறைப்பட்டவர்களையும்,காவலில் உள்ளவர்களையும் விடுவிக்கிறவர்,தாவீதின் தீர்க்கதரிசனத்தை பாருங்கள்...
வெளி 2:10 இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்..

சங்கீதம் 68:18 தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகியகர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும்பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.

மற்றும்.,

மாற்கு 3:27 பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.
பலவானை முந்திகட்டி,நியாயபிரமானதினால் பலம்பெற்ற பாவத்தினால் பலம் பெற்ற சாத்தானிடம் இருந்து நியாயபிரமாணத்தை பரிபூரணமாய் நிறைவேற்றி ,மகிமையின் உயிர்தேளுதளினால் பாதாளத்தின் திறவுகோலை பறித்தார்..
மத்தேயு 16:19 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
இயேசுவானவர் பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்த பிறகு சில தேவதூதர்கள் பாதாளகுழிக்கான திறவுகோல்களை பெர்ற்றவர்களாக வேதம் காட்டுகிறது..
வெளி 9:1 ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.

வெளி 20:1 ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.
மேற்கண்ட வசனத்தின் படி பார்த்தால் தூதர்கள் சில தூதர்கள் பாதாளத்தின் திறவுகோல்களை பெற்றிருப்பார்கள் என தெளிவாய் தெரிகிறது..
இயேசு நம் பாவத்தை பரிகரித்து திறவுகோலை பிசாசிடமிருந்து பெரும் முன்பு வரை பிசாசிடம் தான் அந்த அதிகாரம் இருந்தது..
அப்போது அவன் மரித்த பரிசுத்தவான்களை பாதாளத்தில் கலைத்து பேசுவது அவனுக்கு லேசாய் இருந்திருக்கும்..
இப்போது திறவுகோல் இயேசுவிடம் இருப்பதால் அஞ்சனதினால் எந்த ஆவியை எழுப்பும் காரியம் பொய்யாய் இருக்கும் என்பது தாழ்மையான கருத்து..
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!
--------------------------------------------------------------------
I நாளாகமம் 16:34 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.


-- Edited by JOHN12 on Saturday 3rd of March 2012 07:37:49 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

sjchristopher wrote:

சாமுவேலின் ஆவி உண்மையிலேயே அங்க்ஜனம் பார்க்கும் ஸ்திரீ உடன் பேசியதா  ?


 NO...



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

1 rhKNty; - 28 : 10-20

சாமுவேலின் ஆவி உண்மையிலேயே அங்க்ஜனம் பார்க்கும் ஸ்திரீ உடன் பேசியதா  ?

// 10.அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப் பண்ண வேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்.

12. அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.

13. ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.

14. அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.

15. சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.

16. அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்?

17. கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.

18. நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றைய தினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.

19. கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

20. அந்தக்ஷணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.

//



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard