Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்- 1 பேதுரு. 5 :5


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 12
Date:
ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்- 1 பேதுரு. 5 :5
Permalink  
 


ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.- 1 பேதுரு. 5 :5

தெய்வீகக் கல்வியேப் பெற நாம் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? முக்கியமாய், நாம் சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவர்களாக இருக்கவேண்டும். ''கர்த்தர்  ..... நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்''. எனச் சங்கிதக்காரனான தாவீது எழுதினார்.
(சங்கீதம். 25 :8 ,9 ) இயேசுவும் ஜெபத்தில் இவ்வாறு தெரிவித்தார்: ''பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது''.
(லுக்கா. 10 :21 ) கர்த்தாவின்  ஊழியர்களாகிய நாம், சொந்தத் திறமைனாலும் ஜனத்தினாலும் தான் சத்தியத்தைக் கண்டுபிடித்தோமா? இல்லவே இல்லை!!!  உண்மையில் நம்முடைய சொந்த முயற்சியால் கடவுளைப் பற்றி நாம் அறிந்திருக்கவே முடியாது: இயேசு இவ்வாறு சொன்னார்: ''  என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'': (யோவான் 6 :44 ) 'சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்'. (ஆகா.2 :7 )  கர்த்தர்  தமது மகனிடம் ஈர்த்திருக்கிற ஆட்களில் நீங்களும் ஒருவராக இருப்பதற்கு நன்றி உள்ளவர்களாய் இருகிறிர்கள், அல்லவா?
(எரேமியா. 9:23 ,24 )
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;

மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  ஆக்கம் ரோஹான்



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard