தெய்வீகக் கல்வியேப் பெற நாம் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? முக்கியமாய், நாம் சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவர்களாக இருக்கவேண்டும். ''கர்த்தர் ..... நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்''. எனச் சங்கிதக்காரனான தாவீது எழுதினார். (சங்கீதம். 25 :8 ,9 ) இயேசுவும் ஜெபத்தில் இவ்வாறு தெரிவித்தார்: ''பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது''. (லுக்கா. 10 :21 ) கர்த்தாவின் ஊழியர்களாகிய நாம், சொந்தத் திறமைனாலும் ஜனத்தினாலும் தான் சத்தியத்தைக் கண்டுபிடித்தோமா? இல்லவே இல்லை!!! உண்மையில் நம்முடைய சொந்த முயற்சியால் கடவுளைப் பற்றி நாம் அறிந்திருக்கவே முடியாது: இயேசு இவ்வாறு சொன்னார்: '' என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'': (யோவான் 6 :44 ) 'சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்'. (ஆகா.2 :7 ) கர்த்தர் தமது மகனிடம் ஈர்த்திருக்கிற ஆட்களில் நீங்களும் ஒருவராக இருப்பதற்கு நன்றி உள்ளவர்களாய் இருகிறிர்கள், அல்லவா? (எரேமியா. 9:23 ,24 ) ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆக்கம் ரோஹான்
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.