சகோதரர் வசந்த் எட்வர்ட்:எனது சிறு பிராயத்திலேயே எங்கள் ஊருக்கு கன்வென்ஷனுக்காக வந்தபோது அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நடக்கும் ஊழியங்களை பகிர்ந்துகொண்டது பசுமரத்தாணி போல என் உள்ளத்தில் பதித்துபோனது. அந்த தீவு மக்களுக்காக இவர் கொண்டிருந்த பாரம் மிகவும் அதிகம். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஷைலோ மிஷன் ஊழியத்தின் ஸ்தாபகர். www.shilohmission.com. தோமையர் மலை ரயில் நிலையத்தில் இருந்து பார்த்தாலே அவரது ஆலயம் தெரியும். அவரது சகோதரர் அமெரிக்கா வந்துவிடுமாறு அழைத்தும் அதை நிராகரித்து ஊழியத்துக்கென அர்ப்பணித்து கொண்டவர். சில காலம் சுக வீனமாக இருந்து 21 ம் தேதியன்று நித்திய ராஜ்யம் சென்றடைந்தார். அவரது விருப்பப்படி இன்று அவரது சரீரம் அந்தமான் தீவுகளில் எந்த மக்களுடைய இரட்சிப்புக்காக பாடுபட்டாரோ அதே மக்கள் இருக்கும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் எனது சிறு வயது நினைவுகள் உந்தித்தள்ள நேற்று அவரது ஆலயத்துக்கு சென்றேன். கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது என்பதை உணர முடிந்தது, அவர் வளர்த்த பிள்ளைகள் அப்பா,அப்பா என கலங்கியது உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. ஆண்டவருக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.
அந்தமான் தீவுகளின் அப்போஸ்தலனான ஐயா வசந்த் எட்வர்ட் அவர்கள் இன்று மாலை 4 மணிக்கு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற தகவல் வந்துள்ளது. அன்னாரின் மிஷினரி பணிகளுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். அவருடைய ஊழியத்தைத் தொடர்ந்து நடத்திட கர்த்தர் தாமே அவருடைய பிள்ளைகளுக்கு உதவிசெய்வாராக.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)