பேதுருவுடன் பதினைந்து நாட்கள்............. சவுல் தனது ஊழிய நியமிப்பை இயேசுவிடமிருந்து நேரடியாகப் பெற்றிருந்தார். மனிதருடைய ஒப்புதல் அவருக்கு அவசியமாக இருக்கவில்லை; இதைத்தான் அவர் கலாத்தியரிடம் வலிஉருத்தினார்:
(கலாத்தியர் 1 : 11 ;12 )
மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
இயேசுவின் ஊழியத்தைப்பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை சவுல் புரிந்துகொண்டார் என்பதில் சந்தேகமில்லை. பேதுருவுடன் சவுல் தங்கி இருந்து இயேசுவின் ஊழியதைப்பற்றி தெரிந்து கொள்ள அவருக்குப் போதிய வாய்ப்பை அளித்திருக்கும்.
3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
5. கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
6. அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
7. பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
சவுல், பேதுருவிடமும் யாக்கொபுவிடமும் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளத் துடித்திருப்பார். அதேசமயத்தில், சவுல் கண்ட தரிசனத்தையும் அவருடைய நியமிப்பையும் குறித்து நிறைய விஷயங்களை அவர்களும் கேட்டிருப்பார்கள். ...... (அடுத்த பதிவில் முன்னாள் நண்பர்களிடமிருந்து தப்பியது எப்படி? ; நம் எப்படி ஜாக்கிரதையுடன் இருப்பதற்கு பாடங்கள் .... என்ற தலைப்பில் ஒரு பெரிய தொடரை ஆராய்வோம்)
நன்றி.
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
முன்னாள் நண்பர்களையும் பகைவர்களையும் சந்திக்கிறார்!!!
அப்போஸ்தலன் பவுல் என பிற்பாடு அறியப்பட்டவரே இந்த சவுல். இவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியபின் முதல்முதலாக எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது கொஞ்சம் பயத்தோடுதான் இருந்திருக்க வேண்டும். ஏன்? மூன்று வருடங்களுக்கு முன்பு இவர் எருசலேமை விட்டுச் சென்றிருந்தார். அதுவரை இயேசுவின் சீஷிசர்களை பயமுறுத்திக்கொண்டும் கொலை செய்யத் துடித்துக்கொண்டும் இருந்தார். தமஸ்கு பட்டணத்தில் கிறிஸ்தவர்கள் யாரேனும் கண்ணில்பட்டால், அவர்களைக் கைது செய்யவும் அவர் கட்டளை பெற்றிருந்தார்.
- அப்போ 9 : 1 ,2
"சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்".
கலாத்தியர் 1 : 18
"மூன்று வருஷம் சென்ற பின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன்".
சவுல், கிறிஸ்தவராக மாறியவுடனையே உயிர்த்தெலுப்பப்பட்ட மேசியாவில் தனக்கிருந்த விசுவாசத்தை தையரியமாக அறிவித்தார். அதனால் தமஸ்குவில் இருந்து யூதர்கள் அவரைக் கொலைசெய்ய எண்ணினார்கள்.
அப்போ 9 : 19 -25
பின்பு அவன் போஜனம்பண்ணி பெலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து,
24. அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
25. சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.
அப்படியிருக்க; எருசலேமிலிருந்த தன்னுடைய முன்னாள் யூத நண்பர்கள் தன்னை இருகரம் நீட்டி வரவேற்பார்கள்ளென அவர் எதிர்பார்க்க முடியுமா? அவரைப் பொறுத்தவரை, அங்கிருந்த கிறிஸ்துவின் சிசிசர்களைக் கண்டுபிடிப்பதுதான் முக்கியமான விஷயமாக இருந்தது. ஆனால், அது அவ்வளவு சுலபமாக இருக்கப்போவதில்லை.
சவுல் எருசலேமுக்கு வந்து, சிசருடனையே சேர்ந்து கொள்ளப்பார்த்தார். அவர்கள் அவரை சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவருக்குப் பயந்திருந்தார்கள். அது புரிந்துகொள்ளத்தக்கதே. கிறிஸ்தவர்களை ஈவிரக்கமில்லாமல் துன்புருதுகிறவர் என்றுதான் அதுவரை அவரைப்பற்றி அவர்கள் அறிந்த்திருதார்கள் . தன்னை ஒரு கிறிஸ்தவராக அவர் சொல்லிக்கொண்டது சபைக்குள் தந்திரமாக நுழைவதற்க்கு அவர் போட்ட சூழ்ச்சித் திட்டமாக அவர்களுக்குத் தோன்றி இருக்கலாம். ஆனால், எருசலேமில் இருந்து கிறிஸ்தவர்கள் அவரிடமிருந்து எட்டி ஏற்க்கவே விரும்பினார்கள்.
இருந்தாலும், அவர்களில் ஒருவர் சவுலுக்கு முன்வந்தார். அவர் தான் பர்னபா. கிறிஸ்தவர்களை முன்பு துன்புறுத்தி வந்த சவுலை "அப்போச்தலரிடத்தில்" அவர் அழைத்துச் சென்றதாக பைபல் குறிப்பிடுகிறது. இங்கே 'அப்போஸ்தலர்' எனச் சொல்லப்பட்டிருப்பது பேதுருவையும் கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபையும் குறிப்பதாக தெரிகிறது. கிறிஸ்தவராக சவுல் மாறியதையும் தமஸ்குவில் அவர் பிரசங்கித்ததையும் குறித்து இவர்களிடத்தில் பர்னபா தெரிவித்தார் எனவும் பைபல் குறிப்பிடுகிறது. சவுல்மீது பர்னபாவுக்கு எப்படி நம்பிக்கை பிறந்தது என்பதைப்பற்றி பைபல் குறிப்பிடுவதில்லை. இருவரும் பரிச்சயமானவர்களாக இருந்திருப்பார்களோ? அதனால்தான் சவுலின் நடவடிக்கைகளைக் கவனித்து அவர் உண்மையிலே மாறிவிட்டார் என நற்சான்று கொடுக்க பர்னபா தூண்டப்பட்டிருப்பாரோ? தமஸ்குவில் இருந்து கிறிஸ்தவர்களில் சிலரை பர்னபா அறிந்திருந்ததால் சவுல் மாறியதைக் குறித்து அவர்களிடம் கேட்டுத் தெரிந்திருப்பாரோ? எப்படிஇருந்தாலும் சரி, சவுலைக் குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு பர்னபா முற்றுப்புள்ளி வைத்தார். அதன் விளைவாக, அப்போஸ்தலன் பேதுருவோடு சவுல் 15 நாட்கள் தங்கினார்.
ஆக்கம் ரோஹான் ...:
இதன் மேற்கண்ட தொடர் தொடரும் ...
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.